Published:Updated:

இன்டீரியர்..! - 3

உங்கள் கனவு இல்லம், இங்கே நனவாகும்!பழைய வீட்டை புதிதாக மாற்ற..!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

இன்டீரியர்..! - 3

உங்கள் கனவு இல்லம், இங்கே நனவாகும்!பழைய வீட்டை புதிதாக மாற்ற..!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
இன்டீரியர்..! - 3

புதிதாக கட்டிய வீட்டை எப்படி உள் அலங்காரம் செய்வது என்பதை கடந்த இதழில் சொல்லியிருந்த ’டூ மை ஹோம்' நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பாலாஜி ஸ்ரீனிவாசன், இந்த இதழில் பழைய வீட்டை உள் அலங்காரத்தின் மூலம் எப்படி புதுமைப்படுத்துவது என்பதை விவரிக்கிறார்....

“புதுசு, பழசு  இந்த வீடுகளுக்கு இன்டீரியர் பண்றதுல இருக்குற வித்தியாசம்... புது வீட்டுக்கு இன்டீரியர் பண்றது ரொம்ப இ்ன்ட்ரஸ்டிங்கா இருக்கும். பழைய வீட்டுக்கு கொஞ்சம் சேலஞ்சிங்கா இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெசன்ட் நகரில் இருக்கும் பத்து வருஷ பழைய வீட்டோட ஓனர் ராமசந்திரன் எங்ககிட்ட வந்து, ’பத்து வருஷமா ஒரே அட்மாஸ்பியர்ல இருக்கறது கொஞ்சம் சலிப்பா இருக்கு. ஏதாச்சும் சேஞ்ச் கொண்டுவர முடியுமா?'னு கேட்டாரு. ’வீட்டைப் பாத்துட்டு சொல்றோம்'னு அவரை அனுப்பி வெச்சோம். பிறகு ஒரு நாள் அவரோட வீட்டை நேரா போய் பாத்துட்டு, வீட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரோட டிமாண்ட்ஸ் என்னென்னனு கேட்டு தெரிஞ்சுகிட்டு... அவங்கவங்க டேஸ்ட்டுக்கும், பட்ஜெட்டுக்கும் ஏத்தமாதிரி இன்டீரியர் பண்ணிக் கொடுத்தோம்... வேலை முடிஞ்சதும் எங்க க்ளையன்ட் ராமசந்திரன் ரொம்ப ஹேப்பி!''னு சொன்ன பாலாஜி, அந்த வீட்டுக்கு செய்த இன்டீரியர் பத்தி இங்கே வர்ணிக்கிறார்.

இன்டீரியர்..! - 3

வரவேற்பறை: முதல் வேலையா வீட்டோட டல் கலரை மாத்தி, ஃபுல் பிரைட் வொயிட் பெயின்ட் அடிச்சோம். மேற்கூரையை அறுங்கோண வடிவத்துல, ஸ்டெப் மாதிரி டபுள் லேயர் கொடுத்து டிசைன் செய்தோம். அதுல நடுவுலயும், சுற்றியும் டவுன் லைட் (இது மின்சாரம் அதிகம் செலவாகாத லெட் லைட்) போட்டோம். இதை வார்ம், கூல், நியூட்ரல் இப்படி மூணு டோனுக்கு மாத்திக்க முடியும். அடுத்ததா, இரண்டு லேயருக்கு இடையில் 'கோவ்’ எனப்படும் புதுவித லைட் போட்டோம். ப்ளூ கலர்ல இருக்குற இந்த லைட், ஹாலுக்கு ரொம்ப ரிச் லுக் கொடுக்கும்.

க்ளையன்ட், தன்னோட பழைய சோபாவை மாத்த வேணாம்னு சொன்னதால, அதுக்கு மேட்சிங் கலரை செலக்ட் செய்து, சுவரோட ஒரு பக்கம் கொடுத்தோம். அதை பிளெய்ன் பெயிட்ன்டா இல்லாம, டெக்சர் பெயின்ட்டா அடிச்சோம். இது பார்ப்பதற்கு ஒரு மாடர்ன் ஆர்ட் போல் இருக்கும். தன் அம்மா வரைந்த பெயின்ட்டிங்கை, ஹால்ல மாட்டணும்னு ஓனர் கேட்டதால, அதை நடுவில் மாட்டிட்டோம்.

டைனிங் ஏரியா : ஹாலோட ஒரு பகுதிதான் டைனிங் ஏரியா. ஸ்பூன், தட்டுனு ஒவ்வொண்ணுக்கும் கிச்சனுக்கு போகாம, கப் அண்ட் சாஸர்ல இருந்து ’மைக்ரோவேவ் அவன்' வரை எல்லாமே வெச்சுக்கிற மாதிரி குக்கரி கப்போர்டை, டைனிங் ஏரியாவிலேயே வெச்சுட்டோம்.

இன்டீரியர்..! - 3

டைனிங் ஏரியாவுக்கு பின்பக்கம் முழுக்க த்ரீவே கர்ட்டென் (ஸ்க்ரீன்). இதில் இருக்கும் ஸ்க்ரூ டைப் பட்டன்ல மூணு ஆப்ஷன் இருக்கும். முதல் ஆப்ஷன், முழு வெளிச்சம்; ரெண்டாவது ஆப்ஷன், பாதி திறந்து மைல்டா வெளிச்சம் தரும்; மூணாவது முழுசா மூடிடும்.

கிட்ஸ் ரூம்: இந்த வீட்டுல ஒரு பையன், ஒரு பொண்ணு. கொஞ்சம் வளந்த பசங்க. அதனால கார்ட்டூன், பிங்க் கலர், ப்ளூ கலர்னு போகாம, இங்கேயும் டெக்சர் பெயின்ட் அடிச்சோம். ஏசியும் எற்கெனவே ஃபிக்ஸ் பண்ணது. அதனால ஒரு சேஞ்ச் கொடுக்க, ஏ.சியை சுத்தி, பார்டர் போல, டெக்சர் பெயின்ட் அடிச்சுட்டோம். ரெண்டு கட்டில் தனித்தனியா போட்டா இடத்தை அடைச்சுடும் அதனால ஒண்ணுமேல ஒண்ணு வர்ற மாதிரியான பங்கர் பெட் யூஸ் பண்ணியிருக்கோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism