Published:Updated:

காலண்டர் ராணிகள்... ஒரு கலை முயற்சி!

 நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்...
பிரீமியம் ஸ்டோரி
நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்...

- ஆனந்தி ஜெயராமன்

காலண்டர் ராணிகள்... ஒரு கலை முயற்சி!

- ஆனந்தி ஜெயராமன்

Published:Updated:
 நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்...
பிரீமியம் ஸ்டோரி
நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்...
``இந்தியா பல கலைகளின் தாயகம் மட்டுமல்ல; பல புகழ்பெற்ற ராணிகளையும் இந்த மண்ணுக்கு அளித்த பூமி. அந்த கம்பீர ராணிகளை காலண்டரில் வரிசைப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற ஐடியா பிறந்தது. டீம் உருவாக்கினோம். 12 ராணிகளுக்கு 12 நடிகைகளைத் தேர்வு செய்தோம். அவர்களுக்கான ஆடை, அலங்காரங்களை எல்லாம் தேடித் தேடி செய்து முடித்தோம். ‘க்வீன்ஸ் காலண்டர்’ ரெடி. இந்த டீம் வொர்க் கில் பங்களித்த எல்லோருக்கும் 2021 நல்லபடியாக ஆரம்பித்திருக்கிறது’’ - உற்சாகமாகச் சொல்கிறார் சென்னை யைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் சாந்தினி கண்ணா.
 சாந்தினி கண்ணா
சாந்தினி கண்ணா
காலண்டர் ராணிகள்... ஒரு கலை முயற்சி!

சுனைனா, சாக்க்ஷி அகர்வால், பிரியங்கா தேஷ்பாண்டே, மீரா மிதுன், ரட்சிதா மகாலட்சுமி, நடிகர் ஜெய், ரோஷன் எனப் பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு பெர்சனல் டிசைனராக இருப்பவர் சாந்தி கண்ணா. இவருடைய சமீபத்திய முயற்சியான ‘க்வீன்ஸ் காலண்டர்’ சமூக வலைதளங்களில் பாராட்டு களைப் பெற்றுவருகிறது. அந்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார்.

 மீரா பாயாக நடிகை சோனியா அகர்வால்... -  மீரா பாய்
மீரா பாயாக நடிகை சோனியா அகர்வால்... - மீரா பாய்

‘`கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியபோது, ராணிகள் பலரை பற்றிய டாக்குமென்ட்ரிகளைப் பார்த்தேன். அப்போதுதான் 12 மாதங்கள், 12 ராணிகள் என காலண்டர் ஐடியா பிறந்தது. எந்த ராணிக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்று யோசித்து, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியது பெரிய டாஸ்க். இதில் நாங்கள் தேர்ந்தெடுத்த ராணி களின் படங்களை, அப்படியே ரீகிரியேட் செய்யவில்லை. அந்த ரெஃபரன்ஸை வைத்துக் கொண்டு அதில் எங்கள் யோசனைகளையும் சேர்த்து உருவாக்கினோம். கேமரா மேன் ராக் க்ரிஷ், இந்த ஐடியாவை அழகாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பான புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார்’’ என்று சொல்லும் சாந்தினி, ‘லட்சுமி’ திரைப் படத்தின் காஸ்டியூம் டிசைனர். ‘கஃபா’ என்ற ஃபேஷன் ஸ்கூலை நடத்தி வருபவர், இந்த காலண்டர் புராஜெக்ட்டின் சவால்களையும் சுவாரஸ்யங்களையும் கூறினார்.

 ராணி சம்யுக்தாவாக நடிகை ஜனனி ஐயர்... -  ராணி சம்யுக்தா
ராணி சம்யுக்தாவாக நடிகை ஜனனி ஐயர்... - ராணி சம்யுக்தா

‘`இதற்கான என் முதல் அப்ரோச், நடிகை சாக்க்ஷி அகர்வால். ‘எனக்கு வேலு நாச்சியார் கெட்டப் கொடுங்க’ என்று கேட்டு வாங்கிக்கொண்டார். நடிகை பாவனாவுக்கு ஃபிக்ஸ் செய்திருந்தது ராணி மங்கம்மாள் வேடம். ‘இது எனக்குப் பொருந்துமா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாகப் புகைப்படத்தைப் பார்த்தபோது அவருக்கு மிகவும் நிறைவு. நடிகை சுருதி செல்வம், ராணி லட்சமிபாய் ஆனார். நடிகை இனியா, ராஜமாதா ஜிஜாபாய் ஷஹாஜியாக கச்சிதமாகப் பொருந்தினார்.

 நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்... -  நூர்ஜஹான்
நூர்ஜஹானாக நடிகை விமலா ராமன்... - நூர்ஜஹான்

விமலா ராமன்தான் க்வீன் நூர்ஜஹான். மிகவும் சவாலான ஷூட் இவர்தான். அவர் போட்டிருக்கும் தொப்பி, மெட்டீரியல் வாங்கி என் கைப்பட செய்தது. நூர்ஜஹான் படத்திலிருப்பது போன்ற மூக்குத்தி எங்குமே கிடைக்க வில்லை. எங்கள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, சரத் இருவரும் ஹேர் பின்னைக் கொண்டு ஏதேதோ செய்து அதே போல மூக்குத்தியைத் தயார் செய்து பெருமூச்சுவிட வைத்தார்கள்’’ என்பவரின் காலண்டரில் சோனியா அகர்வால் மீராவாக, விஜயலெஷ்மி ராணி பத்மினியாக, ஜனனி ஐயர் சம்யுக்தாவாக எனப் பக்கத்துக்குப் பக்கம் கம்பீரமும் அழகும்.

‘`காலண்டரில் ஒவ்வொரு ராணி யைப் பற்றிய குறிப்புகளுடன் இவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஃபேஷனை ஒரு டூலாக வைத்து இந்த ராணிகளை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தது பெருமையாக உள்ளது’’ என்கிறார் சாந்தினி கண்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism