Published:Updated:

டிஜிட்டல் இந்தியாவில்... சமந்தா முதல் சாந்தனு வரை

சமந்தா முதல் சாந்தனுவரை பிரபலங்கள் மூலம் நடக்கும் புதிய விளம்பர யுக்தி.

சமந்தா - சாந்தனு
சமந்தா - சாந்தனு ( instagram )

சோஷியல் மீடியாக்களில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலங்களின் மூலம் தங்களது பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய விளம்பர யுக்தி இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள்...
இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள்...

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலங்களைக் குறிவைத்து நடக்கும் இந்த விளம்பர யுக்தியில் ஆடை, ஆபரணங்கள், மேக்கப் பொருள்கள், உணவு, என்டர்டெயின்மென்ட், டெக்னாலஜி என லைஃப் ஸ்டைலுக்கான பல பிராண்டுகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

நாய்களுக்கான உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் போன்ற பிரபலங்களின்மூலம் #itsapromise எனும் ஹேஷ் டேக்குடன் 'தீபாவளிக்கு வெடிகள் வெடித்து விலங்குகளைத் துன்புறுத்தாதீர்கள்' எனும் கருத்தை வலியுறுத்தி தன்னுடைய பிராண்டை விளம்பரம் செய்தது.

சமந்தா - ரகுல் ப்ரீத் சிங்
சமந்தா - ரகுல் ப்ரீத் சிங்
instagram

இதில் சமந்தா தன்னுடைய செல்ல நாய்க்குட்டியான ஹூமனை மடியில் வைத்துக்கொண்டு பேசிய வீடியோவைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கும் தன்னுடைய செல்லக்குட்டி கேண்டியை வைத்துக்கொண்டு பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மூவரும் ஆளுக்கொரு மொபைல் பிராண்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் போட்டோக்களைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரியா பவானி சங்கர் - யாஷிகா ஆனந்த்
பிரியா பவானி சங்கர் - யாஷிகா ஆனந்த்
instagram

நுங்கம்பாக்கத்தில் இன்று திறக்கப்படவிருக்கும் ஒரு ஃபிட்னஸ் டயட் சார்ந்த ரெஸ்டாரன்ட் தன்னுடைய பிராண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இன்னும் பல பிரபலங்களுக்கு கிஃப்ட் ஹாம்பருடன்கூடிய இன்விடேஷனை வழங்கியுள்ளது. இப்பிரபலங்கள் இன்ஸ்டாவில் இதைப் பதிவேற்றியுள்ளனர்.

`ஒரு போஸ்ட்; ரூ.1.86 கோடி!’ - இன்ஸ்டா பதிவுகளால் கல்லா கட்டும் கோலி, பிரியங்கா சோப்ரா

இந்த இன்ஸ்டாகிராம் விளம்பர கலாசாரத்தில் ரகுல் ப்ரீத் சிங், சின்னத்திரை பிரபலம் ஷிவானி நாராயணன், யாஷிகா ஆனந்த் போன்றோர் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

கீர்த்தி - சாந்தனு
கீர்த்தி - சாந்தனு
instagram

இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், இந்தத் தீபாவளிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள பிரபல ஷோரூமுக்கான விளம்பரமாக கீர்த்தியும் சாந்தனுவும் ஜோடியாகச் சென்று தீபாவளி ஷாப்பிங் செய்யும் வீடியோவை இருவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.