Published:Updated:

"என் வார்ட்ரோபில் இருக்கும் உடைகளை வாங்குங்கள்..!'' - அலியா பட் கோரிக்கை. ஏன்?

Alia Bhatt
Alia Bhatt

'கிரிஷ்' திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் அணிந்திருந்த சூப்பர்ஹீரோ ஜாக்கெட், 'ஏ தில் ஹேய் முஷ்கில்' திரைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா உடுத்தியிருந்த சிவப்பு குர்தா உள்ளிட்ட, பல செலிப்ரிட்டி ஆடைகள் சிறப்பு ஏலத்தில் விடப்பட்டன.

கடந்த ஆண்டு, பாலிவுட் ஸ்டார் அலியா பட் StyleCracker Night Market மற்றும் SaltScout.com இணையதளங்களோடு இணைந்து 'Mi wardrobe is Su wardrobe(Mi-Su) ஸ்டோர்' என்ற பெயரில், ஒரு சேவை முயற்சியை முன்னெடுத்தார். இந்த Mi-Su ஸ்டோருக்காக, பிரபலங்கள் பலர் தங்களது அலமாரியில் இருந்த ஆடைகளை விற்பனைக்காகக் கொடுத்துள்ளனர். அந்த ஆடைகளின் விற்பனை மற்றும் ஏலம் மூலம் திரட்டப்படும் தொகை, தொண்டு நிறுவனங்களுக்குச் சென்றடையும்.

Mi-Su ஸ்டோரிலிருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வோர் ஆடையும் உங்களின் அலமாரியை அலங்கரிப்பது மட்டுமல்லாமல், நீங்கள் அதற்காகச் செலவழித்த தொகை பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சென்றடையும். பழைய உடைகள்தான், ஆனால் புதிய யோசனை. இதன்மூலம் பலருக்கு நீங்கள் உதவலாம்!
அலியா பட்
Textile Wastages
Textile Wastages

ஆடை உற்பத்தித் துறை, நூல் மற்றும் ஆடை உற்பத்திப் பிரிவு, சாயப் பட்டறை, என்சைம் வாஷ், Water repellent உள்ளிட்ட விதவிதமான ஃபினிஷிங், ஆசிட், பிளீச் போன்ற வெவ்வேறு டிசைன்கள் என ஏராளமான பிரிவுகளைக் கொண்டு இயங்குகிறது. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், அதிக தீங்கு விளைவிப்பவையாக, ஏராளமான உடல் உபாதைகளுக்கு வழிவகுப்பவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள். இந்தப் பிரச்னைக்கு ஆடைகளின் ரீசைக்ளிங் மற்றும் அப்சைக்ளிங் உதவும் என்று வலியுறுத்துகிறார், அலியா பட். இவர் முயற்சியின் முக்கியம் நோக்கமும் இதுவே.

Alia Bhatt
Alia Bhatt

சமீபத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தன் அலமாரி கலெக்ஷனை Mi-Su-வில் பகிர்ந்திருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அலியா, “அதிகப்படியான துணி உற்பத்தி மற்றும் அந்தத் துணி அலமாரியிலிருக்கும் கால அளவு, சுற்றுச்சூழலுக்குப் பெரும் சுமையைத் தருகின்றன. இதுபற்றிய விழிப்புஉணர்வு மக்களிடையே அவ்வளவாக இல்லை. மறுசுழற்சி செய்யப்படும் துணிகள், சுற்றுச்சூழலுக்குக் கைகொடுக்கும். ஓர் ஆடையை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக உபயோகித்தால், புதிய ஆடை உற்பத்தியால் ஏற்படும் சூழல் தாக்கம் குறையும். இதன் விளைவாக, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு நான்கில் ஒரு பங்கிற்கும், தண்ணீரின் பயன்பாடு மூன்றில் ஒரு பங்கிற்கும், கழிவுகள் ஐந்தில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறையும். இதனால், அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் கழிவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

Anushka Sharma, Varun Dawan and Sonakshi Sinha
Anushka Sharma, Varun Dawan and Sonakshi Sinha

நான் ஏற்கெனவே இரண்டு அலமாரிகளை Mi-Su-ல் பகிர்ந்துள்ளேன். இந்த முயற்சியில், தற்போது அனுஷ்கா இணைந்ததற்கு நன்றி. இது Mi-Su ஸ்டோரின் மூன்றாவது விற்பனையாக அமையும். இந்த முயற்சியில் கைகோக்க நான் மேலும் பல நண்பர்களை அழைக்கிறேன். இது, ரசிகர்களுடன் இணைவதற்கான வாய்ப்பாகவும், அதே சமயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கான காரணியாகவும் அமையும். நிச்சயமாக, நான் தொடர்ந்து இந்தச் சேவையைச் செய்வேன்” என்று கூறினார்.

'Rustom' Akshay Kumar and 'Krish' Hrithik Roshan
'Rustom' Akshay Kumar and 'Krish' Hrithik Roshan

'Mi-Su' முதல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம், பெங்களூரு நிறுவனமான 'அரோஹா' நடத்தும் 'லிட்டர் ஆஃப் லைட் திட்டத்திற்குச் (Liter of Light programme)' சென்றடைந்தது. அரோஹா, ப்ளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, குறைந்த மின்சாரப் பயன்பாடு அல்லது மின்சாரமின்மையால் அவதியுறும் மக்களுக்கு சோலார் விளக்குகள் வழங்கும் அமைப்பு. இரண்டாவது விற்பனை மூலம் கிடைத்த தொகை, The Corbett Foundation என்ற வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்குச் சென்றடைந்தது. அனுஷ்கா ஷர்மா வாட்ரோப் மூலம் கிடைக்கும் மூன்றாவது விற்பனைத் தொகை, அனுஷ்காவின் மனதுக்கு நெருக்கமான விலங்குகள் நலன் தொடர்பான பணிகளுக்கு வழங்கப்படும் என்றார் அலியா பட்.

``இந்திய கைத்தறியின் பெருமையை உலகம் முழுதும்  சேர்த்தது `மகாநடி'!'' - ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷா
Raveena Tandon and her wildlife photography
Raveena Tandon and her wildlife photography

இதேபோல, பாலிவுட் நடிகையும் புகைப்படக்காரருமான ரவீனா டாண்டன், தான் எடுத்த வனவிலங்குகள் புகைப்படங்களை ஆன்லைன் ஏலத்தில் விட்டிருக்கிறார். அதிலிருந்து வரும் பணத்தை மும்பையிலுள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவிற்கு நன்கொடையாக வழங்கிவருகிறார். தங்களுடைய 'செலிபிரிட்டி' பிம்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, மறைமுகமாகப் பல சேவைகளைச் செய்துகொண்டிருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு