Published:Updated:

சென்டிமென்ட் பாவாடை - தாவணி... சேலை கலெக்‌ஷன்! - தீபாவளி ஷாப்பிங்... அதுல்யா ரவி அப்டேட்ஸ்

என்கிட்ட ரொம்ப ஸ்பெஷலான பாவாடை தாவணி செட் ஒண்ணு இருக்கு. வொயிட்ல எம்ப்ராய்டரி செய்த ஸ்கர்ட், மெரூன் கலர் தாவணினு ரொம்பவே டிரெடி ஷனலா இருக்கும்

பிரீமியம் ஸ்டோரி

‘ காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மானவர் அதுல்யா ரவி. சமீபத்தில் இன்ஸ்டா கிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸைத் தொட்டுள்ளார். சிம்பிள் அண்ட் நீட் லுக்கில் அதுல்யா பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பறக்கவிடும் ஹார்ட்டின்கள் அதிகம்... அதுல்யாவின் ஃபேஷன் அப்டேட்ஸ் உங்களுக்காக.

புடவையும் சல்வாரும்தான் பெஸ்ட்!

``நான் சின்ன வயசுலிருந்தே வெஸ்டர்ன் ஆடைகள் யூஸ் பண்ணதில்லை. படங்கள் மற்றும் மாடலிங்குக்குத் தேவைப்படும்போது மட்டும் வெஸ்டர்ன் டிரஸ் யூஸ் பண்ணுவேன். மத்தபடி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் புடவையும் சல்வாரும்தான். காட்டன், சில்க் காட்டன், லினன், சில்க், சிந்தெடிக்னு நிறைய மெட்டீரியல்கள்ல எக்ஸ்க்ளூசிவ் சாரி கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன். சிம்பிளான புடவையை வாங்கி, வித்தியாசமான பிளவுஸோடு மிக்ஸ் மேட்ச் செய்து உடுத்திக்கப் பிடிக்கும். என் டிரஸ் கிராண்டா இருக் கணும்ங்கிறதைவிடவும், தனித்துவமாவும் உடுத்த வசதியாவும் இருக்கணும்னு நினைப் பேன்.

சென்டிமென்ட் பாவாடை - தாவணி... சேலை கலெக்‌ஷன்! 
 - தீபாவளி ஷாப்பிங்... அதுல்யா ரவி அப்டேட்ஸ்

சென்டிமென்ட் பாவாடை, தாவணி...

என்கிட்ட ரொம்ப ஸ்பெஷலான பாவாடை தாவணி செட் ஒண்ணு இருக்கு. வொயிட்ல எம்ப்ராய்டரி செய்த ஸ்கர்ட், மெரூன் கலர் தாவணினு ரொம்பவே டிரெடி ஷனலா இருக்கும். இந்த டிரஸ்ஸை எங்க அம்மாவுக்கு அவங்க அப்பா கொடுத்தார். எங்க அம்மா எனக்குக் கொடுத்தாங்க. டீன் ஏஜ்ல அடிக்கடி இந்தப் பாவாடை, தாவணியை உடுத்தியிருக்கேன். இப்பவும் என் வார்ட் ரோப்ல அந்தப் பாவாடை, தாவணிக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

கண்ணைத் திறந்த ஷாப்பிங் மால்!

அடிக்கடி ஷாப்பிங் போற பழக்கம் எனக்கில்லை. பிராண்டடு அயிட்டம்தான் வாங்கணும்னு நினைக்க மாட்டேன். நடிக்க வர்றதுக்கு முன்னாடி சின்னச் சின்ன கடைகள்ல பேரம் பேசி வாங்கியிருக்கேன். மால்கள்ல ஷாப்பிங் பண்ணும்போது மட்டும் பேரம் பேசக் கூச்சப்பட்டுக்கிட்டு சொன்ன விலைக்கு வாங்கிட்டு வர்றோமேனு புரிஞ்ச பிறகு இப்பல்லாம் சின்ன கடைகளுக்குப் போகும்போது நான் பேரம் பேசுறதில்ல.

சென்டிமென்ட் பாவாடை - தாவணி... சேலை கலெக்‌ஷன்! 
 - தீபாவளி ஷாப்பிங்... அதுல்யா ரவி அப்டேட்ஸ்

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

என் ஃபேவரைட் கலர் கறுப்பு. ஆனாலும் என் வார்ட்ரோப்ல எல்லா கலர்ஸ்லயும் டிரஸ் இருக்கும். வாட்ச் ரொம்ப பிடிக்கும். தனி கலெக்‌ஷன் வெச்சிருக்கேன். அக்ஸசரீஸை பொறுத்தவரை பெரும்பாலும் ஆன்லைன்ல வாங்கிடுவேன்.

வந்தாச்சு தீபாவளி...

சின்ன வயசுல தீபாவளி அவ்ளோ ஸ்பெஷலா இருக்கும். தீபாவளிக்கு மறுநாள் ஸ்கூலுக்கு கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வரச் சொல்வாங்க. அதுக்காகவே பார்த்துப் பார்த்து டிரஸ் எடுப்பேன். இப்போ எல்லாம் மாறிருச்சு. ஆனாலும் தீபாவளியாச்சே... கொஞ்சம் கொஞ்சமா ஷாப்பிங் பண்ணிக் கிட்டிருக்கேன். வார்ட்ரோப்ல புது புடவைகள் ரெடியா இருக்கு. பிளவுஸ் மிக்ஸ் மேட்ச் பண்ணிக் கலக்க வேண்டியதுதான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு