Published:Updated:

`பிரைடல் மேக்கப்பில் இவ்வளவு விஷயங்களா?' - அவள் வாசகிகளுக்கு வழிகாட்டிய பயிற்சி

ஸ்ரீதிக்கா சனீஷ்

கணிசமான வருமானத்தைத் தரும் ஒரு தொழில்தான் `பிரைடல் மேக்கப்'. முறையான பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களிடம் பயிற்சி பெற்றால் அசத்தலான மேக்கப் ஆர்டிஸ்ட்டாக மாறிவிடலாம்.

`பிரைடல் மேக்கப்பில் இவ்வளவு விஷயங்களா?' - அவள் வாசகிகளுக்கு வழிகாட்டிய பயிற்சி

கணிசமான வருமானத்தைத் தரும் ஒரு தொழில்தான் `பிரைடல் மேக்கப்'. முறையான பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களிடம் பயிற்சி பெற்றால் அசத்தலான மேக்கப் ஆர்டிஸ்ட்டாக மாறிவிடலாம்.

Published:Updated:
ஸ்ரீதிக்கா சனீஷ்

மேக்கப், ஹேர்ஸ்டைல் என்பதெல்லாம் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தயாராகும்போதுதான் என்றிருந்த நிலை மாறிவிட்டது. அன்றாடம் மேக்கப், ஹேர்ஸ்டைலில் பலரும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். அதே வரிசையில் மேக்கப் சார்ந்த தொழில்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் கணிசமான வருமானத்தைத் தரும் ஒரு தொழில்தான் `பிரைடல் மேக்கப்'. முறையான பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களிடம் பயிற்சி பெற்றால் அசத்தலான மேக்கப் ஆர்டிஸ்ட்டாக மாறிவிடலாம்.

பயிற்சியாளர் தீபிகா சரணுடன் ஸ்ரீதிக்கா சனீஷ் 
பயிற்சியாளர் தீபிகா சரணுடன் ஸ்ரீதிக்கா சனீஷ் 

பிரைடல் மேக்கப் துறையில் பிரபலமாக விரும்புபவர்களுக்கு விவாஷியஸ் பிரைடல் ஸ்டூடியோ மற்றும் அகாடெமியின் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பயிற்சியாளர் தீபிகா சரண் பிரைடல் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் குறித்த பயிற்சியை சென்னையில் வியாழக்கிழமை நடத்தினார். மேலும் அகாடெமியின் சார்பில் 15 நாள்கள் நடைபெற்ற சான்றிதழ் பயிற்சிக்கான நிறைவு விழாவும் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிற்சியில் கல்யாணப் பெண்ணுக்கு எந்த மாதிரியான மேக்கப் செட் ஆகும் என்பது தொடங்கி என்ன விதமான ஹேர்ஸ்டைல் செய்யலாம் என்பது வரை கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் மேக்கப்பில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. மேக்கப் தொடர்பான பல்வேறு பிராண்டுகளின் தன்மை, அவற்றை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது குறித்து என லைவ் டெமோக்கள் நடைபெற்றன.

பயிற்சியாளர் தீபிகா சரண்
பயிற்சியாளர் தீபிகா சரண்

பயிற்சியின்போது பேசிய தீபிகா சரண், ``முகத்தில் மேக்கப் போடும்போது கழுத்துக்கும் கைகளுக்கும் சேர்த்து மேக்கப் போட வேண்டும். இல்லையென்றால் முகம், கழுத்து, கை அனைத்தும் வேறு வேறு நிறங்களில் அப்பட்டமாகத் தெரியும். மேலும் சிறிது ஃபவுண்டேஷனுடன் மாய்ஸ்ச்சரைசரை மிக்ஸ் செய்து கழுத்துக்கும் கைகளுக்கும் அப்ளை செய்தால் மேக்கப் சரியாக அமையும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவள் விகடன் வாசகிகளுக்கு வாய்ப்பு:

இந்தச் சிறப்பு பயிற்சியில் அவள் விகடன் வாசகிகள் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இணையதளத்தில் மேக்கப் சம்பந்தப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலளித்த சென்னையைச் சேர்ந்த 5 வாசகிகளுக்கு நிகழ்ச்சியில் இலவசமாகப் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

பயிற்சியில் கலந்துக்கொண்ட அவள் விகடன் வாசகிகள் 
பயிற்சியில் கலந்துக்கொண்ட அவள் விகடன் வாசகிகள் 

சென்னையில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த வேறுவேறு துறைகளில் வேலை செய்யும் ரதி, நித்யா, தேன்மொழி, ஃப்ளோரா வேலென்டி மேரி, ஜனனி ஆகியோர் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

பயிற்சியில் பங்கேற்றது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட ரதி, ``இப்போலாம் சர்டிஃபைடு பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கிட்டதான் நிறைய பேர் ஆர்வமா வந்து பிரைடல் மேக்கப் செஞ்சுக்கிறாங்க. ஒரு பயிற்சி வகுப்பு அட்டெண்டு பண்ணி பிரைடல் மேக்கப் கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அவள் விகடன் மூலமாக என் நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சு" என்பவர் கோயம்பேடு பகுதியிலிருந்து வந்து நிகழ்வில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக `நாதஸ்வரம்' சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரித்திகா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்ரித்திகா தீபிகா சரண் சிறப்பு பிரைடல் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் மேக்கப் செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism