என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

பனாரஸி முதல் லினன்வரை டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்

பட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டு

- சரணி ராம்

ஃபேஷன் உலகில் என்னதான் டிரெண்ட் மாறினாலும் பட்டுப்புடவைகளின் மீதான பெண்களின் காதல் மாறுவதே இல்லை. பாரம்பர்யமான காஞ்சிபுரம் பட்டு, பெண்களின் எவர்கிரீன் சாய்ஸ் என்றாலும் ரா சில்க், சாஃப்ட் சில்க், சில்க் காட்டன் என லைட் வெயிட் பட்டுப்புடவைகள்தாம் அவர்களது லேட்டஸ்ட் சாய்ஸ். டிரெண்டில் களமிறங்கியிருக்கும் விதவிதமான பட்டுப்புடவைகளுக்கு எப்படி ஸ்டைலிங் செய்ய வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் ஃபேஷன் டிசைனர் அஞ்சு சங்கர்.

பனாரஸி முதல் லினன்வரை
டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்

காஞ்சிபுரம் பட்டை கையாள் வதில் சிரமம் இருப்பதால் பெண்கள் இப்போது லைட் வெயிட் பட்டுப் புடவைகளை விரும்புகிறார்கள். ஃபேன்ஸி பட்டுகளை 100 சதவிகிதம் ஒரிஜினல் என்று சொல்ல முடியாது. பட்டு நூலும், காட்டன் நூலும் கலந்திருப்பதால்தான் சில ஆயிரங்களிலேயே கிடைக்கிறது. பைதானி சில்க், பாந்தினி சில்க், பகல் பூரி சில்க் என நிறைய வகை இருந்தாலும் டிரெண்ட் ஆகும் சில வகை பட்டுப்புடவைகளின் லிஸ்ட் உங்களுக்காக...

சாஃப்ட் சில்க்

பனாரஸி முதல் லினன்வரை
டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்

சிம்பிள் அண்டு நீட் லுக் வேண்டு மென்பவர்கள் சாஃப்ட் சில்க் புடவை களைத் தேர்வு செய்யலாம். பெரிய அளவில் ஐரிகை வேலைப்பாடுகள் இருக்காது. லைட் வெயிட்டாகவும் உடுத்திக்கொள்ள எளிமையாகவும் இருக்கும். சிறிய பார்டர் வேண்டும் என்பவர்களுக்கு சாஃப்ட் சில்க் புடவைகள் பெஸ்ட் சாய்ஸ். சாஃப்ட் சில்க் புடவைகளுக்கு, வேலைப்பாடுகள் இல்லாத சில்க் மெட்டீரியல் பிளவுஸைத் தேர்வு செய்யலாம். வேலைப்பாடுகள் வேண்டுமெனில் சிம்பிளான ஜர்தோஸி டிசைன் பிளவுஸ் அணியலாம். சிம்பிளான ஜுவல்லரி அசத்தலாக இருக்கும். 4,000 ரூபாயிலிருந்து சாஃப்ட் சில்க் புடவைகளை வாங்கலாம்.

லினன் சில்க்

சிம்பிள் லுக் வேண்டும் என்பவர் களுக்கு லினன் சில்க் பெஸ்ட் சாய்ஸ். எந்தவிதமான ஜரிகை வேலைப்பாடுகளும் இருக்காது. புடவையின் பார்டரும்கூட பிளெ யினாகவே இருக்கும். வழக்க மான நிறங்கள் தவிர்த்து லைட் ஷேடுகளிலும் புடவைகளை வாங்கலாம் என்பது இதன் ப்ளஸ். சாஃப்டாக இருப்பதால் நீண்ட நேரம் உடுத்தினாலும் சிரமமாக இருக்காது. பிளெயின் ரா சில்க் மெட்டீரியலில் கான்ட்ராஸ்டான நிற பிளவுஸ் அல்லது சில்வர், அல்லது கோல்டன் நிற பிளவுஸ் அணியலாம். லினன் சில்க் புடவைகளுக்கு ஆக்ஸிடைஸ்டு நகைகள் அழகு. போனிடெயில் அல்லது ஃப்ரீ ஹேர் ஸ்டைல் செய்துகொள்ளுங்கள். வேலைப்பாடுகளைப் பொறுத்து 2,500 ரூபாயிலிருந்து வாங்கலாம்.

பனாரஸி பட்டு

பனாரஸி முதல் லினன்வரை
டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்
பனாரஸி முதல் லினன்வரை
டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்

கிராண்ட் லுக் வேண்டும் என்பவர்கள் பனாரஸி பட்டுப்புடவைகளைத் தேர்வு செய்யலாம். புடவை முழுவதுமே சில்வர் அல்லது கோல்டன் நிற ஜரிகைகளால் பூ, இலை, மாங்காய் வடிவம் போன்று டிசைன் செய்யப்படுவது இதன் தனிச் சிறப்பு. புடவை கிராண்டாக இருப்பதால் பிளெயின் மெட்டீரியல் பிளவுஸ் தேர்வு செய்யலாம். பீட்டர் பான், ஹை நெக் என பேட்டர்ன் பிளவுஸ்கள் டிரெண்டியாக இருக்கும். போல்கி அல்லது குந்தன் நகைகள் பொருத்தமான தேர்வு. பட்டு நூல், காட்டன் நூல் கலந்து நெய்யப் பட்டது, ஜார்ஜெட்டுடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டது என பனாரஸி புடவைகள் 3,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

ரா சில்க்

எத்னிக் லுக் பிரியைகளுக்கு ரா சில்க் பொருத்தமான தேர்வு. ஒரே நிறம் அல்லது கான்ட்ராஸ்டான இரு நிறங்கள் என்று வெவ்வேறு பேட்டர்ன்களில் ரா சில்க் புடவைகள் கிடைக்கும். ரா சில்க் புடவைகளுக்கு புரோகேட் மெட்டீரியல் பிளவுஸ் பொருத்தமாக இருக்கும். சிம்பிளாக வேண்டும் என்றால் பிளெயின் மெட்டீரியலில் கோல்டன் நிற பார்டர் வைத்த புடவைகளையும், கிராண்ட் லுக் வேண்டுவோர் பனாரஸி டிசைனில் வடிவமைக்கப்படும் ரா சில்க் புடவைகளையும் தேர்வு செய்யலாம். இந்தப் புடவைகளுக்கு கெம்ப் நகைகள் பொருத்தமான தேர்வு. டிவிஸ்டடு, ஃபிஷ் ப்ரெய்டு ஹேர் ஸ்டைல்கள் செய்து கொள்ளலாம். ரா சில்க் புடவைகளை 2,000 ரூபாயிலிருந்தே வாங்க முடியும்.

டஸ்ஸர் சில்க்

டஸ்ஸர் சில்க் பிரின்ட்டடு, பிளெயின் என இரண்டு வகைகளில் கிடைக்கும். புரோகேட், இக்கட் போன்ற டிசைன் பிளவுஸ்கள் நீட் லுக் தரும். ஆக்ஸி டைஸ்டு நகைகள் அல்லது சிம்பிளான ஸ்டோன் நகைகள் அணியலாம். ஒரிஜினல் டஸ்ஸர் சில்க் புடவைகள் 3,500 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

காட்டன் சில்க்

பனாரஸி முதல் லினன்வரை
டிரெண்டாகும் பட்டு ஃபேஷன்

இப்போது ஜீன்ஸுக்கு மேல் புடவையும், புடவைக்கு பெல்ட் அணிவதும் ஃபேஷன். அதற்கு காட்டன் சில்க் புடவைகள் பொருத்த மாக இருக்கும். சில்வர், கோல்டன் நிற ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதிக வேலைப்பாடுகள் வேண்டாம் என்பவர்கள் பார்டர் மட்டும் கொண்ட புடவைகளைத் தேர்வு செய்யலாம். காட்டன் சில்க்கைப் பொறுத்தவரை பேட்டர்ன் பிளவுஸ் பொருத்தமான தேர்வு அல்லது புடவையில் உள்ள ஜரிகையின் நிறத்தில் புரோகேட் பிளவுஸையும் அணியலாம். டெரகோட்டா அல்லது ஃபேன்ஸி நகைகள் பொருத்தமாக இருக்கும். புடவையின் தரத்தைப் பொறுத்து 1,500 ரூபாயிலிருந்தே வாங்கலாம்.