Published:Updated:

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

வீடு
பிரீமியம் ஸ்டோரி
வீடு

குறைந்த செலவில் வீட்டை அழகாக்கும் டிப்ஸ்

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

குறைந்த செலவில் வீட்டை அழகாக்கும் டிப்ஸ்

Published:Updated:
வீடு
பிரீமியம் ஸ்டோரி
வீடு

`உங்கள் இருப்பிடத்தில் அடிக்கடி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்வது வாழ்க்கையில் சலிப்பைக் குறைக்கும்’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அந்த வகையில் குறைந்த செலவில் வீட்டை அழகாக மாற்றும் டிப்ஸை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த கிராப்ஃட் பயிற்சியாளர் ஷோபனா.

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

ஸ்டிக்கர், க்ளிப் லைட், பிளைவுட் வசனங்கள்...

சுவர்களுக்கு நியூ லுக் கொடுக்க பெயின்ட் அடிப்பது வழக்கமான ஒன்று. சுவர்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது நியூ டிரெண்ட். அறை முழுவதும் ஒட்டும் ஸ்டிக்கர்கள், குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் ஒட்டும் டிசைனர் ஸ்டிக்கர்கள் என இவை இரண்டு வகையாகக் கிடைக் கின்றன. சில நூறு ரூபாய்களிலேயே இவை அறைக்கு நியூ லுக் கொடுக்கும். இரண்டு வருடங்களுக்குப் பின்பு இவை சுவரில் இருந்து உரிந்து வரும் என்பதால் குறைந்த பட்ஜெட்டிலேயே திட்ட மிடுங்கள்.

க்ளிப் லைட்டுகளில் புகைப்படங் களை இணைத்து சுவரில் தொங்கவிட லாம். வீட்டுக்குத் தனி லுக் கிடைக்கும்.

பிளைவுட்களில் பாசிட்டிவ் வசனங் களை எழுதி, வீட்டில் ஆங்காங்கே மாட்டலாம்.

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...
ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

இண்டோர் செடிகள், தொங்கும் தொட்டிகள்...

இயற்கை சூழலில் இருந்தால் மன அழுத்தம் குறையும். தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள், மேஜை, அல மாரிகள், பால்கனி போன்ற இடங்களில் இண்டோர் செடிகள் வளர்க்கலாம். குளோரோபைட்டம், அரேலியாம், பேம்பூ பாம் போன்ற செடிகள் வீட்டுக்குள் வளர்க்க ஏற்றவை.

ஹேங்கிங் பூந்தொட்டிகளைத் தொங்கவிடலாம்.

பழைய டீ கப், வாட்டர் பாட் டில்கள், மண்பானைகளை அலங் கரித்து தொட்டிகளாகப் பயன் படுத்தலாம்.

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...
ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

திரைச்சீலை... டெடி பியர் பொம்மை...

வீட்டின் அறைகளுக்குத் திரைச் சீலைகள் மாட்ட நினைக்கிறீர்களா? உங்கள் தேர்வு கர்ட்டனா, `டிரேப்ஸா' (Drapes) என முடிவு செய்யுங்கள். கர்ட்டன்கள் மெலிதாக இருப்பதால் அறைக்குள் சூரிய வெளிச்சம் வரும். டிரேப்ஸ் சற்று அடர்த்தியாக இருப்ப தால் அறைக்குள் சூரிய வெளிச்சம் வராது.

ஃபர்னிச்சரின் நிறமும் திரைச் சீலைகளின் நிறமும் ஒரே மாதிரி இருந்தால் ரம்மியமாக இருக்கும். அல்லது சுவரின் நிறத்திலேயே திரைச்சீலைகள் வாங்கலாம்.

சிறிய அறைகளுக்கு பிரின்ட்டடு திரைச்சீலைகளைத் தவிர்க்கலாம். திரைச்சீலையைச் சுருக்கி, கட்டி வைக்க, ‘கர்ட்டன் டை’ (Curtain Tie) பயன்படுத்துவோம்.

வீட்டில் குழந்தைகள் விளையாடும் மீடியம் சைஸ் டெடி பொம்மைகளின் கைகளில் பிரெஸ் பட்டன்களை பொருத்தி விடவும். பொம்மையின் கை இடுக்குகளில் திரைச்சீலையை வைத்து இரண்டு கைகளிலும் இருக்கும் பட்டனை ஒன்று சேர்த்து அழுத்திவிட்டால், வீட்டிலேயே அழகான கர்ட்டன் டை ரெடி.

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

ரெடிமேட் அலமாரிகள்...

சுவரில் மாட்டும் ரெடிமேட் அலமாரிகள் பலவிதமான வடிவங் களில், நிறங்களில் ஆன்லைனில் கிடைக்கின்றன. சில ஆயிரங்கள்தான் செலவு. வீட்டுக்கு நியூ லுக் கியாரன்டி.

ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...
ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...
ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...
ஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...

கேண்டில் லைட், டெகரேட்டிவ் லைட்...

அறையை அழகாக்குவதில் விளக்குகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. உங்கள் ரசனைக்கு ஏற்ப அலங்கார விளக்குகளை வாங்கி மாட்டுங்கள். கண்ணாடி பாட்டில் களில் மெழுகுவத்திகளை வைத்து கேண்டில் லைட் டெகரேஷன் செய்யலாம்.

பேட்டரியில் இயங்கும் அலங் கார விளக்குகளைத் தவிர்த்து, மின்சாரத்தில் இயங்கும் விளக்கு களை வாங்கினால் நீண்ட நாள்கள் உழைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism