Published:Updated:

குளோரோபைட்டம், அரேலியா... வீட்டை ரம்மியமாக்கும் இண்டோர் பிளான்ட்கள்!

அலங்காரச் செடிகள்

வீட்டுக்கு வெளியேதான் காற்று மாசுபட்டுக் கிடக்கிறது என்று நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் இருக்கும் காற்று மட்டும் தூய்மையாக இருக்கிறதா என்ன?

குளோரோபைட்டம், அரேலியா... வீட்டை ரம்மியமாக்கும் இண்டோர் பிளான்ட்கள்!

வீட்டுக்கு வெளியேதான் காற்று மாசுபட்டுக் கிடக்கிறது என்று நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் இருக்கும் காற்று மட்டும் தூய்மையாக இருக்கிறதா என்ன?

Published:Updated:
அலங்காரச் செடிகள்

வீட்டு அலங்காரம் என்பது ரசனை மிகுந்ததொரு கலை. விலை உயர்ந்த பொருள்களை வாங்கிக் குவித்திருந்தாலும், ரசனை இல்லையென்றால் எல்லாமே குப்பைக்கூளமாகவே தெரியும். மரப் பொருள்கள், கண்ணாடி ஜாடிகள், பொம்மைகள், பிளவர் வாஷ்கள் என எத்தனை பொருள்கள் இருந்தாலும், பச்சைப்பசேலென சிரிக்கும் ஒரு செடிக்கு இணையாகாது. அது உண்டாக்கும் ரம்மியமும், பாசிட்டிவ் வைப்ரேஷனும் இணையற்றது. அதனாலேயே வீட்டு அலங்காரப் பொருள்களில் அதிகம் விற்பனையாகும் ஒன்றாக இண்டோர் பிளான்ட்கள் உருவெடுத்துள்ளன.

அலங்காரச் செடிகள்
அலங்காரச் செடிகள்

வீட்டுக்கு வெளியேதான் காற்று மாசுபட்டுக் கிடக்கிறது என்று நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் இருக்கும் காற்றுதான் எலெக்ட்ரானிக் பொருள்களின் அலைக்கற்றைகளால், சுவரின் வண்ணப் பூச்சுகளால் அளவுக்கு அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. மாசுபட்டிருக்கும் அந்தச் சூழலை மாசற்றதாக மாற்றுவதற்கான தீர்வுதான் இந்த இண்டோர் பிளான்ட்கள். வீட்டுக்குள் வைக்கும் சிறிய ரக செடிகள் முதல், வரவேற்பு அறைகள், சமையலறை, போர்ட்டிகோ என வகைவகையான செடிகள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சான்செவேரியா

இந்தச் செடி இரவு நேரத்தில் ஆக்ஸிஜனை அதிக அளவில் வெளியேற்றக் கூடியது என்பதால், படுக்கை அறைக்கு ஏற்றதாகும். அழகாகவும், அதேசமயம் நேர்த்தியாகவும் வளரக்கூடியது. குறிப்பாக, குழந்தைகளின் படுக்கையறையில் சான்சிவேரா கட்டாயம் வைக்கப்பட வேண்டும். இந்தச் செடிகள் அதிகபட்சம் மூன்று அடிகள் வரை வளரும் என்பதால், படுக்கையறையின் எல்லா இடங்களிலும் வைக்கலாம். முழுமையான பச்சை, மஞ்சள் கலந்த பச்சை எனப் பல வகைகளில் கிடைக்கிறது. இந்த வகை செடிகளின் விலை 100 - 700 ரூபாய்.

சான்செவேரியா
சான்செவேரியா

பிளோடெண்ட்ரான்

நெகட்டிவ் எண்ணங்களைப் போக்கும் குணம் கொண்ட இந்தச் செடிகளை, வீட்டின் முகப்பு மற்றும் வரவேற்பு அறையின் மையப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம். வீட்டுக்குள் ஆவேசத்துடன் நுழைந்தாலும், சாந்தமான மனநிலையை பிளோடெண்ட்ரான் வழங்குகிறது. முழுமையான பச்சை, மஞ்சள் - சிவப்பு - பச்சை கலந்தது என இந்தச் செடிகளில் பல வகைகள் இருக்கின்றன. மூன்று அடிகள் வரை படர்ந்து வளரக்கூடிய செடி என்பதால், இடத்துக்குத் தகுந்தபடி தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வகைச் செடிகளின் விலை 550 - 1,500 ரூபாய்.

குளோரோபைட்டம்

ஸ்பைடர் பிளான்ட் என்று அழைக்கப்படும் இந்தச் செடி, அதிகபட்சம் ஓரடி வரை வளரக்கூடியது. மனநிலையை எப்போதும் அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால், வீட்டு அலுவலக அறைகளில், வேலை செய்யும் அலுவலகத்தின் மேசைகள் மீது வைத்துக்கொள்ளலாம். நீண்டு வளரும் இதன் இலைகளில் வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்து காணப்படுவதால், கவர்ச்சியான லுக்கைத் தருகின்றன. இதன் விலை 50 - 450 ரூபாய்.

குளோரோபைட்டம்
குளோரோபைட்டம்

அரேலியா

அடர்த்தியாக வளரும் தன்மையைப் பெற்றிருப்பதால், இதை எல்லா இடங்களிலும் வைத்துக்கொள்ள முடியாது. கபோர்ட்களில், டீப்பாய் மற்றும் டைனிங் டேபிள் மீது வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்தச் செடியின் இலை அமைப்பு அவுட்டரில் வெள்ளை கலர், இன்னர் அமைப்பில் பச்சைக் கலர் எனப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இதன் விலை 50 - 250 ரூபாய்.

"கார்டன் ஏரியாவில் இருக்கும் செடிகளுக்கு விடுகிற தண்ணீரின் அளவைவிட, பத்தில் இரண்டு மடங்கு தண்ணீரை இன்டோர் பிளான்ட்களுக்கு பயன்படுத்தினால் போதுமானது".

பேம்பூ பாம்

மூங்கிலைப் போன்ற தோற்றத்தை தரக்கூடிய செடி இது. மூன்று அடிக்கு மேல் வளரும் தன்மை இதற்கு உண்டு. வீட்டின் மூலைகள் மற்றும் வாசல்படியின் இருபுறம் தவிர்த்து மற்ற இடங்களின் இதை வைக்க முடியாது. வரவேற்பு அறையின் ஓர் ஓரத்தில் சோபா கிடத்தப்பட்டிருந்தால், சோபாவின் இரு ஓரங்களிலும் இந்தச் செடியை வைக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். விலை - ரூ.450 - 1,600 வரை

பராமரிப்பு முக்கியம்

* வெளியில் வளர்க்கும் செடிகளைவிட, இண்டோர் பிளான்ட்களை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அதை பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கவனம் அவசியம்.

* கார்டன் ஏரியாவில் இருக்கும் செடிகளுக்கு விடுகிற தண்ணீரின் அளவைவிட, பத்தில் இரண்டு மடங்கு தண்ணீரை இண்டோர் பிளான்ட்களுக்குப் பயன்படுத்தினால் போதுமானது. வீட்டுக்குள் இருக்கும் செடிகள் என்பதால், மண்ணில் ஈரப்பதம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

பராமரிப்பு
பராமரிப்பு

* நேரடியாக உரங்களைப் பயன்படுத்தாமல், நீரில் கலந்து பயன்படுத்தும் உரங்களை மாதம் ஒருமுறை செடிகளுக்கு தெளிப்பது நல்லது.

* வீட்டுக்குள் வைக்கும் அழகுச் செடிகளைச் சுற்றி கூழாங்கற்களை வைக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இது அனைத்துச் செடிகளுக்கும் ஏற்புடையது அல்ல. அதனால் இதில் கவனம் தேவை.