Published:Updated:

`பிளாக் ஃப்ரைடே' , `சைபர் மண்டே' ஆன்லைன் சலுகைகள் - இந்தியாவிலும் ஆரம்பம்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் களைகட்டியுள்ள சலுகைகள்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங் ( pixabay )

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. விடுமுறை நாளான இந்த தினத்தை அமெரிக்கர்கள் `தேங்க்ஸ் கிவிங் டே' எனப் பெயரிட்டுக் கொண்டாடிவருகிறார்கள்.

தேங்க்ஸ் கிவிங் டே
தேங்க்ஸ் கிவிங் டே
freepik

நண்பர்கள், குடும்பத்தினர் என ஒன்றுகூடி உணவருந்துவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது என இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகின்றனர் அமெரிக்கர்கள். இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதக் கொண்டாட்டமான கிறிஸ்துமஸ் தினத்துக்குத் தயாராகிவிடுகின்றனர்.

நவம்பர் நாலாவது வாரத்தின் வியாழக்கிழமையைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில், கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஷாப்பிங் செய்பவர்களை ஈர்ப்பதற்காக, `பிளாக் ஃபிரைடே' எனும் பெயரில் அனைத்துக் கடைகளிலும் போட்டி போட்டுக்கொண்டு விழாக்காலச் சலுகைகளை வழங்குவார்கள்.

கிறிஸ்துமஸ் ஷாப்பிங்
கிறிஸ்துமஸ் ஷாப்பிங்
pixabay

இந்த `பிளாக் ஃபிரைடே' தினத்தைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமையில், `சைபர் மண்டே' எனும் பெயரில் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களும் எக்கச்சக்க டீல்களை வழங்குவார்கள்.

அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த வழக்கம் தற்போது உலகம் முழுக்கப் பரவிவருகிறது. தற்போது இந்தியாவிலும் சில ஷாப்பிங் வலைதளங்கள் இவற்றை தொடங்கிவைத்துள்ளன. அமேசான், நைக்கா, மிந்த்ரா உள்ளிட்ட பல ஷாப்பிங் வலைதளங்கள் `பிளாக் ஃபிரைடே' மற்றும் `சைபர் மண்டே' வை முன்னிறுத்தி சலுகைகள் வழங்கிவருகின்றன.

ஜென்டில்மென்... இந்த 5 பேன்ட் உங்ககிட்ட இருந்தா, நீங்க எப்பவும் ஹீரோதான்!
ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
pixabay

நவராத்திரி மற்றும் தீபாவளியையொட்டி 'ஃபெஸ்டிவ் டீல்ஸ்' எனப் பல வலைதளங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கென பல சலுகைகளை வழங்கின. அந்தக் கொண்டாட்டம் அடங்கியதும் தற்போது கிறிஸ்துமஸுக்கான ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

மொத்தத்தில் களைகட்டியுள்ளன ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்!