Published:Updated:

கறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள், அழகியலின் பரிணாமம்.. 2019-ம் ஆண்டு அழகிப் போட்டியின் வைரங்கள்!

கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து உலக அழகிப் பட்டத்தையும் கறுப்பினப் பெண் வென்றிருப்பது அந்நாட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல்...

கறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள்
கறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள் ( Instagram )

வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்கள் ஐந்து பேர் இந்த ஆண்டின் அழகிப் போட்டிகளில் மகுடம் சூடியுள்ளனர். மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019-ம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள்.

Miss World 2019 Tony Ann Singh
Miss World 2019 Tony Ann Singh
Instagram

கடந்த சனிக்கிழமை, லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி-ஆன் சிங் 69-வது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி இந்த டோனி-ஆன் சிங். 23 வயதான இவர், ஃபுளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் மாணவி.

111 போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகிப் பட்டத்தை தன் வசமாக்கிக்கொண்ட டோனி, ``செயின்ட் தாமஸ், ஜமைக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறுமிகளே - தயவுசெய்து உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் கனவுகளை அடைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தக் கிரீடம் என்னுடையது அல்ல, உங்களுடையது. உங்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது" என்று ட்வீட் செய்தார். இவருக்கு 2018-ம் ஆண்டின் உலக அழகி வனேசா மகுடம் சூட்டினார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட சுமன் ரத்தன் ராவ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

Miss India World Suman Rao
Miss India World Suman Rao
Instagram

கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து உலக அழகிப் பட்டத்தையும் கறுப்பினப் பெண் வென்றிருப்பது அந்நாட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அந்நாட்டு இளம் பெண்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும் கொடுத்திருக்கிறது. இந்த வருடம் மட்டுமே, ஐந்து முதன்மை அழகிப் பட்டங்களை வென்றிருக்கிறார்கள் இவர்கள்.

கடந்த ஆண்டு, மிஸ் அமெரிக்கா அமைப்பு, அழகிப் போட்டியிலிருந்து நீச்சல் உடை சுற்றை நீக்கியது. 2012-ம் ஆண்டிலிருந்து மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ அமைப்புகள், திருநங்கைகளைப் போட்டியாளர்களாக அனுமதிக்கத் தொடங்கியது.

Miss World 2019 finalists
Miss World 2019 finalists
Instagram
பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றுக் கேள்வி... ஸோஸிபினியின் வலிமையான பதில்! #MissUniverse2019

இதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்களுக்கிடையே, இலகுவான சருமம், நேரான கூந்தல் போன்ற வெள்ளை இனப் பெண்களுடன் தொடர்புடைய `அழகியல்' என்ற கோட்பாட்டை உடைத்திருக்கிறது இவர்களின் வெற்றி. இந்த மாற்றம் நிச்சயம் சமுதாயத்துக்குத் தேவை. மேலும், இந்த அழகிப் போட்டிகளில் கறுப்பினப் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் நீண்ட காலமாக இருந்தது. இந்த ஆண்டின் கறுப்பின வெற்றி எல்லாவற்றையும் உடைத்தெறிந்திருக்கிறது.

ஹாட்ஸ் ஆஃப் கேர்ள்ஸ்!