Published:Updated:

கேண்டிட் தருணங்கள்!

கேண்டிட் தருணங்கள்

ஒரு வங்கியின் வாசல். தன் காதலியை டிராப் செய்கிறார் அந்த ஆண். அழகாக காட்டன் புடவை கட்டி காதலனின் டூ வீலரிலிருந்து இறங்குகிறார் அந்த இளம்பெண்.

கேண்டிட் தருணங்கள்!

ஒரு வங்கியின் வாசல். தன் காதலியை டிராப் செய்கிறார் அந்த ஆண். அழகாக காட்டன் புடவை கட்டி காதலனின் டூ வீலரிலிருந்து இறங்குகிறார் அந்த இளம்பெண்.

Published:Updated:
கேண்டிட் தருணங்கள்

கேண்டிட் காட்சி ஒன்று: ஒரு வங்கியின் வாசல். தன் காதலியை டிராப் செய்கிறார் அந்த ஆண். அழகாக காட்டன் புடவை கட்டி காதலனின் டூ வீலரிலிருந்து இறங்குகிறார் அந்த இளம்பெண். அடிக்கடி புடவை கட்டிப் பழக்கமில்லாதவர்போல. முன்னாடி தடுக்க, பின்னாடி புடவை தூக்கிக்கொள்ள எனத் தடுமாறியவரின் தோளைப் பிடித்து நிறுத்தி, பின்பக்கம் தூக்கிக்கொண்ட புடவையை நீவிச் சரிசெய்துவிட்டு, ‘பை’ எனத் தலையசைத்து விடைகொடுக்கிறார் அந்த ஆண்.

கேண்டிட் காட்சி இரண்டு: அவர்கள் திருமணம் முடித்த இளம் தம்பதி. தாலிக்கயிற்றின் மஞ்சள் நிறம் இன்னமும் தன் பொலிவை இழக்கவில்லை. மனைவி பூசிக்கொண்ட பவுடர் முகத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகத் தெரிய, மனைவியின் முகத்தை தன் கர்சீஃப்பால் துடைத்துச் சரிசெய்கிறார் அந்தக் கணவர்.

கேண்டிட் காட்சி மூன்று: நாற்பதுகளின் இறுதியில் இருப்பார்கள் அந்தத் தம்பதி. நாற்பது அல்லது ஐம்பது ரூபாய் இருக்கும் ஒரு பெரிய இளநீரைத் தன் மனைவிக்கு வாங்கிக் கொடுக்கிறார் கணவர். இன்னொரு இளநீர் வாங்க முடியவில்லையோ அல்லது ஒன்றே போதும் என்று நினைத்துவிட்டார்களோ தெரியவில்லை. பாதி குடித்த இளநீரை, மனைவி கணவருக்குக் கொடுக்க, கணவர் அதில் சிறிதளவு மட்டும் குடித்துவிட்டு மனைவியிடமே மறுபடியும் கொடுக்கிறார். மனைவி பேருக்கு சிறிதளவு குடித்துவிட்டு, மறுபடியும் கணவரிடம் கொடுத்து அவரை வற்புறுத்திக் குடிக்கவைக்கிறார்.

கேண்டிட் தருணங்கள்!

மேலே சொல்லியிருக்கிற மூன்று சம்பவங்களுமே கற்பனையல்ல... கேண்டிட் ஆக நாம் கண்ட நிஜம். இப்படிப்பட்ட அன்பு வழியும் தருணங்களை நாம் எல்லோருமே வாழ்நாளின் பல கணங்களில் தரிசித்திருப்போம். கடந்தும் போயிருப்போம். ‘லவ் யூ’, ‘மீ டூ’ போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகளைவிட அதிகப்படியான காதலை, பவுடரைத் துடைத்துவிடும் கணவனின் கர்சீஃபும், இளநீரைக் குடிக்கவைக்கும் மனைவியின் வற்புறுத்தலும் உணர்த்தவல்லவை. இப்படி, காதலை இயல்பாக வெளிக்கொணரும் தருணங்கள் ஒவ்வொரு தம்பதியின் வாழ்க்கைப் பாதையிலும் சின்னச் சின்ன மகிழ்ச்சிப் பூக்களாய்ப் பூக்க, அன்பை எப்படி விதைக்க வேண்டும்? செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி சொல்கிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கேண்டிட் தருணங்கள்!

வர்களுக்கு அது முதல் இரவு. படுக்கை முழுக்க பூக்கள். பூக்களின் மகரந்தம் மேலேபட்டாலே அந்தப் பெண்ணுக்கு அலர்ஜி வந்துவிடும். இது தெரியாதவர்கள், புதுமணத் தம்பதி வாசமாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கட்டும் என அப்படி அலங்கரித்துவிட்டார்கள். வழக்கப்படி முதலிரவு அறைக்குள் முதலில் சென்றார் மணமகன். அவருக்குத் தன் மனைவியின் அலர்ஜி பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால், மனைவி அறைக்குள் வருவதற்குள் பூக்களையெல்லாம் ஒரு பெட்ஷீட்டில் கொட்டி, அறையையொட்டிய பால்கனியில் சுருட்டிவைத்துவிட்டார். அன்றைய இரவு அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். மறுநாள் காலையில் பெட்ஷீட் நிறைய வதங்கிப்போன பூக்களைக் கண்ட மனைவியின் முகம் எப்படி மலர்ந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். இந்த ஒரு தருணம் போதும், அவர்கள் இனி வாழப்போகிற அரை நூற்றாண்டு தாம்பத்யத்தை வாசமாக வைத்திருக்க. வாழ்க்கைத் துணையின் நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இந்தச் சம்பவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேண்டிட் தருணங்கள்!

ன்னொரு சம்பவம். மனைவிக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்ததும், காதலித்தவன் கோழை என்பதால் அந்தக் காதல் தோல்வியடைந்ததும் அந்தக் கணவனுக்கு நன்றாகவே தெரியும். திருமணம் முடிந்த ஆரம்ப சில மாதங்களில் மனைவி தன்னிடம் வாயளவில் சிரித்தாளே தவிர, மனதிலிருந்து சிரிக்கவில்லை என்பது தெரிந்தே மனைவியின் உடல், மனம் இரண்டையும் கொண்டாட ஆரம்பித்தான் கணவன். எந்தவொரு புள்ளியில் அந்தப் பெண்ணின் மனம் பூக்க ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. இன்றைக்கு குடும்பம், குழந்தைகள் எனச் சந்தோஷமாக இருக்கிறார்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இன்றுவரை அந்தக் கணவன், மனைவியின் திருமணத்துக்கு முந்தைய காதலைத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஆணைப் போலவே பெண்ணுக்கும் திருமணத்துக்கு முந்தைய காதல் சகஜம்தான். இதைப் புரிந்துகொண்டவர்களின் வீடுகளில் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்கும்.

கேண்டிட் தருணங்கள்!

ணவன் மனைவி இருவருமே ஒரே துறையில் வேலை பார்க்கிறார்கள். இருவருமே அடிக்கடி வீட்டுக்குத் தாமதமாக வருபவர்கள். ஒவ்வொரு நாளும், இருவரில் யார் வீட்டுக்குச் சீக்கிரமாக வருகிறாரோ, அவர் பாத்திரங்களைத் துலக்கி, துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, இரவு டிபனும் செய்துவிடுவார். மேலோட்டமாகப் பார்த்தால் இவர்களுடைய தாம்பத்யத்தில் சரிசமமான பார்ட்னர்ஷிப் உறவு இருப்பது மட்டுமே தெரியும். ஆனால், அன்றைய தினம் வீட்டுக்குத் தாமதமாக வருகிற தன் துணைக்கு வீட்டு வேலையின் பாரம் இருக்கக் கூடாது என்கிற அக்கறையும் பெருங்காதலும் இதில் மறைந்து கிடக்கின்றன. இந்த ஓர் எண்ணம் போதும், இவர்கள் வாழ்க்கையில் அன்பு ஊற்றெடுத்துக்கொண்டே இருக்க.

கேண்டிட் தருணங்கள்!

ல்லாக் காலத்திலும் மாமியார் - மருமகள் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. கணவனும் மனைவியும் வெளிநாட்டில் இருந்தால்கூட, ‘என் மாமியார் போன் பேசியே எனக்கும் என் கணவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுகிறார்’ என்று பல மருமகள்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். இந்தப் பிரச்னையில், நடுவில் இருக்கிற ஆணுக்கு, யார் பக்கம் நியாயம், தான் யாருக்காகப் பேசுவது என்றே புரிபடாது. இதேபோன்ற பிரச்னையில் இருந்த ஒரு பெண், ‘நீங்க என் பக்கம் பரிஞ்சு பேசலைன்னாலும் உங்க நிலைமை எனக்குப் புரியுதுப்பா’ என்று கணவனின் மௌனத்தை, தான் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டதைச் சொன்னார். இங்கு யாரும் குணத்தில் முழுமை பெற்றவர்கள் இல்லை. அந்தக் கணவரும் அப்படித்தான். ஆனால், தன் மனைவி தனது இயல்பை பாசிட்டிவ்வாக மட்டுமே பார்க்கிறார் என்பதுதான், அவரை மனைவியின் நியாயத்தின் பக்கம் நிற்க வைக்கும்.

கேண்டிட் தருணங்கள்!

காலங்காலமாக மனைவியின் சமையலில் உள்ள குறைகளைச் சொல்வதற்கு மட்டுமே கணவர்கள் வாயைத் திறப்பது வழக்கம். இப்போது, கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவதுபோல, இருவருமே சமைக்கவும் செய்கிறார்கள். இனிமேல் ஒருவருக்கொருவர் சமையலைப் பாராட்டுவதற்கு முன்வர வேண்டும். பாராட்டுகள் எல்லாமே வாழ்க்கையின் நினைவில் நிற்கும் தருணங்களின் பட்டியலில் சேர்ந்துவிடும்.

கேண்டிட் தருணங்கள்!

ந்தக் குடும்பத்தில், மனைவி புரமோஷனுக்காக ஹார்டுவொர்க் செய்ய, குழந்தை பராமரிப்பைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் கணவர். அதே வீட்டில் கணவருக்கு பிசினஸ் ஐடியா கொடுத்தது மனைவி. ஒருவர் மேல் ஒருவர் வைக்கிற அக்கறையை, தாம்பத்யத்தின் தூண் என்று தாராளமாகச் சொல்லலாம்.

கேண்டிட் தருணங்கள்!

ல நேரங்களில் கணவன் மனைவிக்கு நடுவே வருகிற சண்டைகளுக்குப் பின்னால் பெரிய காரணங்கள் இருக்காது. இப்படித்தான் ஒரு தம்பதி அடிக்கடி முட்டிமோதிக்கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய சண்டைக்குள் மூன்றாம் நபர் யாராவது குறுக்கே வந்தால், ‘நான் என் வொய்ஃப்கிட்டேதானே சண்டை போட முடியும்’ என்று அந்தக் கணவரும், ‘என் ஹஸ்பண்ட்கிட்டே சண்டை போடாம யார்கிட்டே சண்டை போட முடியும்’ என்று மனைவியும் சட்டென்று ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். தாம்பத்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிடச் சுலபமான வழி இருக்கிறதா என்ன?

கேண்டிட் தருணங்கள்!

ஃபேமிலி டைம், மீ டைம் மாதிரி கப்பிள் டைம் என்று வாரத்துக்கு சில மணி நேரத்தை ஒதுக்குங்கள். பீச், பார்க் என்று பொதுவெளியில் அமர்ந்துவிடுங்கள். இருவருமே பிறந்த வீட்டுப் பிரச்னை, புகுந்த வீட்டுப் பிரச்னை என சொந்தக் கதைகளைப் பேசவே பேசாதீர்கள். நீங்கள் காதலித்த காலத்தில் பேசிக்கொண்ட ரொமான்டிக் விஷயங்கள், திருமணமான புதிதில் இருந்த கண்மூடித்தனமான காதல் தருணங்கள் என்று பேசலாம். இந்தளவுக்கு யோசித்துப் பேசுகிற அளவுக்குத் தெம்பாக இல்லையென்றால், ‘உங்களை முதன்முதலாகப் பார்த்தப்போ நீங்க போட்டிருந்த பேஸ்ட்டல் கலர் ஷர்ட் நல்ல இருந்துச்சு’ என்றோ, ‘நீ ஓப்பன் ஹேர் விட்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றோ லைட்டாகக்கூட ரொமான்ஸை பகிர்ந்துகொள்ளலாம்.

கேண்டிட் தருணங்கள்!

ங்கு பல பேர், காதல் பூக்கள் கல்யாணத்துக்கு முன் மட்டுமே பூக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு உடலும் மனமும் சேர்ந்து பகிரப்படும்போதுதான் காதல் பூக்கள் அதிகமாகப் பூக்கும்... பூக்க வேண்டும். அதற்கு, உங்கள் வாழ்க்கைத் துணையை இயல்பாக நேசிக்க வேண்டும். உங்கள் துணையை உங்களைத் தவிர, உங்களைவிட யார் அதிகமாக நேசித்துவிட முடியும் சொல்லுங்கள்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism