Published:Updated:

எடப்பாடி `கோட்' , மோடி `வேட்டி' , ரம்யா பாண்டியன் `ஹிப் செயின்' - 2019-ன் டிரெண்டிங் லுக்ஸ்!

ஓ.பி.எஸ் ஓவர் கோட் முதல் ரம்யா பாண்டியனின் மொட்டைமாடி க்ளிக்ஸ் வரையான பிரபலங்களின் `டிரெண்டிங் லுக்ஸ்'

2019-ல் வைரலான பிரபலங்களின் புதுமையான தோற்றங்களைக் பார்க்கலாமா...

2

வேட்டி சட்டை, விபூதி பட்டை, ஓவர்கோட் ஓபிஎஸ்!

இந்த ஆண்டு நவம்பர் மாதம், வீட்டுவசதி வாரியத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அரசுமுறைப் பயணமாகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அமெரிக்கா சென்றார். அப்போது, வேட்டி, சட்டை மற்றும் அதன்மேல் முழங்கால்வரை நீண்டிருந்த ஓவர் கோட் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார் ஓ.பி.எஸ்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்
துணை முதல்வர் ஓ.பி.எஸ்

`கோட் அணிந்திருந்தபோதும், ஓ.பி.எஸ்ஸின் விபூதி பட்டையும் குங்குமப் பொட்டும் மிஸ்ஸாகவில்லை!'

3
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜென்டில்மேன் லுக்கில் அசத்திய முதல்வர் எடப்பாடி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தோற்றம் வைரலானது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வேட்டி, சட்டைக்குப் பதிலாக கோட் சூட்டில் வலம்வந்த முதல்வரின் தோற்றம் கொண்டாடப்பட்டதோடு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் மீம்ஸ், ட்ரோல் என்றும் பகிரப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

லைட் கிரே கலர் சட்டை, சிவப்பு நிற டை, டார்க் கிரே கலர் கோட் சூட் மற்றும் கிரே கலர் நேரு ஜாக்கெட், பேன்ட்டுடன் பிங்க் நிற சட்டை என பக்கா ஜென்டில்மேன் லுக்கில் வெளிநாட்டினரை அசத்திய எடப்பாடி, தன்னுடைய தோற்றம் பற்றிக் கூறும்போது, `உங்களில் ஒருவராக என்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இந்த மாற்றம். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே, அவர்களுடைய கலாசார உடையை அணிந்தேன்' என்றார்.

`எ கம்ப்ளீட் மேன்!'

4
பிரதமர் நரேந்திர மோடி

டிரெண்டு செட்டர் மோடி!

இந்த ஆண்டு மே மாதம், கேதார்நாத் சென்றிருந்த மோடி, இமயமலை பகுதிவாழ் மக்கள் அணியக்கூடிய உடை, அங்கு கிடைக்கக்கூடிய `ஹிமாச்சல் தொப்பி' மற்றும் புலித்தோல் போன்று வடிவமைக்கப்பட்ட சால்வை எனத் தன்னுடைய புது லுக்கில் வைரலானார்.

பிரதமர் நரேந்திர மோடி

கோயிலைச் சுற்றி சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட, அதில் வலம் வந்த மோடியை, `கேன்ஸ் ரெட் கார்ப்பெட் உடையா' என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி

தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத மோடி, இதே ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது, தமிழர் கலாசார உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்தரம் லுக்கில் தோன்றி லைக்ஸ் அள்ளினார்.

`உண்மையான தமிழனா இருந்தா லைக் பண்ணு!'

5
மனைவியுடன் அபிஜித் பானர்ஜியும்

நோபல் தம்பதி!

இந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொருளாதாரத்துக்கான பரிசை அமெரிக்க இந்திய குடிமகனான பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜியும் அவரின் மனைவி எஸ்தர் டியூப்லோவும் பெற்றுக்கொண்டனர்.

அபிஜித் பானர்ஜி

இந்திய கலாசாரத்தை உலக அரங்கில் மேடையேற்றும் விதமாக, பரிசளிப்பு நிகழ்ச்சியில் அபிஜித் பானர்ஜி தமிழர்களின் பாரம்பர்ய வேட்டி மற்றும் வட இந்தியரின் பாரம்பர்ய உடையான குர்தா அணிந்து விருதைப் பெற்றார்.

மனைவியுடன் அபிஜித் பானர்ஜி

அதேபோல், அவரின் மனைவி எஸ்தர் சேலை அணிந்து நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். நோபல் பரிசுபெற்ற செய்தி மட்டுமல்லாமல், இவர்களது பாரம்பர்ய தோற்றமும் டிரெண்ட் ஆனது.

`பெருமைமிகு மேடையில் பாரம்பர்யத் தோற்றத்தில்..!'

6
ரன்வீர்சிங்

'ஃபேஷனிஸ்டா' ரன்வீர்!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி அவார்ட்ஸ் (IIFA)) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரன்வீர்சிங், உச்சந்தலை குடுமி, கிரே நிற `டக்சிடோ' கோட், கறுப்பு நிற பூட்ஸ் அணிந்து வித்தியாசமான உடையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரின் அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவியது.

இதுமட்டுமல்லாமல், Elle Beauty' எனும் விருது விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் வித்தியாசமான கண்ணாடி அணிந்துவந்திருந்தார். அதேபோன்றதொரு கண்ணாடியை அணிந்துகொண்டிருக்கும் தன் மகள் `ஸிவா'வின் புகைப்படத்தையும், ரன்வீரின் புகைப்படத்தையும் ஒன்றாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார் தோனி.

மேலும் அவர், ரன்வீரின் கண்ணாடியைப் பார்த்து, `இந்த அங்கிள் ஏன் என்னுடைய கண்ணாடியை அணிந்திருக்கிறார்' எனத் தன் மகள் ஸிவா கேட்டதாகப் பதிவிட்டிருந்தார். இந்த டிரெண்டிங் பதிவுக்கு நெட்டிசன்கள் ரன்வீரிடம் பதில் கேட்க, `ஃபேஷனிஸ்டாஸ் (ஃபேஷன் அண்டு டிரெண்டை உருவாக்குகிறவர்கள்)' என பதிலளித்திருந்தார் ரன்வீர்.

`வைரலிஸ்டாஸ்!'

7
பிரியங்கா சோப்ரா

பாலிவுட் பியூட்டி பிரியங்கா சோப்ரா!

இந்த வருடம் மே மாதம் நடைபெற்ற `மெட் காலா' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உடை நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளானது. `கேம்ப்: நோட்ஸ் ஆன் ஃபேஷன் (Camp: Notes On Fashion)' எனும் தலைப்பின் கீழ் செயற்கைத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட அலங்காரத்தில் பங்கேற்றார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா

கிளிக்கூண்டு போன்ற`கார்செட்' வடிவ மேல்பகுதி, வண்ண இறகுகளால் நிரப்பப்பட்ட கேப் மற்றும் ஸ்கர்ட். மிகைப்படுத்தப்பட்ட மேக்கப், வறண்ட சுருள்முடி, அதன்மேல் முள்போன்ற கிரீடம் என வித்தியாசமான சிகையலங்காரம் என்று, கொடுக்கப்பட்ட தலைப்புக்கு நியாயம் சேர்த்தாலும், நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார் பிரியங்கா.

பிரியங்கா சோப்ரா, யோகிபாபு

இவரின் சிகை அலங்காரத்தை நடிகர் யோகிபாபுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடுமளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டார்.

`ட்ரோல் பியூட்டி!'

8
அமலாபால்

`ஆடை'... அதிர்வலை... அமலாபால்!

`கதாநாயகின்னாலே இந்த க்ளிஷே கேரக்டரைசேஷன்தானா?' என்றிருந்த அமலாபாலுக்கு, இயக்குநர் ரத்தினகுமாரின் மூலம் மிரட்டலான கதாபாத்திரம் கிடைத்தது `ஆடை'யில். ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்க விரும்பியவருக்குக் கிடைத்த மிகச் சவாலான கேரக்டர்தான் `ஆடை' திரைப்பட `காமினி'.

அமலாபால்

அமலாபால், ஆடையில்லாமல் வெறும் `டிஷ்யூ' ரோலை சுற்றிக்கொண்டிருந்த இப்படத்தின் போஸ்டரிலேயே எகிற ஆரம்பித்தது கோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர், நடிகைகளிடமும் பாராட்டுகளை அள்ளினார் அமலாபால்.

`அப்ளாஸ் அமலா!'

9
அஜித் மற்றும் அனிகா

அஜித் மகள் அனிகா!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸான `விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். சைல்டு ஆர்டிஸ்ட்டாக அறிமுகமாகி `என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக லீட் ரோலில் நடித்து, அஜித் ரசிகர்களுடைய மனதிலும் பாச மகளாக இடம்பிடித்தார் அனிகா.

அனிகா

தான் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோ ஷூட் படங்களை, இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் அனிகா. புடவை கட்டி எடுத்த புகைப்படங்களிலும் குழந்தை முகம் மாறாமல் இருந்த அனிகா, சற்று கிளாமராக மாடர்ன் உடையணிந்திருந்த புகைப்படங்களையும் பதிவேற்றினார்.

அனிகா

`தல பொண்ணு இப்படியெல்லாம் போட்டோ போடாதம்மா' என கமென்ட் செய்ய ஆரம்பித்தனர் நெட்டிசன்கள்.

'ரசிகர்கள் கொண்டாடும் மகள்!'

10
நயன்தாரா

பெருமை சேர்த்த நயன்தாரா!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் `டாக் ஆஃப் சோஷியல் மீடியாவில்' `வோக் (VOGUE)' இதழின் அட்டைப்படமும் இடம்பெற்றது. அதற்குக் காரணம், நயன்தாரா.

துல்கர் சல்மான், மகேஷ்பாபு மற்றும் நயன்தாரா

`வோக்' 12-வது ஆண்டு சிறப்பிதழின் அட்டைப்படத்தில், `சூப்பர் சவுத்' எனும் தலைப்பில் `கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் தி பெஸ்ட்' எனக் குறிப்பிட்டு துல்கர் சல்மான், மகேஷ்பாபு மற்றும் நயன்தாராவின் புகைப்படங்களை அட்டையில் பிரசுரித்தது. `வோக்' மேகஸின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா

`வோக்' மேகஸினுக்கான நயன்தாராவின் அனைத்துப் படங்களும் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்தன. குறிப்பாக `ஸேஜ் கிரீன்' கவுனில் தேவதைக் கதைகளில் தோன்றும் பெண் போலவும், `பிரின்டட் ரஃபில்' கவுன் மற்றும் மெஸ்ஸி ஹேர் ஸ்டைலில் மாடர்ன் பெண்ணாகவும் அசத்தினார் நயன்.

இவரின் இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, `தட்ஸ் எ ஸ்வீட் மொமென்ட் ஆஃப் பிரைடு' எனப் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.

`சூப்பர் ஸ்டாரினி!'

11
ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியனின் ஹிப் செயின்!

`ஜோக்கர்', `ஆண் தேவதை' போன்ற கருத்தாழம் மிக்க கதைகளின் நாயகியாக நடித்த ரம்யா பாண்டியன், தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவேற்றிய புகைப்படங்கள் `ரம்யா ஆர்மி' உருவாகும் அளவுக்கு செம்ம வைரலாயின.

ரம்யா பாண்டியன்

அடிக்கடி போட்டோ ஷூட் செய்யும் வழக்கம் உள்ள ரம்யா, மேக்கப் இல்லாமல் கேஷுவலாகப் புடவை கட்டி எடுத்த `மொட்டை மாடி க்ளிக்ஸ்' வேற லெவல்.

ரம்யா பாண்டியன்

நீல நிற லினன் காட்டன் புடவை, பூ போட்ட புடவை, பிளெயின் பிளவுஸ், தலையில் கொண்டை என சிம்பிளான ரெண்டே ரெண்டு தோற்றங்களில் ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்தார். இந்த ஷூட்டில் வித்தியாசமான மூக்குத்தி, இடுப்புச் சங்கலி என அணிந்து ஸ்கோர் அடித்திருந்தார்.

`பெண்தேவதை!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு