ரூ.3,000 மதிப்புள்ள இலவச மேக்கப் & ஹேர்ஸ்டைல் பயிற்சி... சென்னை வாசகிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

ரூ.3,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சியை இலவசமாகப் பெறுவதற்கு சென்னையைச் சேர்ந்த அவள் விகடன் வாசகிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விவாஷியஸ் பிரைடல் ஸ்டூடியோ அண்ட் அகாடெமி (Vivacious Bridal Studio & Academy), மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் பயிற்சியை சென்னையில் நாளை வியாழக்கிழமை (பிப்.18) நடத்துகிறது. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இந்தப் பயிலரங்கில் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலுக்குத் தேவையான பொருள்கள் குறித்த விவரங்கள், இரண்டு விதமான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சர்வதேச தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்படும். மேலும் ஹெச்.டி மேக்கப் மற்றும் ஏர்பிரஷ் மேக்கப் பற்றிய லைவ் டெமோ வழங்கப்படும்
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இதுதவிர, உணவு மற்றும் ஒரு லிப்ஸ்டிக் பேலட் (Palette) ஆகியவையும் வழங்கப்படும். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை பிரபலம் ஸ்ரிதிகா கலந்துகொள்கிறார்.

ரூ.3,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சியை இலவசமாகப் பெறுவதற்கு சென்னையைச் சேர்ந்த அவள் விகடன் வாசகிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் இரண்டு எளிய கேள்விகளுக்கு இன்று இரவு 7:30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்.

சிறந்த பதில்களை அளித்த 5 வாசகிகளை அவள் விகடன் ஆசிரியர் குழு தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் இலவசமாகப் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும்.