Published:Updated:

`கலந்துகொள்ளத்தான் சென்றேன்; வின்னராகிவிட்டேன்' - `மிஸ் சென்னை' பட்டத்தை வென்ற மாணவி

```மிஸ் சென்னை' என்ற டைட்டில் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை'' என்று பட்டம் வென்ற சென்னை மாணவி நெகிழ்ச்சியோடு நம்மிடம் தெரிவித்தார்.

`மிஸ் சென்னை' பட்டம் வென்ற மாணவி பாபினி
`மிஸ் சென்னை' பட்டம் வென்ற மாணவி பாபினி

சென்னை பேஷன் கான்டஸ்ட் சார்பில் மிஸ் சென்னை, மிஸஸ் சென்னை, மிஸ்டர் சென்னை, மிஸ் கிட், மாஸ்டர் கிட் ஆகிய பிரிவுகளின் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. மிஸ் சென்னைப் பிரிவில் 65 பேரும் மிஸஸ் சென்னைப் பிரிவில் 20 பேரும் மிஸ்டர் சென்னைப் பிரிவில் 60 பேரும் கலந்துகொண்டனர்.

`மிஸ் சென்னை' பட்டம் வென்ற பாபினி
`மிஸ் சென்னை' பட்டம் வென்ற பாபினி

செலிப்பிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ஸ்ரீதேவி ரமேஷ், மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் இந்தியா 2019 பட்டம் வென்ற நமிதா, செலிப்பிரிட்டி பேஷன் டிசைனர் ஃபைசா கான் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகை சாக்ஷி அகர்வால், நடிகையும் மாடலுமான ரேகிமா அசோக், நடிகரும் மாடலுமான பிரகாஷ் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் பவர்ஸ்டாரும் கலந்துகொண்டார்.

பல்வேறு கட்ட போட்டிக்குப்பிறகு மிஸ் சென்னையாக விருகம்பாக்கம் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி பாபினி ஆயிஷா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் இந்தியா 2019 பட்டம் வென்ற நமிதா கீரிடம் சூட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மிஸஸ் சென்னையாக டிம்பிள் போத்ராவும் மிஸ்டர் சென்னையாக பிரபின் பரத்தும் மிஸ் கிட்டாக சம்யுக்தாவும் மாஸ்டர் கிட்டாக சுரேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கீரிடங்கள் சூட்டப்பட்டன.

மிஸ்சென்னை போட்டியில் பங்கேற்றவர்
மிஸ்சென்னை போட்டியில் பங்கேற்றவர்

மிஸ் சென்னை பட்டம் வென்ற மாணவி பாபினி கூறுகையில், ``சிறுவயது முதல் மாடலிங் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. பள்ளிப் படிப்போடு மாடலிங்கிலும் கலந்துகொண்டு வருகிறேன். மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொள்ளதான் சென்றேன். ஆனால், டைட்டில் வின்னராகிவிட்டேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று உலக அழகிப் போட்டி வெல்வதே என்னுடைய லட்சியம்" என்றார்.