Published:Updated:

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்
பிரீமியம் ஸ்டோரி
கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

கிறிஸ்துமஸ் ட்ரீயில் ஜிமிக்கி, மணிகள் ஒட்டிய பந்து, ஸ்டார், பெல் போன்ற கிராஃப்ட் பொருள்களை மாட்டி அலங்கரித்தால், அது காண்போரின் மனதைக் கவரும் விதத்தில் அமையும்

கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. நம்மில் பலரும் வீடுகளில் கிறிஸ்துமஸ் ட்ரீயை அலங்கரிக்கத் தொடங்கியிருப்போம். இதற்கான அலங்கார பொருள்களை இனி கடைகளில் வாங்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்களைக் கொண்டே கிறிஸ்துமஸ் ட்ரீயை அழகாக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் பூமாதேவி. ``கிறிஸ்துமஸ் ட்ரீயில் ஜிமிக்கி, மணிகள் ஒட்டிய பந்து, ஸ்டார், பெல் போன்ற கிராஃப்ட் பொருள்களை மாட்டி அலங்கரித்தால், அது காண்போரின் மனதைக் கவரும் விதத்தில் அமையும்'' என்கிறார்.
பூமாதேவி
பூமாதேவி

தேவையான பொருள்கள்:

பிரவுன் அட்டை, ஏ4 வொயிட் பேப்பர், பென்சில், கத்தரிக்கோல், ஃபேப்ரிக் பெயின்ட், ஃபெவிகால், பிரஷ், கலர் ஸ்டோன்ஸ், மணிகள், கலர் ரிப்பன், கம் டேப், வார்னிஷ், கிண்ணம்.

ஸ்டெப் 1: முதலில் பென்சிலால் ஏ4 வொயிட் பேப்பரில் ஒரு வட்டம் வரைந்துகொண்டு அதைத் தனியே கத்தரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஸ்டெப் 2: அடுத்ததாக, நாம் கத்தரித்து வைத்திருக்கும் வட்டத்தின் அளவில் பிரவுன் அட்டையில் பென்சிலால் மற்றொரு வட்டம் வரைந்து அதையும் தனியே கத்தரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்
ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 2: அடுத்ததாக, நாம் கத்தரித்து வைத்திருக்கும் வட்டத்தின் அளவில் பிரவுன் அட்டையில் பென்சிலால் மற்றொரு வட்டம் வரைந்து அதையும் தனியே கத்தரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 3: பிரவுன் அட்டையின் வட்டத்தின் மேற்பரப்பில் ஃபெவிகால் தடவி அதன் மீது நாம் கத்தரித்து வைத்திருக்கும் பேப்பர் வட்டத்தை ஒட்ட வேண்டும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 4: இரண்டு வட்டங்களும் நன்றாகப் பொருந்திய பிறகு, படத்தில் காட்டியுள்ளவாறு பேப்பர் வட்டப்பகுதியின் மீது உங்களுக்குப் பிடித்த ஓவியங்களை வரைந்து கொள்ளவும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 5: பேப்பர் வட்டப் பரப்பில் பென்சிலால் நாம் வரைந்த ஓவியத்தின் மீது ஃபெவிகால் பயன்படுத்தி படத்தில் காட்டியுள்ள படி அழுத்தமாக கோட்டிங் கொடுக்க வேண்டும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 6: இந்த ஃபெவிகால் கோட்டிங் உலர சில மணி நேரம் ஆகும். உலர்ந்த பிறகு, விதவிதமான ஃபேப்ரிக் பெயின்டைப் பயன்படுத்தி அந்த ஓவியத்தில் வண்ணம் தீட்டிக் கொள்ளலாம்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 7: பின்னர் கறுப்பு நிற ஃபேப்ரிக் பெயின்டை மெலிதான பிரஷில் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு ஓவியத்திலும், வட்டப்பகுதியைச் சுற்றியும் அவுட் லைன் கோட்டிங் தர வேண்டும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 8: ஓவியத்தில் தீட்டிய வண்ணம் நன்றாக உலர்ந்த பிறகு, அதில் சின்னச் சின்ன கலர் ஸ்டோன்களையும், மணிகளையும் உங்கள் ரசனைக்கேற்ப ஒட்டி அலங்கரித்துக்கொள்ளவும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 9: படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு ஸ்பூன் அல்லது பிரஷ் கொண்டு நாம் செய்துள்ள கிராஃப்ட்டின் மேற் பகுதி முழுவதிலும் வார்னிஷ் அடிக்க வும். இது பளபளப்பு தன்மையைக் கொடுக்கும். தூசி படிந்தாலும் எளிதாகத் துடைக்கலாம்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 10: கிராஃப்டில் அடிக்கப் பட்ட வார்னிஷ் முழுவதும் காய்ந்த பிறகு, சிறிதளவு கலர் ரிப்பனை கத்தரித்து மடித்து பின்பக்கம் கம் டேப் பயன்படுத்தி கிறிஸ்துமஸ் ட்ரீயில் மாட்டித் தொங்கவிடுவதற்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவும்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்

ஸ்டெப் 11: நாம் பந்து வடிவத்தில் செய்த இந்த கிராஃப்ட்டை ஸ்டார், பெல், வளையம், கிஃப்ட் பாக்ஸ் என உங்களுக்குப் பிடித்த வடிவங்களிலும் செய்து கொள்ளலாம். வண்ணம் தீட்டியும், மணிகள் ஒட்டியும் நீங்கள் செய்துள்ள இந்த கிராஃப்ட் பொருள்களை உங்கள் வீட்டின் கிறிஸ்துமஸ் ட்ரீயில் மாட்டித் தொங்க விட்டு அலங்கரிக்கலாம்.

ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம்