Published:Updated:

சிவப்பு, ஆரஞ்சு நிறங்களுக்கு நோ... பச்சை, ஊதா ஓகே! லாக்டௌன் சம்மருக்கான காஸ்ட்யூம் டிப்ஸ்!

காஸ்ட்யூம்

இந்த கோடைக்கால லாக்டௌனுக்கு ஏற்ற சௌகர்யமான ஆடைகளை, ஆடை வடிவமைப்பாளர் கீர்த்தனா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

சிவப்பு, ஆரஞ்சு நிறங்களுக்கு நோ... பச்சை, ஊதா ஓகே! லாக்டௌன் சம்மருக்கான காஸ்ட்யூம் டிப்ஸ்!

இந்த கோடைக்கால லாக்டௌனுக்கு ஏற்ற சௌகர்யமான ஆடைகளை, ஆடை வடிவமைப்பாளர் கீர்த்தனா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

Published:Updated:
காஸ்ட்யூம்

`நம் அன்றாட வாழ்க்கையே முடங்கிப்போய் இருக்கிறது, இந்த நேரத்தில் இது அவசியமா' என்கிற உங்கள் மைண்டு வாய்ஸை கேட்ச் செய்துவிட்டோம். ஆனால், அப்படி முடங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தாலும் உங்கள் அன்றாட வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றுபவை நீங்கள் உடுத்தும் உடைகள்தான். 'இன்னும் சில மாதங்கள் இப்படித்தான் வீட்டுக்குள்ளேயே இருக்கப்போகிறோம்' எனும்போது, எதற்கு அதே பழைய லுங்கியையும் நைட் சூட்டையும் அணிந்து, உங்கள் நாள்களை சோம்பலாக்குகிறீர்கள்?

Wardrobe
Wardrobe

இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற சரியான உடைகளைத் தேர்வு செய்வதற்கு முன், நம் வார்ட்ரோபை கொஞ்சம் சுத்தம் செய்வோமா? கலைந்துகிடக்கும் அலமாரியை முறையாக அடுக்கி வைத்தாலே, அவற்றிலிருக்கும் உடைகளை உடுத்த வேண்டும் என்ற ஆசை தானாகத் தோன்றும். அதனால், முதலில் அலமாரியை எப்படியெல்லாம் அழகுபடுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்லூரி, அலுவலகம் செல்லும் அவசரத்தில், என்ன உடையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே பலருக்குத் தெரியாது. கையில் கிடைக்கும் உடையைச் சரியாக இஸ்திரி செய்யாமல்கூட அணிந்து செல்லும் பலர் இங்குண்டு. அவர்களுக்கு இந்த லாக்டௌன் நேரம் சரியான சந்தர்ப்பம் என்றே சொல்லலாம். அவரவரின் அலமாரியில் கோடைகால மற்றும் குளிர்கால உடைகள் எனப் பிரித்து வைக்கலாம்.

Wardrobe
Wardrobe

அவற்றிலும் தினசரி உடுத்துபவை, அவசிய உடைகள், பிரத்யேக உடைகள் என முறைப்படுத்தலாம். ஒவ்வோர் உடையையும் நன்கு இஸ்திரி செய்து அடுக்கலாம். நிறங்களின் அடிப்படையிலும் பிரிக்கலாம். ஆண்கள் தங்களின் பேன்ட் மற்றும் சட்டைகளை நன்கு சலவை மற்றும் இஸ்திரி செய்து அடுக்கி வைக்கலாம். எந்த நிற சட்டைக்கு எந்த நிற பேன்ட் சரியாக இருக்கும் என்பதை முயன்று பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் எடை அதிகரித்துவிடும் அல்லது குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் பலர் ஏராளமான உடைகளை அலமாரியின் ஓர் ஓரத்தில் நெடுங்காலமாக வைத்திருப்பார்கள். அவை, உண்மையில் தேவையா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். கிழிந்த அல்லது நீண்ட நாள்கள் பயன்பாட்டில் இல்லாத உடைகளை அப்புறப்படுத்துங்கள். எல்லாம் செய்தாயிற்றா..? இப்போது நம்முடைய அலமாரி, பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. அடுத்து, இந்த கோடைகால லாக்டௌன் நாள்களில் எந்தெந்த உடைகளை அணியலாம் என்பதை, ஆடை வடிவமைப்பாளர் கீர்த்தனா உங்களுக்குச் சொல்வார்.

"லாக்டௌன் நாள்களில் மட்டுமல்ல, பொதுவாகவே கோடைகாலத்தில் உடைகளைத் தேர்வுசெய்யும்போது நாம் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்... துணி வகை. சரியான துணி வகையைத் தேர்ந்தெடுக்காவிட்டால், காற்றோட்டம் தடைபட்டு வியர்வை அதிகமாகும். வியர்வையை உறிஞ்சும், உலர்த்தும் வகையான ஆடையை அணியாமல்போனால், பல்வேறு சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, வியர்வையை உறிஞ்சும் காட்டன், லினன் உள்ளிட்ட துணிவகையைத் தேர்ந்தெடுங்கள். அவை, 100 சதவிகிதம் காட்டன் மெட்டீரியலா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். காட்டனோடு ரேயான், பாலியெஸ்டர் போன்ற மெட்டீரியல்கள் சேர்த்திருந்தால், தவிர்த்துவிடுங்கள்.

நம் மனநிலையை மாற்றுவதற்கான சக்தி நிறத்திற்கு எப்போதும் உண்டு. வெப்பம் மற்றும் குளிர் என நிறங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிவப்பு, ஆரஞ்சு போன்றவை வெப்ப நிறங்கள். இவை கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான மனநிலையையே ஏற்படுத்தும். அதிலும் இந்த லாக்டௌன் நாள்களில், இதுபோன்ற நிறங்களை நாம் திரும்பிப் பார்க்காமலிருப்பது நல்லது. கறுப்பு நிறத்தை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நம் மனத்தை சாந்தப்படுத்தும் தன்மை இவற்றுக்கு உண்டு. எனவே, பிரைட் மற்றும் வெளிர் நிற உடைகளையே இந்தக் கோடைகால லாக்டௌன் நாள்களில் உடுத்துங்கள்.

Keerthana
Keerthana

ஆண்கள், காலர் இல்லாத டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அல்லது பைஜாமாவைத் தேர்ந்தெடுத்து உடுத்தலாம். அலுவலக மீட்டிங் நேரத்தில், காட்டன் சட்டை மற்றும் பேன்ட் அணிந்துகொள்ளலாம். பெண்கள், காட்டன் புடவை, குர்தா, ஸ்கர்ட், பைஜாமா, காலர் இல்லாத டி-ஷர்ட் போன்றவற்றை அணியலாம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism