Published:Updated:

இது குஷ்பூ மேடம் தந்த நம்பிக்கை!

காஸ்டியூம் டிசைனர் அபர்ணா
பிரீமியம் ஸ்டோரி
காஸ்டியூம் டிசைனர் அபர்ணா

- காஸ்டியூம் டிசைனர் அபர்ணா

இது குஷ்பூ மேடம் தந்த நம்பிக்கை!

- காஸ்டியூம் டிசைனர் அபர்ணா

Published:Updated:
காஸ்டியூம் டிசைனர் அபர்ணா
பிரீமியம் ஸ்டோரி
காஸ்டியூம் டிசைனர் அபர்ணா

சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், பார்வதி நாயர், அதுல்யா ரவி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் காஸ்டியூம் டிசைனர் அபர்ணா. தற்போது விஜய் டிவியின் ‘செந்தூரப்பூவே’ சீரியலின் காஸ்டியூம் டிசைனர், நடிகை குஷ்பூவுக்கு நெருக்கமானவர்.தஞ்சாவூரைச் சேர்ந்த அபர்ணா, பல தடைகளைக் கடந்து காஸ்டியூம் டிசைனரான கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“நான் சின்ன வயசுலேருந்தே கிரியேட்டிவ்வா ஏதாவது பண்ணிட்டே இருப்பேன். தஞ்சாவூர்ல பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்துட்டு கூடவே தையல் கிளாஸுக்கும் போயிட்டு இருந்தேன். அப்புறம் சென்னைக்கு வந்து காஸ்டியூம் டிசைனிங் படிச்சேன். தோழிகளோடு சேர்ந்து `பொட்டிக்’ ஆரம்பிச்சேன். ஓரளவு வருமானமும் கிடைச்சுது.

 குஷ்பூவுடன்...
குஷ்பூவுடன்...

எனக்கு செலிபிரிட்டிகளுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, அவங்களை எல்லாம் எப்படி கான்டாக்ட் பண்றதுன்னு தெரியலை. டப்ஸ்மாஷும் டிக் டாக்கும் ரொம்ப பிரபலமா இருந்த நேரம்... சினிமால வரும் காமெடி டயலாக்குகளை அதே ரியாக்‌ஷனோட பேசி நான் பண்ற டப்ஸ்மாஷ் வீடியோக் களை என்னோட சோஷியல் மீடியா பக்கங்கள்ல ஷேர் பண்ணுவேன். அப்படித்தான் நடிகர் சுந்தர்.சி அண்ணா டைரக்ட் பண்ண படங்களோட காமெடி டயலாக்குகளை டப்ஸ்மாஷ் வீடியோ பண்ணியிருந்தேன். குஷ்பூ மேடம் பெயரை டேக் பண்ணி அந்த வீடியோவை ட்விட்டரில் போஸ்ட் பண்ணினேன்.

குஷ்பூ மேடம் அதை லைக் பண்ணி ‘ரொம்ப நல்லா இருக்கு’ன்னு கமென்ட் பண்ணியிருந்தாங்க. எனக்குத் தலைகால் புரியல. நான் போஸ்ட் பண்ற எல்லா வீடியோக் களையும் லைக் பண்ணாங்க. அவங்களைச் சந்திக்கிறதுக் கான வாய்ப்பும் கிடைச்சுது. அப்போ அவங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றதுக்கு ஆசைப்படுறேன்னு சொன்னேன். ‘ஒரே ஒரு பிளவுஸ் மட்டுமாவது டிசைன் பண்றதுக்கு வாய்ப்பு தாங்க’ன்னு கேட்டிருந்தேன். ‘பார்க்கலாம்’னு மட்டும் சொன்னாங்க. நான் எதிர் பார்க்காத நேரத்துல அவங்களோட `லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியல்ல நடிக்கிறதுக்கான வாய்ப்பைத் தந்தாங்க. ஷூட்டிங்குக்கு முதல் நாள் ஒரு ஆக்ஸிடென்ட். பலமா அடிபட்டதால என்னால அந்த சீரியல்ல நடிக்க முடியல. அந்த நேரத்துல மேடம் என்மேல பர்சனலா ரொம்பவே கேர் எடுத்துகிட்டாங்க. நான் ஏதாவது சோகமாக ஸ்டேட் டஸ் போட்டாகூட அவங்க பிஏ எனக்கு கால் பண்ணி, ‘என்னாச்சு, என்ன பிரச்னை’னு மேம் கேட்டாங்கன்னு விசாரிப்பாங்க. உடல்நிலை சரியான பிறகு, திரும்பவும் காஸ்டியூம் டிசைனிங் வேலைகள்ல முழு முனைப்போடு ஈடுபட ஆரம்பிச்சேன். சில விளம்பரப் படங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணவும் வாய்ப்பு கிடைச்சுது. ஓய்வே இல்லாம ஓடிக்கிட்டு இருந்தேன். லாக்டௌன் நேரத்துல திடீர்னு ஒருநாள் குஷ்பூ மேடம் கிட்டருந்து அழைப்பு. ரொம்ப நாளா நான் ஆசைப்பட்ட அந்த வாய்ப்பு கிடைச்சுது. ஆறு பிளவுஸ் மெட்டீரியல், அதுக்கான டிசைன் வொர்க், அளவு பிளவுஸ் எல்லாம் கொடுத்துத் தைச்சுத் தரச் சொன்னாங்க. நானும் ரொம்ப கவனமா தைச்சு எடுத்துட்டுப்போய் கொடுத் தேன். ரொம்ப நல்லா தைச்சி ருக்கேன்னு பாராட்டுனாங்க. அதுக்குப் பிறகு ரெகுலராவே என்கிட்ட கொடுக்க ஆரம்பிச் சாங்க. தோழிகளோடு சேர்ந்து `பொட்டிக்’ நடத் திட்டிருந்த நான், மேடம் கொடுத்த நம்பிக்கையில தனியாவே பொட்டிக் ஸ்டார்ட் பண்ணினேன்.

சுஹாசினியுடன்...
சுஹாசினியுடன்...


சென்னை வந்தப்போ எந்த முதலீடுமே இல்ல. ராத்திரி பகல் பார்க்காம தைச்சு சம்பாதிச்சதைக் கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வெச்சு பொட்டிக் தொடங்கி, படிப்படியா முன்னேற ஆரம் பிச்சேன். இந்த ஃபீல்டுக்கு போறேன்னு சொன்னப்போ வீட்டுல கொஞ்சம் தயங் கினாங்க. இதுல ஜெயிக்க முடியுமான்னு அவங்களுக்கு சந்தேகம். இருந்தாலும் நம்பி அனுப்பினாங்க. அவங்க நம்பிக்கையைக் காப்பாத் திட்டேன்...’’ - மகிழ்ச்சியாகச் சொல்பவருக்கு கோவை சரளாவைப்போல நகைக் சுவை நடிகையாகும் ஆசை யும் இருக்கிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism