Published:Updated:

`அஜித் ஃபேன்ஸ் அட்வைஸ், சூர்யா ஜீன்ஸ், கார்த்தி ஹேர் ஸ்டைல்’- காஸ்ட்யூமர் பூர்ணிமாவின் ஃபேஷன் டிப்ஸ்

ஜோதிகாவுடன் பூர்ணிமா ராமசாமி
ஜோதிகாவுடன் பூர்ணிமா ராமசாமி

"அஜித் சாரின் ரசிகர்கள், 'எங்க தலையை நல்லா காட்டணும்' என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார்கள். ரசிகர்கள் ஆலோசனை கொடுத்த முதல் அனுபவம் அது. படம் வெளியானதும் நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது."

"திரைத்துறையில் ஓர் ஆடை வடிவமைப்பாளராகக் கடைசி நிமிட வேலைகளைச் சமாளிப்பதற்குள்..." - படபடவென பேசத் தொடங்கினார், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி. தன் முதல் படமான 'பரதேசி'க்கு தேசிய விருது பெற்றதைத் தொடர்ந்து, 'பவர் பாண்டி', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தானா சேர்ந்த கூட்டம்', '36 வயதினிலே', 'ராட்சசி', 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Poornima Ramasamy
Poornima Ramasamy

சூர்யாவின் 'சூரரைப் போற்று', ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', வெப் சீரிஸ் என பிஸியாக இருந்தவரிடம், 'ஒரு சாட் ப்ளீஸ்' என்றேன்.

சினிமாவிற்கும் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Poornima Ramasamy
Poornima Ramasamy

இரண்டையும் இருவேறு துருவங்கள் என்றே சொல்லலாம். சினிமாவில் அந்தந்தக் கதைக்கு ஏற்றபடி ஆடைகளை வடிவமைக்க  வேண்டும். நம் டேஸ்ட்டை அதில் திணிக்க முடியாது. நிறம், பேட்டர்ன் முதல் திரையில் தோன்றும்போது கண்களை உறுத்தாமலிருப்பதுவரை பல விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும். சினிமாவுக்குத் தேவையில்லாத விஷயங்கள் எவை என்பதை உணர்ந்து தவிர்த்தாலே பாதி வேலை முடிந்துவிடும். நமக்கு சரியென்று தோன்றும் பல விஷயங்கள் ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் போன்றவர்களின் பார்வையில் தவறாகத் தோன்றும். எனவே, எல்லோருடைய ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் சினிமாவில் அவசியம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஆடை வடிவமைக்கும்போது, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் அது பெரும்பாலும் இருக்கும்.

நீங்கள் வடிவமைத்த முதல் காஸ்ட்யூம் எது?

Costumes
Costumes
Pixabay

என் அப்பா 'நாயுடு ஹால்' ராமசாமியின் ஜவுளிக்கடை, அம்மாவின் ஆடைத் தொழிற்சாலை எனச் சிறுவயது முதலே ஆடைகளோடுதான் வளர்ந்தேன். எங்களுடைய சுற்றுலாத் தலங்கள் பெரும்பாலும் அப்பாவின் ஆடைகள் பர்ச்சேஸ் இடங்களாகத்தான் இருக்கும்.

பள்ளிக் காலத்தில் என்னுடைய பிறந்தநாள் ஆடையை முதன்முதலில் வடிவமைத்தேன். பிறகு, கல்லூரியில் படித்தபோது நான் அவ்வப்போது வடிவமைத்த ஆடைகளை அப்பாவின் கடையில் விற்பனைக்கு வைத்ததுண்டு. ஆனால், திரைத்துறைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னென்னவோ படிக்க வேண்டும் என நினைத்து, இறுதியில் ஆடை வடிவமைப்பு என்னுடைய டெஸ்டினேஷனாக மாறியது.

உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

Director Maniratnam
Director Maniratnam

முன்பெல்லாம், ஆடை வடிவமைப்பாளர்கள் என்று திரைத்துறையில் யாருமில்லை. காஸ்ட்யூமர்கள்தான் எல்லா வேலைகளையும் செய்தனர். அதைத் தகர்த்து, ஆடை வடிவமைப்பாளராக நளினி ஸ்ரீராம் வித்தியாச முத்திரை பதித்தார். அவருடைய வேலைகளின்மீது அதிக ஈர்ப்பு இருந்தது. மேலும், மணிரத்னம் சார் படங்கள் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

திரைத்துறையிலிருக்கும் சவால்கள் என்னென்ன?

Time
Time

நேரம்தான். என்னதான் திட்டம்போட்டு வேலை செய்தாலும், சில நேரங்களில் அவசர சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பிறகு, ஆடைகளுக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகப் பெரிய சவால். குறைவாகத்தான் பணம் ஒதுக்கியிருப்பார்கள். ஆனால், நம்மிடமிருந்து வேற லெவல் வொர்க்கை எதிர்பார்ப்பார்கள். சில நேரங்களில், என் சொந்தத் துணிகளையெல்லாம்கூட உபயோகித்திருக்கிறேன். அந்த அளவுக்கு டைட் பட்ஜெட்டும் இருந்திருக்கிறது. இப்படி, க்ரியேட்டிவ் துறையில் சவால்கள் ஏராளமாக இருக்கும்தான். அவற்றைச் சமாளிப்பதுதான் திறமை.

'பரதேசி' திரைப்படத்திற்காக என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தீர்கள்?

Paradesi Movie
Paradesi Movie

பாலா சார், ஒரு புத்தகத்தை மட்டும்தான் படிக்கச்சொல்லி கொடுத்தார். அதில் புகைப்படங்கள் எதுவும் இல்லை. கதையை வைத்துதான் அதற்கான நிறம் மற்றும் ஆடைகளைத் தேர்வு செய்தோம். இதற்கான ஆராய்ச்சி வேலைகளுக்கு மட்டுமே ஒரு மாதம் தேவைப்பட்டது. எட்டு வருடங்களுக்கு முன், இணையதளத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும்கூட அதை நான் செய்யவில்லை. பாலா சாரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலான நேரத்தை நூலக ஆராய்ச்சியில்தான் செலவு செய்தேன். சினிமாவில் என்னுடைய முதல் வேலை என்பதால், புதிய விஷயங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

'நேர்கொண்ட பார்வை' அனுபவம் எப்படி இருந்தது?

Nerkonda Paarvai Ajith
Nerkonda Paarvai Ajith

மறக்க முடியாதது. வினோத் சார் கொடுத்த விளக்கம், 'பிங்க்' திரைப்படத்தின் குறிப்புகளை வைத்து சில ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டேன். அதன்படி, நம் நாட்டு நீதிமன்ற விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியிருக்கிறோம். திரைப்படத்திற்காக எந்த இடத்திலும் வழக்கறிஞர் கவுனை நாங்கள் விலக்கிவைக்கவில்லை. சின்னச்சின்ன விஷயத்தையும் பார்த்துப்பார்த்து செய்தோம். அஜித் சார், பர்சனலி மிகவும் நல்ல மனிதர். அவரை நான் 'பரத்' என்கிற வழக்கறிஞராகத்தான் பார்த்தேன். அப்போது அஜித் சாரின் ரசிகர்கள், 'எங்க தலையை நல்லா காட்டணும்' என ட்விட்டரில் அன்புக் கட்டளை இட்டார்கள். ரசிகர்கள் ஆலோசனை கொடுத்த முதல் அனுபவம் அது. படம் வெளியானதும் நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

வித்யா பாலன் என்ன சொன்னார்?

Vidya Balan
Vidya Balan

'என்னைத் தமிழ் பொண்ணா காட்டியிருக்கீங்க' என்றார் திருப்தியுடன். நான் வடிவமைத்துக் கொடுத்த எந்த ஆடையையும் அவர் மறுக்கவே இல்லை.

'36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ராட்சசி' என 'கம் பேக் ஜோதிகா' திரைப்படங்களுக்கு, பெரும்பாலும் நீங்கள்தான் ஆடை வடிவமைப்பாளர். இதற்கு என்ன காரணம்?

Jyothika and Poornima Ramasamy
Jyothika and Poornima Ramasamy

ஆடை வடிவமைப்பாளர் - நடிகருக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு இருப்பது அவசியம். அது வெற்றியடையும்போது, அந்தக் கூட்டணி அடுத்தடுத்து தொடர்வது இயல்பு. மேலும், திரையில் பெண்களைக் கண்ணியமாகக் காட்ட வேண்டும் என்பார் அண்ணி. அதை நான் செய்கிறேன். நான் வடிவமைக்கும் பிளவுஸ்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஜோ அண்ணிக்கு ஆடை வடிவமைப்பதுதான் உலகத்திலேயே மிகவும் சுலபமான வேலை.
பூர்ணிமா ராமசாமி

சூர்யா மற்றும் கார்த்திக்கு நீங்கள் பரிந்துரைக்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்?

With Soorarai Potru Director Sudha
With Soorarai Potru Director Sudha

'சூரரைப் போற்று' படத்தில், இதுவரை பார்க்காத ஃப்ரெஷ் லுக்கில் சூர்யா அண்ணாவைப் பார்க்கலாம். மற்றபடி, சூர்யா அண்ணாவுக்கு ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை அல்லது கறுப்பு நிற சட்டை போதும். இவையே பெர்ஃபெக்டாக இருக்கும். கார்த்தி அண்ணாவை பக்காவான சூட்டில், மீசையில்லாமல், ஷார்ட் ஹேர்-கட் கெட்டப்பில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

ஜோவிடம் கற்றுக்கொண்ட விஷயம்?

Jyothika
Jyothika

'ஜோதிகாவுக்கு வடிவமைக்காதே, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக மட்டுமே என்னைப் பார்' என்பார். திரையில் பெண்களைப் பெருந்தன்மையா காட்ட வேண்டும் என்பது அண்ணியின் விருப்பம். அதைத்தான் என் வடிவமைப்பிலும் நான் பின்பற்றிவருகிறேன்.

``நான் மாடலிங் செஞ்சப்ப ரியாக்‌ஷன் வேற‌‌‌... ஆனா, இப்ப..?!'' - அண்ணன் கெளதம் மேனன் பற்றி உத்ரா மேனன்

நீங்கள் வடிவமைத்ததில் ஜோவின் ஃபேவரைட்?

Jyothika
Jyothika

நான் வடிவமைக்கும் பிளவுஸ் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல், நாம் என்ன செய்தாலும் நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். 36 வயதினிலே படம் பண்ணும்போது, நம்பிக்கையில்லாமல் இருந்தேன். என்னை உற்சாகப்படுத்தி தட்டிக்கொடுத்தது, ஜோ அண்ணிதான்.

அடுத்த கட்டுரைக்கு