Published:Updated:

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

கர்ட்டன் ஹோல்டர்
பிரீமியம் ஸ்டோரி
கர்ட்டன் ஹோல்டர்

கைவினைக் கலைஞர் பூமாதேவி

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

கைவினைக் கலைஞர் பூமாதேவி

Published:Updated:
கர்ட்டன் ஹோல்டர்
பிரீமியம் ஸ்டோரி
கர்ட்டன் ஹோல்டர்
நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

பலரின் வீடுகளிலும் திரைச்சீலைகள் மாட்டியிருப்பார்கள். அதன் உபயோகம் தேவையில்லை எனும்போது அதை முறுக்கி முடிச்சிட்டு வைப்பது பலரின் வழக்கம். அதனால் திரைச்சீலையின் துணி கசங்கலாம், கிழியலாம். இதைத் தவிர்க்க ஹோல்டர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டு திரைச்சீலைக்கு ஏற்றபடி நீங்களே 'கர்ட்டன் ஹோல்டர்' செய்வது எப்படி எனக் கற்றுத் தருகிறேன்.

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

தேவையான பொருள்கள்

கார்டு போர்டு அட்டை

பசை

பென்சில்

கத்தரிக்கோல்

அலங்காரக் கற்கள்

வேஸ்ட் துணி

கயிறு

கிஃப்ட் பேப்பர்

கட்டர்

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

ஸ்டெப் 1

கார்டு போர்டு அல்லது வீட்டில் இருக்கும் தடிமனான அட்டையை எடுத்துக் கொள்ள வும். திரைச்சீலையின் தடிமனைப் பொருத்து, அட்டையில் இரு வட்டங்களை வரைந்து கொள்ளவும். உள் வட்டம் சிறியதாகவும்,வெளி வட்டம் பெரியதாகவும் வரைந்து கொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

ஸ்டெப் 2

வரைந்த வட்டங்களைப் படத்தில் உள்ளவாறு வெட்டிக்கொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

ஸ்டெப் 3

கிஃப்ட் பேப்பரை வட்டத்தின் ஒருபக்கம் ஒட்டவும்.

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

ஸ்டெப் 4

வட்டத்தின் உள் மற்றும் வெளிப்பக்கத்தின் விளிம்பில் விருப்பமான கலரில் கயிற்றை பசை வைத்து ஒட்டவும்.

நீங்களே செய்யலாம்... கலக்கலான கர்ட்டன் ஹோல்டர்!

ஸ்டெப் 5

கயிற்றை ஒட்டிய பிறகு மறுபக்கத்தில் அலங்காரக் கற்களை ஒட்டினால் அழகான கர்ட்டன் ஹோல்டர் ரெடி. இந்த ஹோல்டர் நீண்ட நாள்களுக்கு வர வேண்டும் என நினைத்தால் கார்டு போர்டுக்கு பதில் மரத்தில் வெட்டியும் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism