Published:Updated:

`பியூட்டி’ ஐஸ்வர்யா, `கிளாமர்’ வித்யா பாலன், `சான்ஸே இல்ல’ சன்னி லியோன்... டபூவின் 2020 காலண்டர்!

ஷாருக் முதல் சன்னி லியோன் வரை இடம்பெற்றிருக்கும் டபூவின் காலண்டர் படங்கள், 'டபூவின் போட்டோ ஷூட்டுக்கு ஆடை தேவையில்லை' என மீம்ஸ் போடுமளவுக்கு வைரல் ஆகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகைகளை மட்டுமல்ல, நடிகர்களையும் கிளாமராக 'க்ளிக்' செய்து அசத்தியிருக்கிறார், பாலிவுட்டின் பிரபல ஃபேஷன் மற்றும் செலிபிரிட்டி போட்டோகிராஃபர் டபூ ரத்னானி.

ஜி வெங்கட்ராம், கார்த்திக் சீனிவாசன்
ஜி வெங்கட்ராம், கார்த்திக் சீனிவாசன்
instagram

கோலிவுட்டின் ஸ்ருதிஹாசன், மேகா ஆகாஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, சிம்பு, பரத், அருண்விஜய், ஜீவா இன்னும் பல செலிபிரிட்டிகளை வைத்து கான்செப்ட் போட்டோ ஷூட் செய்து 2020-ம் ஆண்டுக்கான காலண்டராக வெளியிட்டனர், தமிழகத்தின் பிரபல செலிபிரிட்டி போட்டோகிராஃபர்களான ஜி. வெங்கட்ராம் மற்றும் கார்த்திக் சீனிவாசன்.

காலண்டர் ஃபீவர், இப்போது பாலிவுட்டில். பாலிவுட் செலிபிரிட்டி போட்டோகிராஃபரான டபூ ரத்னானி இத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தன்னுடைய 21-வது காலண்டரை வெளியிட்டுள்ளார்.

டபூ ரத்னானி
டபூ ரத்னானி
kalikwest

அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என பச்சன் குடும்பத்தினர், ஷாருக்கான், சயிஃப் அலிகான், ஜான் ஆப்ரஹாம், ஜாக்கி ஷராஃப்பின் மகன் டைகர் ஷராஃப், அனுஷ்கா ஷர்மா, சன்னி லியோன், அலியா பட், வித்யா பாலன் மற்றும் பல நட்சத்திரங்களை வைத்து புகைப்படங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார் டபூ ரத்னானி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலண்டர் வெளியீட்டு விழாவில், தான் க்ளிக்கிய அனைத்து புகைப்படங்களையும் ஃபிரேம் போட்டு கண்காட்சிபோல வைத்திருந்தார் டபூ. ஃபிரேம்களுக்குள் போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்த பிரபலங்கள் முதல், நடிகை ரேகா, இஷாகோபிகர், ஜாக்கி ஷராஃப் உள்ளிட்ட விருந்தினர்கள் வரை நட்சத்திரக் கூட்டமாக செலிப்ரிட்டிகள் காலண்டர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

டபூவின் 2020  காலண்டர் நிகழ்ச்சி
டபூவின் 2020 காலண்டர் நிகழ்ச்சி

இந்த 2020 காலண்டரின் ஹைலைட், சன்னி லியோன் முதல் ஷாருக்கான் வரை ஆண் பெண் பாரபட்சமில்லாமல், பெரும்பாலான பிரபலங்களை 'ஸ்கின் ஷோ' செய்ய வைத்திருக்கிறார் டபூ.

இந்த காலண்டரில் உள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யாராய்
instagram

உலக அழகியாக கிரீடம் சூடி 26 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் அழகிப்போட்டியில் டைட்டிலை வென்றுவிடும் தோற்றத்தில் ஸ்வீட் 16 லுக்கில் ஐஸ்வர்யா ராய்.

வித்யா பாலன்

பாரம்பர்யம், கான்டெம்ப்ரரி என எல்லா தோற்றங்களிலும் கலக்கும் வித்யா பாலன், கிளாமர் லுக்கிலும் பாஸ் மார்க்.

ஹ்ருத்திக் ரோஷன்

ஹ்ருத்திக் ரோஷன்
ஹ்ருத்திக் ரோஷன்
instagram

கோலிவுட்டின் எவர்கிரீன் நாயகர்கள் அரவிந்த்சாமி, மாதவன் போல பாலிவுட்டின் எவர்கிரீன் ஸ்வீட் ஹார்ட் ஹ்ருத்திக் ரோஷனின் ஹாட்டான அயன்மேன் லுக்.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா
instagram

கண்ணாடிகள் பதித்த ரெஃப்ரெஷிங் புளூ உடையில் ஸ்வீட்டாக இருக்கும் கோலியின் நாயகிக்கு கோலிவுட்டிலும் ஃபேன் ஃபாலோயர்கள் எக்கச்சக்கம்.

ஜான் ஆப்ரஹாம்

ஜான் ஆப்ரஹாம்
ஜான் ஆப்ரஹாம்
facebook

பெண்களையே மிஞ்சும் அளவுக்கு ஹாட் அண்டு செக்ஸி லுக் ஆப்ரஹாம்.

சன்னி லியோன்

கேப்ஷன் தேவையில்லைதானே?!

பூமி பட்நேகர்

பாத் டப்பிலிருந்து ஒரு ஃப்ரெஷ் லுக் பூமி பட்நேகர்.

சயிஃப் அலிகான்

கரீனா கபூரை மட்டுமல்ல, இந்த ரெட்ரோ லுக்கில் காண்பவர் அனைவரையும் கவர்கிறார் சயீஃப் அலிகான்.

க்யாரா அத்வானி

ஆதாமின் ஏவாள் இவள்தானோ என எண்ணவைக்கிறது க்யாராவின் இந்த போஸ்.

ஷாருக்கான்

ஷாருக்கான்
ஷாருக்கான்

அடுத்த ஜேம்ஸ்பாண்டு படத்துக்கு அப்ளை செய்யலாம் போலிருக்கிறது ஷாருக்கானின் ஃபிட் அண்டு மேன்லி லுக்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

குதிரைக்கு இணையாக கம்பீர போஸ் கொடுக்கும், பாலிவுட் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த ஜாக்குலின்.

`தோதி புடவை' - ஜோதிகாவின் நியூ லுக் ரகசியம்!

டைகர் ஷராஃப்

டைகர் ஷராஃப்
டைகர் ஷராஃப்

கட்டுமஸ்தான உடலை காட்டிக்கொண்டிருக்கும் தன்னுடைய குட்டிப் புலியான டைகர் ஷராஃப்பின் புகைப்படத்துக்கு முத்தமிடும் ஜாக்கி ஷராஃப்.

நியூடு கலர், நேக்கட் ஸ்டைல்... இந்திய நடிகைகளின் இன்டர்நேஷனல் ஃபேஷன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு