Published:Updated:

`உங்களாலும் உதவ முடியும்!'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்

இதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் 'The Live Love Laugh foundation'-ல் உள்ள மன அழுத்தத்தோடு போராடும் மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் தீபிகா.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

உலக மனநல தினத்தன்று, தன்னுடைய சொந்த ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில், `தி தீபிகா படுகோன் க்ளோஸெட் (The Deepika Padukone Closet)' எனும் புதிய பகுதி ஒன்றைத் திறந்திருக்கிறார் தீபிகா. இதில், தன்னுடைய அலமாரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் ஆபரணங்களை விற்பனைக்கு வைத்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் `The Live Love Laugh foundation'-ல் உள்ள மன அழுத்தத்தோடு போராடும் மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் தீபிகா.

Deepika
Deepika

மனச்சோர்வு மற்றும் மனநலப் பிரச்னைகள் குறித்து மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் `பத்மாவத்' நடிகை, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவேற்றியிருக்கிறார். அதில், `என் வலைதளம் பற்றிய புதிய அறிவிப்பை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தேன். என்னுடைய இந்தப் புதிய க்ளோஸெட்டிலிருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளின் பணமும் நல்ல காரணத்துக்குச் செல்ல இருக்கிறது. இதன்மூலம், மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உங்களால் உதவ முடியும்" என்று கூறியிருக்கிறார் தீபிகா.

சில்லென பிரியாணி லஸ்ஸி, சூடாக ஆலு டிக்கி... `சாட்' வகைகளில் அசத்தும் `மட்கா சாட் கபே!'

இந்தக் காணொலி பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே, வலைதளத்தில் ஏற்றப்பட்ட பெரும்பாலான ஆடைகள் விற்பனையாகின.

Deepika Padukone's Closet
Deepika Padukone's Closet

இதில், தீபிகாவின் பிரபலமான ஏர்போர்ட் லுக் உடைகள், அனாமிகா கண்ணா அனார்கலி சூட், வெஸ்டர்ன் ஆடைகள், ஜிம் ஆடைகள் என ஏராளமான வெரைட்டிகள் இடம்பெற்றிருந்தன. ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பமாகும் இந்த க்ளோஸெட்டில் மிகவும் விலையுயர்ந்த பொருள், Gucci Sylvie ஹாண்டில் பேக். இதன் விலை 55,000.

ஷாப் அண்ட் ஹெல்ப்!