Published:Updated:

சந்தை விலையில் டிசைனர் ஆடைகள்; கலக்கிய கங்கனா! -`லோட்டஸ் மேக்-அப் ஃபேஷன் வீக்' ஹைலைட்ஸ்

'தாம் தூம்' நடிகை கங்கனா, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிராண்ட் ஃபைனலில், ப்ளெயின் வெள்ளை சட்டை, கறுப்பு tulle ஸ்கர்ட், சில்வர் குந்தன் நெக்லஸ் அணிந்து ராம்ப்பில் தோன்றினார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா வழங்கிய 'லோட்டஸ் மேக்-அப் இந்தியா ஃபேஷன் வீக்' கடந்த வாரம் புது டெல்லியில் நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோவில், 2020-ம் ஆண்டின் கோடைக்கால பிரத்யேக கலெக்ஷனை பல முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் வெளியிட்டனர்.

Lotus Make up India Fashion Week
Lotus Make up India Fashion Week

பல டிசைனர் ஆடைகள், சாதாரண சந்தை விலையில் விநியோகம் செய்யப்பட்டது இந்நிகழ்வின் சுவாரஸ்ய ஹைலைட்டாக அமைந்தது. பல ஆண்டுகளாக `கியூரேட்டட் ஸ்டாக்ரூம் விற்பனை (Well curated Stockroom Sale)', ஷாப்பிங் விரும்பிகளின் மைய இடமாக இருந்துவருகிறது. இங்கு, நாடெங்கிலுமிருந்து ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து, அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற வழி வகுக்கிறது. லோட்டஸ் ஃபேஷன் வீக்கின் முக்கிய இலக்காக இதுவே இருந்தது.

`உங்களாலும் உதவ முடியும்!'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்

மேலும், நிகழ்ச்சியின் நிறைவாக 'பாலிவுட் குயின்' கங்கனா ரணாவத்தின் ராம்ப் ஷோ இடம்பெற்றது. பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பங்குபெற்ற இந்த ஷோவில், 'தாம் தூம்' நடிகை கங்கணா, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிராண்ட் ஃபைனலில், பிளெயின் வெள்ளை சட்டை, கறுப்பு tulle ஸ்கர்ட், சில்வர் குந்தன் நெக்லஸ் அணிந்து ராம்ப்பில் தோன்றினார்.

Highlights of Fashion Week
Highlights of Fashion Week

மேலும், செலிப்ரிட்டி ஆடை வடிவமைப்பாளர்களான அனாமிகா கண்ணா, ராஜேஷ் பிரதாப் சிங், வெண்டெல் ராட்ரிக்ஸ் மற்றும் மனிஷ் அரோரா, தங்களின் புதிய படைப்புகளை 'My Fashion, My Tribe' எனும் தலைப்பில் வெளியிட்டது கூடுதல் சிறப்பு.