Published:Updated:

`ஆடம்பர உடைகளைத் தவிர்த்து வசதியான உடைகளுக்கு மக்கள் மாறுவார்கள்!’ - காரணம் பகிரும் டிசைனர்

ஆடை
ஆடை

கொரோனாவுக்கு முன் நினைத்தபோதெல்லாம் புதிய உடைகளை வாங்கும் பழக்கம் இருந்தது மக்களிடம். இப்போது, நிலைமை மாறியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு, அதைத் தொடர்ந்த ஊரடங்கு போன்றவற்றால் உலகம் முழுவதிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் தொழில்துறைகளிலும் பெரும் நஷ்டம். இது மக்களின் நுகர்வுத் திறனில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஆடைத்துறையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018!
முதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018!

தற்போது மக்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். கொரோனாவுக்கு முன் நினைத்தபோதெல்லாம் புதிய உடைகளை வாங்கும் பழக்கம் இருந்தது மக்களிடம். இப்போது, நிலைமை மாறியிருக்கிறது.

`ராம்ப் வாக் செய்த மாடல்களுக்கு கொரோனா மாஸ்க்!' - பாரிஸ் ஃபேஷன் வீக்கில் அசத்திய ஆடை வடிவமைப்பாளர்

வொர்க் ஃப்ரம் ஹோமில் வீட்டிலேயே வேலைபார்க்கும் பலருக்கும் புதிய உடைகளைவிடவும் வசதியான உடைகளே தேவை என்றாகியிருக்கிறது. மேலும், கடைகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. ஆடைத் துறையில் இப்போதைக்குப் புதிய வரவுகளை எதிர்பார்க்க முடியாது. இத்தகைய சூழலில் லாக்டௌன் தளர்வுக்குப் பின் இந்தத் துறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என அறிய சென்னையின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ரெஹானேவிடம் பேசினோம்.

துணிகள்
துணிகள்

``ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மக்கள் தேவையான பொருள்களை மட்டுமே வாங்குவர். இதனால் அனைத்துத் திருமணங்களும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமணத்துக்காக மக்கள் ஆடம்பர உடைகளை வாங்கும் சூழ்நிலையும் இப்போது இல்லை. இதனால் அடுத்த சில மாதங்கள் ஆடை விற்பனைத் துறைக்கு பெரும் சிக்கலாகவே இருக்கும்.

ஷாப்பிங் ஸ்பெஷல் - உங்கள் குழந்தைக்கு எந்த டிரஸ்?

மக்கள் கைகளில் பணம் இல்லை. இணையம் மூலம் உடைகள் வாங்கும் மக்கள் மிகக் குறைவானவர்களே. ஆடை விற்பனைத் துறையில் ஈடுபட்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டதால், விற்பனையும் புதிய வரவும் பாதிக்கப்படும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகே இந்த நிலை மாறும்.

ஆடை வடிவமைப்பாளர் ரெஹானே
ஆடை வடிவமைப்பாளர் ரெஹானே

இனி வரும் காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தும். இதனால் இவர்களின் ஆடைத் தேர்விலும் பெரிய மாற்றம் ஏற்படும். வீட்டில் இருக்கும்போது யாரும் ஆடம்பர உடைகளை அணிய விரும்ப மாட்டார்கள். இதையடுத்து சாதாரண உடைகளை வாங்குவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவர்.

`3 மணிநேரத்துக்கே முடியல... அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்

பிற மக்களைப் பார்த்துப் பழகும்போதுதான் மனிதர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. ஆனால், இப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருக்கும் காரணத்தால் தேவைகளும் குறையும். இனி வரும் காலங்களில் நோய்த்தொற்று குறைந்து, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பினால் ஆடைகளுக்கான தேவைகளும் அதிகரிக்கலாம். ஒருவேளை கொரோனாவின் தாக்கம் தொடர்ந்தால் இதே நிலைதான் நீடிக்கும்.

டிசைனர் உடை
டிசைனர் உடை

நோய்த்தொற்று, வேலையிழப்பு, வருமானமின்மை எனப் பல காரணங்களால் மக்களின் மனநிலை நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதுத் துணிகளை வாங்குவதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். இந்த மந்த நிலையானது எதிர்காலத்தில் மாற வேண்டும் என்பதே டெக்ஸ்டைல் துறையினரின் விருப்பமும்" என்றார்.

Vikatan

சமீபத்திய மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தின் ஆய்வுப்படி டெக்ஸ்டைல் துறையில் உலகிலேயே ஆறாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச டெக்ஸ்டைல் பிராண்டுகள் வரவிருந்தன. ஆனால், கொரோனா தொற்று காரணமாகத் தற்போது அது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டிரஸ் கோடு
டிரஸ் கோடு

ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகும் இந்தியாவில் துணி விற்பனைக் கடைகள் வெறும் 25 சதவிகித அளவுக்கே திறக்கப்படக்கூடும் என ரீடெயில் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத எதிர்காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு