Published:Updated:

`தோதி புடவை' - ஜோதிகாவின் நியூ லுக் ரகசியம்!

எந்த உடையணிந்தாலும், அலட்டலும் ஆடம்பரமும் இல்லாத தோற்றத்தில் வரும் கம்பீரம்தான், ஜோதிகாவின் ப்ளஸ்.

ஜோதிகா
ஜோதிகா

தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ஸ்கோர் செய்வதுபோல், உடை, நகை எனத் தன்னுடைய தோற்றத்தின்மூலம் ஆஃப் ஸ்கிரீனிலும் ஸ்கோர் செய்துகொண்டிருக்கிறார், ஜோதிகா.

ஜோதிகா / மகளிர் மட்டும்
ஜோதிகா / மகளிர் மட்டும்

அப்படி, மைத்துனர் கார்த்தியுடன் சமீபத்தில் கலந்துகொண்ட பிரஸ் மீட்டில், வித்தியாசமான உடையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

படத்திலும் சரி, சினிமா நிகழ்ச்சிகளிலும் சரி, தான் அணிந்துவரும் உடை, தேர்ந்தெடுக்கும் நிறங்கள், நகைகள் என ஒரு கம்ப்ளீட் லுக்கில் தன்னையும் தன்னுடைய கதாபாத்திரங்களையும் பிரதிபலிப்பதில் வல்லவர், ஜோதிகா.

ஜோதிகா
ஜோதிகா

எந்த உடையணிந்தாலும், அலட்டலும் ஆடம்பரமும் இல்லாத தோற்றத்தில் வரும் கம்பீரம்தான், ஜோதிகாவின் ப்ளஸ்.

கம்ப்ளீட் கபுள் லுக்!

2017-ம் வருடம் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியில், சூர்யாவுடன் `தோதி' ஸ்டைல் புடவையில் தோன்றினார் ஜோ. `பிளாக் அண்டு பிளாக் ஒன்லி' என இந்த லவ் அண்டு லவ் ஒன்லி கபுள், ஜோடியாக வலம் வந்து அனைவரையும் ரசிக்கவைத்தனர்.

சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா

டஸ்ஸர் சில்க்கில் சிக்கன்காரி வேலைப்பாடுகள் மற்றும் ஜியார்ஜெட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட கறுப்பு மற்றும் கோல்டன் கலர் `தோதி' புடவை அது.

காதுகளில் நோ கம்மல். ஆன்டிக் கோல்டு நிறத்தில் ஸ்டேட்மென்ட் நெக்லஸ். கோல்டன் நிற வாட்ச், கிளட்ச். கோல்டன் லோஃபர் ஷூ என அந்நிகழ்ச்சியில் எலகென்ட் லுக்கில் அசத்தினார் ஜோதிகா.

மீண்டும் தோதி புடவை!

`மகளிர் மட்டும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாடர்ன் தேவதைபோல வெள்ளை நிற `தோதி' புடவையில் வந்து ரசிகர்களை `அட' போட வைத்தார்.

`தோதி' புடவையில் ஜோதிகா
`தோதி' புடவையில் ஜோதிகா

முழுக்க முழுக்க ஜியார்ஜெட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட அந்த வெள்ளை நிற தோதி புடவையில், சிக்கன்காரி மற்றும் ஃபாயில் ப்ரின்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதற்குப் பொருத்தமாக, ஆன்டிக் கோல்டு நெக்லஸ் மற்றும் கோல்டன் நிற வாட்ச் என கலக்கலாகத் தோற்றமளித்த ஜோதிகா, இம்முறையும் கம்மலுக்கு `தடா' போட்டிருந்தார்.

ஜோதிகாவின் `தோதி' காதல்!

தற்போது, மீண்டும் தன்னுடைய `தோதி' காதலைச் சொல்லும் விதமாக கார்த்தியுடன் கலந்துகொண்ட பிரஸ் மீட்டில், `தோதி' புடவைக்கு பதில் சற்று மாறுதலாக `தோதி' டிரெஸ் அணிந்து, பழைய `பப்ளி பியூட்டியாக'க் காட்சிதந்தார்.

ஜோதிகாவின் நியூ லுக் 'தோதி டிரெஸ்'
ஜோதிகாவின் நியூ லுக் 'தோதி டிரெஸ்'
வக்கீல் அஜித், `ராயப்பன்’ விஜய், பூ புடவை விஜய் சேதுபதி... 2019-ன் டிரெண்டிங் லுக் யாருக்கு?
#VikatanRewind2019 #VikatanPoll

அஜ்ரக் முறையில் செய்யப்பட்ட ப்ரின்டிங்குடன், சாட்டின் போன்றிருக்கும் `மொடால்' மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட இந்த வித்தியாசமான `தோதி' ஸ்டைல் டிரெஸ்ஸில், `குஷி' லுக் பப்ளி ஜோதிகாவை நினைவுபடுத்தினார். துணியிலேயே பெல்ட் போன்று டிசைன் செய்யப்பட்டிருப்பது, இந்த உடையின் ஹைலைட்.

கண்களுக்கு இதமான கிரே அண்டு வொயிட் நிறத்துக்குப் பொருத்தமாக வலது கை நிறைய ஆக்ஸிடைஸ்டு வளையல்களும், மறு கையில் சில்வர் நிற வாட்ச் மற்றும் பீடட் பிரேஸ்லெட் மற்றும் சில்வர் நிற கட் ஷூ என ரொம்பவே ஃபிரெஷ்ஷான லுக்கில் அசரடித்தார்.

`சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே', `ஒரு ஊரில், அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே...' என இவரின் தோற்றத்தை ரசித்து எழுதிய பாடல்கள் அனைத்துமே இவரின் அடையாளம்.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...

இனி... `தோதி டிரெஸ் அணிந்து வந்த சொர்க்கமே' என்று பாடுவாரோ சூர்யா..!