Published:Updated:

ஷாப்பிங் ஸ்பெஷல் - உங்கள் குழந்தைக்கு எந்த டிரஸ்?

ஷாப்பிங் ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் ஸ்பெஷல்

பண்டிகை கால ஷாப்பிங்கில் நாம் நிஜமாகவே சந்தோஷப்படுவது குழந்தைகளுக்கு நல்ல டிரஸ் எடுக்கும்போதுதான்.

ஷாப்பிங் ஸ்பெஷல் - உங்கள் குழந்தைக்கு எந்த டிரஸ்?

பண்டிகை கால ஷாப்பிங்கில் நாம் நிஜமாகவே சந்தோஷப்படுவது குழந்தைகளுக்கு நல்ல டிரஸ் எடுக்கும்போதுதான்.

Published:Updated:
ஷாப்பிங் ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
ஷாப்பிங் ஸ்பெஷல்

வ்வொரு விஷயமாகப் பார்த்து, பார்த்து வாங்கும் அந்தத் தருணம் ரொம்பவே அழகானது. அப்படி தீபாவளி ஷாப்பிங்குக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் உங்களுக்குச் சில டிப்ஸ் வழங்குகிறார் ஆடை வடிமைப்பாளர் பிரியா ரீகன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • தேர்ந்தெடுக்கும் ஆடைகள், குழந்தைகளின் வசதிக்கு ஏற்றதா என்பதே முதல் விஷயம். உடலில் குத்துவதுபோன்ற துணி வகைகளோ, டிசைன்களோ இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். குழந்தையின் உயரம், வயதுக்கு உரிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு வயதுக் குழந்தைக்கு மிக நீளமான ஃப்ராக் எடுத்துவிட்டால், அதை அணிந்துகொண்டு நடப்பதே சிரமமாகிவிடும். டிரஸ் பகட்டாக இருப்பதைவிடவும் குழந்தைக்கு வசதியாக இருப்பதே அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ஆடைகள் தேர்வில் குழந்தைகளைப் பங்கேற்க வையுங்கள். என்ன பட்ஜெட் என்பதைக் கூறி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒருவேளை, தரமற்ற துணி, பொருத்தமற்ற டிசைன் என அவர்கள் தேர்வு செய்திருந்தால், அவை குறித்துப் பேசிப் புரிய வையுங்கள். உங்களின் பட்ஜெட்டைவிடச் சற்று அதிகம் என்றாலும் முடியாது என்று சொல்லாது வாங்கிக்கொடுங்கள். அதாவது 1000 ரூபாய் உங்கள் பட்ஜெட் எனில், 1100 ரூபாய்க்கு உடையைத் தேர்வு செய்திருந்தால் அனுமதியுங்கள். அதேநேரம், 4000, 5000 ரூபாய் உடைகள் என்றால், எடுத்துச்சொல்லி மறுத்துவிடுங்கள்.

ஷாப்பிங் ஸ்பெஷல் - உங்கள் குழந்தைக்கு எந்த டிரஸ்?
  • இப்போதைய நம் ஷாப்பிங் தீபாவளிப் பண்டிகைக்காகவே இருக்கும். எனவே, அந்தப் பண்டிகைக்கு ஏற்ற உடைகளாக இருப்பது நல்லது. உதாரணமாக, பட்டாசு வெடிக்கும் குழந்தைகளுக்குத் தரையில் புரளும்விதமான டிரஸ்களாக இல்லாது, பேன்ட், டாப்ஸ் என்பதாக எடுக்கலாம். அடுத்து, இப்போது வெயில் காலம் முடிந்து குளிர்காலத்திற்குச் செல்லும் நாள்கள். எனவே, தேர்ந்தெடுக்கும் டிரஸ்கள் குளிர்காலத்திற்குத் தகுந்ததாக இருப்பது அவசியம். ஸ்லீவ்லெஸ் போன்ற டிரஸ்களைத் தவிர்க்கலாம்.

  • குழந்தைகள் விரைவாக வளருபவர்கள். அதனால், அதிக விலையுள்ள டிரஸ்கள் எடுக்க வேண்டாம். ஓரிரு மாதங்களில் அந்த உடை, குழந்தைகளுக்குப் பொருந்தாமல் போய்விடலாம். மேலும் 10000 ரூபாய்க்கு உடை வாங்குவதற்குப் பதில், 2,000 ரூபாய்க்கு உடை வாங்கி, மீதிப்பணத்தை வேறு வகையில் குழந்தையின் சேமிப்பாகப் பயன்படுத்தலாம்.

  • பண்டிகை என்றால் குழந்தைகளுக்கு இரண்டு, மூன்று செட் டிரஸ் வாங்குவது இயல்பாகிவிட்டது. அவற்றில் ஒன்று நம் பாரம்பர்ய உடைகளான, பட்டுப்பாவாடை, வேட்டி சட்டை என்று எடுக்கலாம். பொதுவாக, பெண் குழந்தைகளுக்குப் பல விதமான டிரஸ் வகைகள் இருக்கும். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு வகைகள் குறைவு. அதனால், வேட்டி சட்டை, குர்தாஸ் போன்றவற்றை எடுக்கலாம்.

  • ஃபேமிலி கலர் என்பது வேண்டவே வேண்டாம். பண்டிகை அல்லது விசேஷத்திற்கு, குடும்பத்தினர் எல்லோரும் ஒரே கலர் டிரஸ்ஸில் செல்கின்றனர். பண்டிகைக்கு இதை மனத்தில் வைத்து டிரஸ் எடுக்கும்போது, ஒரு குழந்தையின் அம்மா அல்லது அப்பாவிடம் இருக்கும் உடைகளில் இல்லாத கலரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால், குழந்தையின் விருப்பம் என்பது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. மேலும், பள்ளியில் திங்கள் முதல் சனி வரை யூனிஃபார்ம் போட்டுச் சென்ற குழந்தைக்கு, மீண்டும் இது இன்னொரு யூனிஃபார்ம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும்.

  • பெண் குழந்தை என்றால் பிங்க்; ஆண் குழந்தை என்றால் டார்க் புளூ என்று வண்ணங்களில் பால்பேதம் பார்க்கும் எண்ணத்தை நம் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டாம். குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ற நிறங்களைத் தயங்காமல் தேர்வு செய்யும் உரிமையைக் கொடுங்கள். அவர்கள் தேர்வு செய்து சிம்பிளானதாக இருந்தாலும் பாராட்டுங்கள். ஒரு விஷயத்தை வாங்கவும் தவிர்க்கவும் வேண்டிய காரணங்களை உரையாடும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்துங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism