லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம்... டிரஸ்ஸிங் டிப்ஸ்...

டிரஸ்ஸிங் டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிரஸ்ஸிங் டிப்ஸ்...

உங்களின் வார்ட்ரோபை மாற்றியமைக்க பொருத்தமான நேரம் இது.

 பிரபா
பிரபா
கொரோனா காரணமாக பெரும்பாலானோர் வொர்க் ஃப்ரம் முறையில் இருக்கிறோம். அலுவலகம் செல்லும்போது அன்றாடம் என்ன ஆடை அணிவது என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். இப்போது அந்தக் கவலையில்லை. வசதிக்கேற்ப ஆடை அணிந்து கொள்ளலாம். மேலும் உங்களின் வார்ட்ரோபை மாற்றியமைக்க பொருத்தமான நேரம் இது. அதற்கான டிப்ஸோடு வொர்க் ஃப்ரம் ஹோமுக்கான டிரஸ்ஸிங் டிப்ஸையும் பகிர்ந்து கொள்கிறார் பொட்டிக் உரிமையாளர் பிரபா.
வொர்க் ஃப்ரம்  ஹோம்... டிரஸ்ஸிங் டிப்ஸ்...

வார்ட்ரோப் கிளீனிங்...

இதுநாள்வரை பழைய ஆடைகளையோ அல்லது பொருத்தமில்லாத ஆடைகளையோ வேண்டாம் என கழிக்க நேரம் இல்லாமல் போயிருக்கலாம். வார்ட்ரோபில் சல்வார் ஒருபுறம், துப்பட்டா ஒருபுறம் என இருக்கும். சரியான ஆடைகளைத் தேடி எடுத்து அணிந்துகொள்வதே பெரிய சவாலாக இருக்கும். இந்தப் பிரச்னையைச் சரி செய்ய இதுவே சரியான நேரம்.

உங்களின் வார்ட்ரோபில் நீண்ட காலமாக நீங்கள் பயன்படுத்தாத ஆடைகளை எடுங்கள். ஆடைகள் இறுக்கமான, தையல் பிரிந்த, பழைய துணிகளையெல்லாம் ஒருமுறை செக் செய்து பாருங்கள். அணியும் நிலையில் உள்ளவற்றை, தேவையான ஆல்டரேஷன்கள் செய்து மடித்து வைக்கலாம். பழைய உடைகளில் வார்லி ஆர்ட், மிரர் ஆர்ட், ஸ்டோன் வொர்க் செய்து அணிந்தால் நியூ லுக் கிடைக்கும்.

சில உடைகளை ஓவர் லே, வித்தியாசமான துப் பட்டாக்கள், டிரெண்டியான நகைகளுடன் மேட்ச் செய்து அணியலாம். உங்களின் வார்ட்ரோபில் டாப்ஸ், லெகின்ஸ், ஷர்ட், ஸ்கர்ட்கள், பேன்ட், துப்பட்டாக்கள், புடவைகள், பிளவுஸ் எனத் தனித்தனியாக மடித்துவைத்தால் மிக்ஸ் மேட்ச் செய்து அணிய வசதியாக இருக்கும்.

வொர்க் ஃப்ரம்  ஹோம்... டிரஸ்ஸிங் டிப்ஸ்...

எப்போதும் நீட் லுக்...

வொர்க் ஃப்ரம் ஹோமில் தானே இருக்கிறோம் எனச் சிலர் நைட் டிரஸ்ஸுடனே அமர்ந்து அலுவலக வேலைகளைச் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது ஒருவித சோம்பல் இருக்கும். திடீரென்று நடத்தப்படும் ஆன்லைன் மீட்டிங்குக்குத் தயாராகும் டென்ஷன் இருக்கும். எனவே வீட்டிலிருந்து வேலை செய்தாலும் எப்போதும் நீட்டான ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. வார்ட்ரோபில் இருக்கும் பழைய தளர்வான ஆடைகளை இந்த நேரத்தில் பயன் படுத்திக்கொள்ளலாம்.

வொர்க் ஃப்ரம்  ஹோம்... டிரஸ்ஸிங் டிப்ஸ்...

லெகின்ஸ் தவிருங்கள்...

அலுவலகம் செல்லும்போது தவிர்க்க முடியாத காரணத்தால் லெகின்ஸையோ, ஜீன்ஸையோ பயன்படுத்துவோம். ஆனால் வீட்டில் இருக்கும்போது பலாசோ, ஃப்ரீ ஃபிட் பேன்ட், ஸ்கர்ட் போன்ற காற்றோட்டமான ஆடைகளை அணியலாம். வெயிலால் ஏற்படும் அலர்ஜி, வியர்க்குரு போன்றவை வராமல் இருக்கும்.

வொர்க் ஃப்ரம்  ஹோம்... டிரஸ்ஸிங் டிப்ஸ்...

நியூ லுக் கொடுக்கலாம்!

உங்களிடம் இருக்கும் பழைய சேலைகளை அனார்கலி யாகவோ, ஸ்கர்ட்டாகவோ மாற்றலாம். பழைய புடவை களில் பார்டர்களை எடுத்துவிட்டு கான்ட்ராஸ்ட்டான நிற பார்டர்களைத் தைக்கலாம். சின்ன சின்ன எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்தால் புது டிசைன் புடவை ரெடி.

உள்ளாடைகளைத் தவிர்க்காதீர்கள்...

வீட்டில் இருந்தாலும் உள்ளாடைகள் அணிவது அவசியம்.

காலை, மாலை என இரு வேளைகளும் குளித்து உள்ளாடைகளை மாற்றிக்கொள்வது நல்லது.