Published:Updated:

`ஒரு பெண் அதிகமாக ஒப்பனை செய்திருந்தால், அதிகம் காயமடைந்திருக்கிறாள்!' - ஆடை வடிவமைப்பாளரின் சர்ச்சைப் பதிவு

Sabyasachi Mukherjee with Deepika Padukone
Sabyasachi Mukherjee with Deepika Padukone

"ஒரு பெண் அளவுக்கு மீறி ஆடை அணிந்திருந்தால், அதிகப்படியான ஒப்பனை செய்திருந்தால், கவசம்போல் நகைகளை அணிந்திருந்தால் அவள் அவளுடைய வாழ்வில் அதிகப்படியாகக் காயமடைந்திருக்கலாம். அமைதியாக வலிகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்." - சபியாசச்சி முகர்ஜி

`திருமண ஆடை வடிவமைப்பாளர்' என்றாலே இந்தியப் பிரபலங்கள் பலருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர் சபியாசச்சி முகர்ஜி. இருபது ஆண்டுகளாக இந்தியாவின் டாப் டிசைனர்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் இவர், பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கும் பேர்போனவர். சமீபத்தில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வடிவமைத்த புதிய கலெக்ஷனை பதிவிட்டு, அதோடு சில வரிகளை இணைத்திருந்தார். அது சர்ச்சையாகியுள்ளது.

Sabyasachi Controverial Post
Sabyasachi Controverial Post

ராணி முகர்ஜி, வித்யா பாலன், அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் முதலிய பல பிரபலங்களின் திருமண ஆடைகளை வடிவமைத்த சபியாசச்சி, கடந்த வாரம் தன்னுடைய புதிய கலெக்ஷன் பற்றிய பிரசாரத்துக்காக நீண்ட வரிகளைப் பதிவேற்றினார்.

"ஒரு பெண் அளவுக்கு மீறி ஆடை அணிந்திருந்தால், அதிகப்படியான ஒப்பனை செய்திருந்தால், கவசம்போல் நகைகளை அணிந்திருந்தால் அவள் அவளுடைய வாழ்வில் அதிகப்படியாகக் காயமடைந்திருக்கலாம். அமைதியாக வலிகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். கண்மூடித்தனமான வலிகளை உள்ளே வைத்திருந்தாலும், அவளுடைய பெருமையையும் கண்ணியத்தையும் இறுக்கப் பிடித்துக்கொண்டு, உலகத்துக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள், உங்களுடைய பொன்னான நேரத்தை அவளுக்காகச் செலவிடுங்கள். முழுமையாகப் புரிந்துகொண்டு அவளைக் குணமாக்குங்கள். ஏனென்றால், மனிதனின் அரவணைப்புக்கு ஈடு இங்கு எதுவுமில்லை. விலையுயர்ந்த நகைகள்கூட இதற்கு ஈடில்லை!
சபியாசச்சி இன்ஸ்டா பதிவு
இந்தியப் பெண்களுக்குப் புடவை கட்டத் தெரியவில்லை என்றால், அது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம்.
சபியாசச்சி முகர்ஜி

இந்தப் பதிவு சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மற்றொரு பதிவை ஏற்றினார் சபியாசச்சி.

அதில், "எங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து, நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். இதைப் பதிவு செய்வதற்கு முன் நிறையவே யோசித்தேன். ஆனால், சில நேரங்களில் சில விஷயங்களை நேராகச் சொல்லி, சரியான பதிலைப் பெறுவதே முக்கியம் என்று நினைத்துத்தான் இதைப் பதிவு செய்தேன். இருபது ஆண்டுகளாக ஃபேஷன் துறையில் இருக்கிறேன். இதில் நான் பார்த்த பெரும்பாலான விஷயங்களை என்னுடைய பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறேன். பல பெண்கள், மகிழ்ச்சி மற்றும் சுய வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக ஃபேஷனை பார்க்கிறார்கள். வேறு சிலரோ, அவர்களின் வாழ்க்கையின் இடைவெளிகளையும் வெற்றிடங்களையும் நிரப்பும் 'Retail' சிகிச்சையாகப் பார்க்கிறார்கள்.

ஒல்லியான மாடல்களுக்காக ஆடைகள் வடிவமைத்துச் சோர்ந்துவிட்டேன்.
சபியாசச்சி முகர்ஜி
Sabyasachi with Aishwarya Rai
Sabyasachi with Aishwarya Rai

அதிகமாக அணிந்தாலும், குறைவாக அணிந்திருந்தாலும் ஒருவர் அணியும் உடையை வைத்தே அந்த நபரின் தனிமனித ஒழுக்கத்தையும் பண்புகளையும் முடிவு செய்யும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களின் உண்மையான இயல்பைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. என்னுடைய முதல் பதிவில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, வெளிப்புற தோற்றங்களுக்கு அப்பால்தான் அழகு இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதையே பதிவுசெய்ய நினைத்தேன். ஆனால், அது சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். அதற்காக, பழியை நான் ஏற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

என்னுடைய பதின்பருவத்தில் சுமார் 7 ஆண்டுகள் நான் அணிந்த உடைகளுக்காகக் கேலி, கிண்டல்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், பின்னாளில் சரியான ஆடை தேர்வுகள்மூலம் அவற்றைச் சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். ஒரு பிரச்னையில் நாம் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அதன்மீது நமக்குப் பேரார்வம் ஏற்படும். அந்தச் சமயத்தில் நாம் காது கேளாதவர்களாகிவிடுகிறோம். இந்த விவாதத்தில், ஜனநாயக ரீதியாகச் சேர அனைவரையும் அழைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

"வடிவேலு சர்ச்சை, `புள்ளிராஜா' விளம்பரம், இழந்த சொத்துகள்..." - கிருஷ்ணமூர்த்தி #RIPKrishnamoorthy

ஆடைகள் பற்றிய சர்ச்சைகள் இவருக்குப் புதிதல்ல. ஏற்கெனவே இவர் ஒரு பிரபல பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது, "ஒல்லியான மாடல்களுக்காக ஆடைகள் வடிவமைத்துச் சோர்ந்துவிட்டேன்" என்று கூறினார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகப் பலர் இவருக்கு எதிராகத் திரண்டனர். பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு மாநாட்டில் பேசியபோது, "இந்தியப் பெண்களுக்குப் புடவை கட்டத் தெரியவில்லை என்றால், அது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம்" என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்காக, பிறகு மன்னிப்பு கேட்டார் சபியாசச்சி.

அடுத்த கட்டுரைக்கு