Published:Updated:

``த்ரிஷா நடிகை என்பதைத் தாண்டி நல்ல மனுஷி!’’ - சிட்னி சிலேடன் #HBDTrisha

த்ரிஷா
த்ரிஷா ( instagram )

``நடிகை எனும் பிம்பத்தைத் தாண்டி த்ரிஷாவை ஒரு நல்ல மனுஷியா பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும்.’’

மாடலிங், சினிமா எனக் கலக்கிக்கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். இவ்விரு துறைகளிலும் தனக்கான தனி அடையாளத்தைப் பெற்று நிரந்தரமான இடம்பிடித்திருப்பவர் த்ரிஷா. சாமானியப் பெண்கள் அணியும் உடையிலிருந்து டிசைனர் உடைவரை எதைத் தேர்ந்தெடுத்து அணிந்தாலும் அதில் த்ரிஷாவுக்கான ஸ்பெஷல் டச் இருக்கும்.

Sidney Sladen - Trisha
Sidney Sladen - Trisha
instagram

குறிப்பாக, டிரெண்டு என்ன என்பதை அப்டேட் செய்துகொள்வதில் த்ரிஷா ஷார்ப். அவரின் நீண்டகால நண்பர் மற்றும் ஃபேஷன் டிசைனர் சிட்னி சிலேடன் த்ரிஷாவுடனான ஒரு 'த்ரோ பேக்' படம் மற்றும் அது குறித்த நினைவுகளைப் பகிர்கிறார்...

"நடிகை எனும் பிம்பத்தைத் தாண்டி த்ரிஷாவை ஒரு நல்ல மனுஷியா பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். அழகான தோற்றத்துடன், அழகான மனசுக்கும் சொந்தக்காரர். ஃபேஷன்தான் என்னையும் த்ரிஷாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது.

Trisha - Sidney Sladen
Trisha - Sidney Sladen
instagram

அவரோட ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை அவருடன் ஒரு ஃபேஷன் டிசைனராக மட்டுமல்லாமல், நல்ல நண்பர்னு சொல்ற அளவுக்கு எங்க உறவு தொடர்ந்துட்டு இருக்கு. த்ரிஷாவுக்கு பொதுவாகவே நல்ல ஃபேஷன் சென்ஸ் இருக்கும். அதிலும் டிரெண்டு என்ன என்பதில் அப்டேட்டடாக இருப்பார். அவரோட ஸ்டைல் மற்றும் சாய்ஸ் எப்போதுமே 'ரெடி டு வேர்' ஃபேஷன்தான்.

ஹீரோயின்களின் சினிமாக்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்கக் காரணமான நடிகைகள்ல த்ரிஷாவுக்குப் பெரும் பங்கு இருக்கு. தமிழ் சினிமாவைத் தாண்டி பிறமொழிப் படங்களிலும் கலக்கிக்கிட்டிருக்கிற நடிகை அவங்க.

Sidney Sladen - Trisha
Sidney Sladen - Trisha
instagram

நடிப்பு, தனித்துவமான ஸ்டைல்னு தன் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்க கடினமாக உழைக்கிறவங்க த்ரிஷா. தனக்கான கதை எதுனு தேர்வு செய்வதிலும் அவங்களுக்குத் தெளிவு அதிகம். இவையெல்லாம் இருப்பதால்தான் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அங்கீகாரத்துடன் இத்தனை வருஷங்களா முன்னணி நடிகையா இருக்காங்க'' என்றவர், த்ரிஷா, நயன்தாராவுடன் தான் இருக்கும் த்ரோபேக் புகைப்படம் பற்றி தொடர்ந்து பகிர்ந்தார்.

"தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் சகோதரி திருமணத்தில் எடுத்த புகைப்படம் இது. ராணாவோட ஃபேமிலியில் கிடைத்த நல்ல வரவேற்பு, கொண்டாட்டம் என எல்லாரும் அவங்கவங்களோட பிஸி ஷெட்யூலை மறந்து ரொம்பவே உற்சாகமா இருந்த நாள் இது.

#throwback
#throwback
instagram

த்ரிஷாவுடைய ஃபேஷன் எனக்கு அத்துபடி. அதுபோல நயன்தாராவுடைய ஃபேஷன் சென்ஸ் பத்தி சொல்லணும்னா, அவருக்கான உடை என்பது அவரோட சொந்த லேபிள் என முத்திரை குத்துமளவுக்கு தனக்கென ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்துட்டு வர்றார்'' என்று ஃபேஷன் டிசைனராக நோட் கொடுத்தவர்,

''இப்போ, இவங்க ரெண்டு பேரையும் நான் ஒரே நிகழ்ச்சியில சந்திக்கிறது அரிது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் இனிமையான நினைவுகளை ஞாபகப்படுத்தும் ஸ்பெஷல் படம் இது" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு