Published:Updated:

ஸ்டைலா... கெத்தா!

ஸ்டைலா... கெத்தா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டைலா... கெத்தா!

``எப்படிங்க இவ்ளோ ஸ்டைலா கெத்தா இருக்கீங்க...''

ஸ்டைலா... கெத்தா!

``எப்படிங்க இவ்ளோ ஸ்டைலா கெத்தா இருக்கீங்க...''

Published:Updated:
ஸ்டைலா... கெத்தா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டைலா... கெத்தா!

என்று சிலபல பிரபலங்களிடம் கேட்டோம். ஆடை ஐடியாக்களை அள்ளிக்குவித்தனர்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்துஜா

``என் டிரஸ்ஸிங்கைப் பொறுத்தவரை, வழக்கமா என் காஸ்ட்யூம் டிசைனர்தான் ஆப்ஷன்ஸ் கொடுப்பாங்க. அதுல வித்தியாச மானதா செலக்ட் பண்ணிப் போட்டுப்பேன். எதுவும் செட் ஆகலைன்னா, சிம்பிளா ஒரு சல்வாரோட கிளம்பிடுவேன். ஏன்னா, காலேஜ் படிக்கும்போதிருந்தே வசதியான உடைனா, சல்வார்தான். சொல்லப்போனா, நான் ஃபேஷன் ஃப்ரீக்கெல்லாம் கிடையாது. ஆனா, ஃபேஷன் அப்டேட்களை ரெகுலரா ஃபாலோ பண்ணுவேன். எனக்குப் பிடிச்ச காஸ்ட்யூம்களுக்கு டிரெண்டியான ஃபேஷன் டிசைன்களைச் சேர்த்துப்பேன். சுடச்சுட போட்டோஸ் போஸ்ட் ஆகுற சோஷியல் மீடியா ஏஜ்ல, வெரைட்டியான காஸ்ட்யூம்ஸ்ல வெளிப்படுத்திக்கிட்டாதான் மக்கள்கிட்ட லைக்ஸ் கிடைக்குது பாஸ்!

இந்துஜா
இந்துஜா

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்குப் பட்டாசு, ஸ்வீட்ஸ், டிரஸ் வாங்கிட்டு, சொந்த ஊரான வேலூருக்குப் போவதுதான் வழக்கம். ஆனா, இந்த முறை ‘பிகில்’ ரிலீஸ் ஆகறதால இந்த வருஷ தீபாவளி சிங்கார சென்னையிலதான். பண்டிகைக்குப் புடவை, ‘பிகில்’ ரிலீஸ் தியேட்டர் விசிட்டுக்கு சல்வார்னு தேர்வு பண்ணியிருக்கேன். ஐ..யம் வெயிட்டிங்!”

- கார்த்திகா; படம்: ஜோஷ்வா சுபிகா

ஜி.வி.பிரகாஷ்

‘`எனக்கு எப்பவுமே பிடிச்சது ஹிப்-ஹாப் ஸ்டைல்தான். அப்புறம், ஹூடீஸ் (Hoodies). அது செமயான டிரெண்டி லுக் கொடுக்கும். ஆன்லைன் ஷாப்பிங்தான் என்னோட சாய்ஸ். காரணம், ஆன்லைன்ல நிறைய வெரைட்டீஸ் கிடைக்கும். எப்பவுமே இன்டர்நேஷனல் டிரெண்ட்ஸை ஃபாலோ பண்ணு வேன்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

அதுல, எனக்கு எது ஃபிட் ஆகுமோ அதை வாங்குவேன். வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போகும்போது மட்டும், நேரடியா போய்ப் பார்த்து ஷாப்பிங் பண்ணுவேன். அங்க இருக்கிற டிரெண்ட், அந்த மக்களோட டிரஸ்ஸிங் சென்ஸை எல்லாம் தெரிஞ்சுக்கிறதே ஒரு அனுபவமா இருக்கும். அந்த வகையில அமெரிக்காதான் என்னோட ஃபேவரைட் ஷாப்பிங் ஸ்பாட்.

ஸ்டைலா... கெத்தா!

ஷூ மேல எனக்கு செம விருப்பம் உண்டு. ஸ்டைலிஷா, வித்தியாசமான கலர்களில் ஷூ வாங்குவேன். ஆன்லைன்ல ஷூ மாடல்கள் தேடிட்டேயிருப்பேன். பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்காத, வெளிநாடுகளில் கிடைக்கிற ஷூக்கள் பார்த்து, அங்க இருக்கிற நண்பர்கள்கிட்ட சொல்லியாச்சும் வாங்கிடுவேன். அப்போதானே ஒரு தனித்துவம் கிடைக்கும். ஃபேஷன்ல நான் ஒரு விஷயம் புதுசா முயற்சி பண்றேன்னா, அது இதுவரை இங்க யாரும் பண்ணாத அல்லது பண்ணத் தயங்குற விஷயமா இருக்கணும்னு நினைப்பேன்!”

படங்கள்: கிரண் சா

‘கயல்’ ஆனந்தி

“காஸ்ட்யூம்ஸ் எப்பவுமே நேர்த்தியாவும் எளிமையாவும் இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு எது சௌகர்யமா இருக்கோ அதுதான் நேர்த்தி, அதுதான் எளிமை. அப்படிப் பார்த்தா, குர்தாதான் என்னோட ஃபேவரைட். என் வார்ட்ரோப் முழுக்க குர்தா, லெகிங்ஸ், ஜெகிங்ஸ், பட்டியாலா, ஜீன்ஸ்தான் நிரம்பிக் கிடக்கும். நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதுகூட ‘காஸ்ட்யூம்ல நாம தனிச்சுத் தெரியணும்’னு நினைக்கமாட்டேன். கூட்டத்துல ஒருத்தியா இருந்தா போதும். சொல்லப்போனா, கிராண்ட் லுக் தரும் என்பதால ப்ரின்டட் உடையைக்கூடத் தவிர்க்கிற ஆள் நான்.

ஆனந்தி
ஆனந்தி

வெள்ளைதான் எப்போதும் பிடிச்ச நிறம். அந்த நிறத்துல ஒரு அமைதி இருக்கும். எப்பவுமே பேஸ்டல் கலர்ஸுக்கு (Pastel Colours) கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன்.

ஸ்டைலா... கெத்தா!

நான் டிசைனிங் கோர்ஸ் பண்ணியி ருக்கேன் என்பதால, `கலர் தியரி’ எனக்கு அத்துப்படி. என்னோட நிறத்துக்கு எந்த வண்ணம் ஒத்துப்போகும்ங்கிறதுல தெளிவா இருப்பேன். டிரஸ் வாங்கப் போகும் போது 20, 30 நிமிஷத்துக்குள்ள வாங்கிடுவேன். என்னைப் பொறுத்தவரை, கடைக்குப் போய் உடை வாங்குறதுதான் பிடிக்கும். எப்பவுமே அப்பா, அம்மா, தங்கச்சின்னு குடும்பமாகத்தான் ஷாப்பிங் போவோம். ஆன்லைன் ஷாப்பிங்ல இந்த சந்தோஷமெல்லாம் கிடைக்காது என்பதால அதுக்கு ஸ்ட்ரிக்ட்லி `நோ!”

‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ ஹேமா ருக்மணி

‘’ ‘சப்யாசச்சி’ மாதிரி பெரிய பிராண்டோ, இல்ல, சாதாரணக் கடைகளில் வாங்கிற சிம்பிள் சல்வாரோ, ஃபிட்டிங்தான் எனக்கு முக்கியம். அது சரியா இருந்தாலே நம்ம ஆடை பற்றிய தன்னம்பிக்கை நமக்கு வந்துடும். மேடை ஏறுகிற நிகழ்ச்சிகளில் நிச்சயமா பட்டுப்புடவைதான் கட்டுவேன். புடவையில ஒரு கமாண்டிங் கம்பீரம் இருக்கும். லினன் பட்டு, மூங்கா பட்டு, பனாரஸ் பட்டுப் புடவைகள் பிடிக்கும்னாலும், காஞ்சிபுரம் பட்டுல ரஃப் ஃபினிஷ் பட்டுதான் என் ஆல்டைம் ஃபேவரைட். நம்ம கடைகளில் 99% பட்டுப்புடவைகள் பளபளன்னுதான் இருக்கும். ஆனா, நான் தேடுறது ஒரு சதவிகிதம்கூடப் பளபளப்பில்லாத பட்டுப்புடவைகளை. அதனால, காஞ்சிபுரத்துல தறி நெய்யறவங்கிட்டேயே போய் பளபளப்பில்லாத பட்டுகளாப் பார்த்து வாங்கிடுவேன். புடவைகளை இன்னைக்கும் கட்டலாம், இருபது வருஷம் கழிச்சும் கட்டலாம்ங்கிறதால, அதுல பட்ஜெட் பார்க்கமாட்டேன்.

ஹேமா ருக்மணி
ஹேமா ருக்மணி

பட்டுப்புடவை கட்டினா, அது வெயிட்டா இருக்கு, வியர்க்குதுன்னு பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன். அசல் பட்டு கட்டினா வியர்க்காது. அதோடு பாலியஸ்டர் மாதிரி வேற ஃபேப்ரிக் கலந்திருந்தா, புடவை கனமா, மொடமொடப்பா இருக்கும்; கட்டும்போது வியர்க்கவும் செய்யும். பொதுவா, புதுசா வாங்கின பட்டுப்புடவையை நாலு தடவை வேற வேற மாதிரி மடிச்சு, உதறி, அயர்ன் பண்ணிக் கட்டினா, புடவை வயிற்றை விட்டு ஒரு அடிக்குத் தள்ளி நிக்காது. எங்க கிளம்பினாலும், ‘இன்னைக்கு சரியா டிரஸ் பண்ணலையோ’ன்னு சந்தேகம் வராத அளவுக்கு நேர்த்தியா கிளம்பணும். அந்த சென்ஸ் ஆஃப் நீட்னெஸ் எனக்கு எப்பவுமே இருக்கும்!”