Published:Updated:

மிஸ் யுனிவர்ஸ் டென்மார்க் போட்டியில் சென்னைப் பெண்...! - என்ன நடந்தது?

சென்னையில் பிறந்த இளம்பெண் ஒருவர் மிஸ்யுனிவர்ஸ் டென்மார்க் போட்டியின் இறுதிச் சுற்றுவரை சென்று அசத்தியிருக்கிறார்.

நார்வினி டேரி
நார்வினி டேரி

இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்த நார்வினி டேரி, தனது பெற்றோருடன் சிறுவயதிலேயே டென்மார்க் குடிபெயர்ந்தார். அங்கு பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்த அவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. பாடலாசிரியராகத் தனது கரியரைத் தொடங்கிய அவர், பின்னர் பின்னணிப் பாடகி, நடிகை என அடுத்தடுத்து வளர்ச்சியடைந்தார். மியூசிக் ஆல்பங்களில் நடித்து வந்த அவர், டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட `உயிர்வரை இனித்தாய்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நார்வினி டேரி
நார்வினி டேரி

டென்மார்க், கனடா, ஹாலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா, இலங்கை எனக் கடந்த 2014ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சாதனைத் தமிழா - 2016 விழாவில் 9 விருதுகளை அந்தப் படம் வென்றது. அதேபோல், நார்வே தமிழ்த் திரைப்பட விழாவிலும் உயிர்வரை இனித்தாய் படம் 2 விருதுகளை வென்றது. சிறந்த நடிகை விருதையும் நார்வினி வென்றார். ஐரோப்பியக் கண்டத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு படம், சர்வதேச அளவில் விருதுகளைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

அடுத்ததாக, நார்வினி நடித்த சினம்கொள் படம் கல்கத்தா கல்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த புதுமுகத் திரைப்படத்துக்கான விருதை வென்றதுடன், 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. மியூசிக் ஆல்பங்களையும் நார்வினி இயக்கி வருகிறார்.

நார்வினி டேரி
நார்வினி டேரி

முதல் இலங்கைத் தமிழ்ப் பெண் இயக்குநர் இவர் என்பதும் கூடுதல் தகவல். இவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மிஸ்யுனிவர்ஸ் டென்மார்க் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை சென்றார். அந்தப் போட்டியில் `Best charity ambassador' விருதையும் வென்று அசத்தியிருக்கிறார் நார்வினி.