Published:Updated:

ஹேர்ஸ்டைல் முதல் காலணி வரை... ஆண்களுக்குப் பெண்களிடம் லைக்ஸ் குவிக்கும் 5 விஷயங்கள்!

பெண்களிடம் லைக்ஸ் குவிக்க, கண்களைப் பறிக்கும் நிறத்தில் உடைகளை அணிவது, மல்லு வேட்டி மைனர்போல எப்போதும் சீன் காட்டிக்கொண்டிருப்பது என...

'இந்தப் பொண்ணுங்களையே புரிஞ்சுக்க முடியல' என்ற ஆண்களின் புலம்பல், பூமி இருக்கும் வரை ஓயாது. ஒரு பெண்ணின் மனதில் இடம்பெறுவது என்பது, நீங்கள் அவரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. முதற்கட்டமாக, ஒரு பெண்ணை உங்களைப் பார்க்க வைக்க, 'இவன்கிட்ட பேசலாம்' என்ற நம்பிக்கையைக் கொடுக்க, உங்கள் லுக் நீட் அண்ட் நோட்டபிளாக இருக்க வேண்டும். அதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஐந்து விஷயங்களை...

2
ஹேர்ஸ்டைல் முக்கியம் பாஸ்! ( pexels )

சூப்பர் ஹேர் முக்கியம் மிஸ்டர்!

பரட்டை ஹேர்ஸ்டைல், நெற்றியில் எண்ணெய் அருவியாக வழியும் ஹேர்ஸ்டைல், மூன்று பெளர்ணமிகளுக்கு ஒருமுறை தலைக்குக் குளிப்பது என அழுக்கு மூட்டையாக இருக்கும் ஆண்களைப் பிடிக்கும் என, சினிமா ஹீரோயின்கள் வேண்டுமானால் பாடலாம். அப்படிச் சொல்லத்தான் அவர்கள் கால்ஷீட் கொடுக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அப்படியிருக்கும் ஆணை ரசிக்கும் பெண்கள்... ரொம்ப அரிது!

துருவ்

சலூனுக்குச் சென்று கச்சிதமாக ஹேர் கட் செய்து, தினமுமோ, இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ ஷாம்பூ போட்டு தலைக்குக் குளித்து, துருவ் விக்ரம்போல அலையடிக்கும் கூந்தலுடன் இருக்கும் ஆண்களிடம், ஒரு மேன்லினெஸ் இருக்கும். அது பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதை விட்டுவிட்டு, டிரெண்டு எனக் கண்களை உறுத்தும் ஹேர் ஸ்டைல்களில் சுற்றுபவர்களுக்கு... ஸாரி பாஸ்!

டிப்ஸ்..!

* டிரெண்டைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உங்கள் கேசத்தை ஆரோக்கியமாகப் பராமரியுங்கள்.

* உங்களுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள்.

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளித்தால் மிகவும் நல்லது. ( freepik )

* இரண்டு நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்தால் மிகவும் நல்லது.

* தினமும் எண்ணெய் தேய்ப்பது உங்களுக்கு செட் ஆகாது என்றால், எண்ணெய்க்கு பதிலாக சீரம் உபயோகிக்கலாம்.

3
விஜய் தேவரகொண்டா

சருமத்தையும் கொஞ்சம் கவனிங்க!

அரவிந்த் சாமியோ, விஜய் தேவரகொண்டாவோ, விராட் கோலியோ... சருமம் பேச வேண்டும். ஆமாங்க... சருமம் பொலிவாக, ஆரோக்கியமாக ஜொலிக்க வேண்டும். தோற்றம், ஸ்பரிசம்... இவை எல்லாவற்றிலும் சருமத்துக்குப் பெரிய ரோல் உண்டு. உங்கள் சருமத்தை நேசிக்க ஆரம்பியுங்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் சருமப் பராமரிப்பு அவசியம். ஆண்களுக்கென விற்கும் ஃபேஸ்வாஷ், சன் ஸ்கிரீன் லோஷன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் சருமத்தை சுத்தப்படுத்திப் பராமரிக்கும் வழக்கத்தைத் தவறாமல் கடைப்பிடியுங்கள்.

ஆரோக்கியமான சருமமே அழகு! ( freepik )

அப்போதுதான் முகப்பருக்கள், சன் டேன் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். முகமும் பொலிவு பெறும். ஆண்களுக்கான பியூட்டி சலூன்களில் மாதம் ஒரு முறையேனும் ஃபேஷியல் செய்தால் முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் வராமல் தடுக்க முடியும். மாசுபட்ட சுற்றுச்சூழல் பெண்களின் மிருதுவான சருமத்தை மட்டுமல்ல, ஆண்களின் கடினமான சருமத்தையும் பாதிக்கவே செய்யும்.

டிப்ஸ்..!

* வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை அலம்பவும். பிறகு, சருமத்தில் திறந்திருக்கும் நுண்ணிய துவாரங்களை மூடுவதற்கு, சிறிதளவு பன்னீரை முகம் முழுக்கப் பூசிக்கொள்ளவும். இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

சருமத்தை இளமையாக வைத்திருங்கள் ( freepik )
Vikatan

* வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, வெள்ளரிக்காய் என வீட்டிலேயே இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றை தோல் நீக்கி மசித்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவிவிடவும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

4
நிவின் பாலி

தாடியும் மீசையும்!

'பிரேமம்' நிவின் பாலி, 'கே.ஜி.எஃப்' யஷ், 'சிங்கம்' சூர்யா மாதிரி மீசை - தாடி வளர்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதைப் பராமரிப்பதுதான் பெரிய விஷயம். 'கண்ணு மட்டும் வெளிய தெரியுற மாதிரி முடிய வெச்சுக்கிட்டிருந்தா, கடைக்கண் பார்வைகூட கிட்டாது பாஸ்' என்று நகர்ந்துவிடுவார்கள் பெண்கள். உங்கள் முகவெட்டுக்கு, நீங்கள் செய்யும் வேலைக்கு என்று இரண்டுக்கும் பொருந்தும் விதத்தில் பியர்டு ஸ்டைலிங் செய்வதும், அதைத் தவறாமல் பராமரிப்பதும் அவசியம்.

டிப்ஸ்..!

தினசரி தாடி, மீசைக்கான பிரத்யேக 'பியர்டு வாஷ்' பயன்படுத்தி தாடி, மீசையை அலச வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது உங்கள் தாடி, மீசையின் வளர்ச்சியைப் பொறுத்து, ஷேப் அண்ட் ட்ரிம் செய்துகொள்வது அவசியம்.

தாடி,மீசை பராமரிப்பு. ( freepik )
உங்களுக்குப் பொருத்தமான ஸ்டைலில் தாடி வளர்ப்பது எப்படி? #InternationalMensDay

'பியர்டு ஆயில்', 'பியர்டு பாம்' போன்றவற்றைப் பயன்படுத்தினால் தாடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

5
விஜய் சேதுபதி

உடையில் இருக்கிறது மிடுக்கு!

தெலுங்கு ஹீரோக்கள்போல கண்களைப் பறிக்கும் நிறத்தில் உடைகளை அணிவது, மல்லு வேட்டி மைனர்போல எப்போதும் சீன் காட்டிக்கொண்டிருப்பது என, இவற்றுக்கெல்லாம் பெண்கள் உங்களை டிக் செய்துவிட மாட்டார்கள். தனுஷ், விஜய் சேதுபதி போன்று மிகவும் இயல்பாக, ’சிம்ப்ளி சூப்பரா’க இருப்பவர்களுக்கே லைக்ஸ் அதிகம் குவியும்.

பந்தா காட்டுவது வேஸ்ட். ( Pexels )

அதனால், பார்ட்டி வியர் ஷர்ட், ஜாகர் பேன்ட், கால்களில் பளிச் நிற ஸ்னீக்கர்ஸ் என்று பந்தா காட்டுவது வேஸ்ட். இதமான நிறங்களில் தரமான சட்டை, ஜீன்ஸ் அல்லது காட்டன் பேன்ட் என்று இயல்பாக இருக்கும் ஆண்களுக்குத்தான் பெண்களின் லைக்ஸ்!

ஜென்டில்மென்... இந்த 5 பேன்ட் உங்ககிட்ட இருந்தா, நீங்க எப்பவும் ஹீரோதான்!

டிப்ஸ்..!

* '96' த்ரிஷா சுடிதார், குஷ்பு பிளவுஸ், நயன்தாரா புடவை மாதிரி அஜீத் சட்டை, விஜய் பேன்ட் என்ற வெரைட்டியெல்லாம் பசங்களுக்குக் கிடையாதுதான். அதற்காக ட்ரெண்டு என்று சொல்லி ஜாகர் பேன்ட், செக்டு பேன்ட் என்று கிடைப்பதையெல்லாம் வாங்கிப் போட்டுக்கொள்ளாதீர்கள். அது உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.

* இந்த ரிஸ்க், ரஸ்க் எல்லாம் எதுக்கு என, நீங்கள் ஒரு முடிவெடுக்கலாம். ஜீன்ஸ், காட்டன் பேன்ட், லினன் காட்டன் பேன்ட் என ரெகுலராக உடுத்தக்கூடிய பேன்ட் வகைகளிலேயே அப்டேட் ஆகியிருக்கும் கேரட் ஃபிட் பேன்ட், டெக்ஸ்ச்சர்டு டிசைன்கள் என வெரைட்டியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

லைக்ஸ் வேணும்னா, ஸ்மார்ட்டா இருக்கணும் ( Freepik )

* சட்டைகளில் ப்ளைன், செக்டு, ஃப்ளோரல் என அனைத்துமே அனைவருக்கும் பொருந்தும். ஆனால், இவற்றில் கண்களை உறுத்தாத வித்தியாசமான நிறங்கள் மற்றும் டிசைன்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நீங்கள் இயல்பாகவும், மிடுக்காகவும், தனித்தும் தெரிவீர்கள்.

* குறிப்பாக, டார்க் நிற பேன்ட்களுக்கு லைட் கலர் சட்டைகளையும், லைட் கலர் பேன்ட்களுக்கு டார்க் அல்லது மீடியம் டார்க் கலர் சட்டைகளையும் அணிவது சிறப்பு. எக்காரணம் கொண்டும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே நிறத்தில் சட்டை மற்றும் பேன்ட்களை அணியாதீர்கள்.

6
காலணியிலும் கவனம் தேவை ( pexels )

காலணியிலும் கவனம் அவசியம்!

'காலுக்கு அடியில என்ன போட்டா என்ன, தெரியவா போகுது' என்று அசட்டையாக இருக்காதீர்கள். அதிலும், 'குனிந்த தலை நிமிராத பொண்ணுதான் வேணும்' என்று கேட்கும் பாய்ஸ், அலர்ட்!

ஃபார்மல் உடைக்கு இரண்டு செட் ஷூக்கள் முக்கியம் ( pexels )

ஒரே காலணியை எல்லா ஆடைகளுக்கும் அணிந்தால், உங்களுக்கே போரடிக்கலாம். அதைத் தவிர்க்க, ஃபார்மல் ஆடைகளுக்கு இரண்டு செட் ஷூஸ், கேஷுவல் ஆடைகளுக்கு ஒரு ஸ்னீக்கர் ஷூ, ஒரு ஃப்ளிப் ஃப்ளாப்ஸ், இவை தவிர ஒரு சேஞ்சுக்கு சாண்டல்ஸும் பயன்படுத்தலாம்.

டிப்ஸ்..!

* பொதுவாக, மாலை நேரத்தில் நம் பாதத்தின் அளவு சற்றே பெரிதாகும். எனவே, காலணியை காலை நேரத்தில் வாங்குவதைவிட மாலை நேரத்தில் வாங்குவதுதான் சிறந்தது.

லெதர் ஷூ அவசியம். ( pexels )

* லெதர், கேன்வாஸ் எனத் தரமான, நன்கு உழைக்கக்கூடிய காலணிகள் உங்கள் ஷூ அலமாரியில் இடம்பெற வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு