Published:Updated:

ராஜலட்சுமி செந்திலின் போட்டோ ஷூட்... ரெண்டு புடவை; பொண்ணு பார்க்கும் ரீமிக்ஸ் ரகசியம்!

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன்
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன்

"என்னோட ஒரிஜினல் முகம் மாறாம இருந்துச்சு. இதுவரைக்கும் நான் எடுத்துக்கிட்ட புகைப்படங்கள்லேயே இவைதான் என் மனசுக்குத் திருப்தியா இருக்கு..." - ராஜலட்சுமி செந்தில்

கிராமியப் பாடல்களின் மூலம் கேட்பவர்களின் காதுகளைக் கொள்ளைகொண்ட ராஜலட்சுமி செந்தில், சமீபத்திய போட்டோ ஷூட்டின் மூலம் பார்த்தவர்களையெல்லாம் `அட... ஃபோக் சிங்கர் ராஜலட்சுமி மேக்கப்ல எவ்ளோ அழகா இருக்காங்க’ என்று ரசிக்க வைத்திருக்கிறார். எப்போதும் நம்ம வீட்டுப் பெண்போல தோற்றமளிக்கும் ராஜலட்சுமி, இந்தப் புகைப்படங்களிலும் தன் இயல்பான அழகைத் தொலைக்காமல் அதே நம்ம வீட்டுப் பெண் தோற்றத்திலேயே வசீகரிக்கிறார். `திடீர்னு போட்டோ ஷூட். என்ன விசேஷம்’ என்று அவரிடமே விசாரித்தோம்.

ராஜலட்சுமி செந்தில்
ராஜலட்சுமி செந்தில்

``எனக்கு மேக்கப் செஞ்சுவிட்ட ராதிகா என்னோட சொந்தக்காரப் பொண்ணு. `நான் எங்க வீட்டு மாடியிலேயே சின்னதா பியூட்டி பார்லர் வெச்சிருக்கேன். உங்களுக்கு மேக்கப் போட்டு விடணும்னு ஆசை. லாக்டெளன் நேரத்துல நீங்க ஃப்ரீயாதானே இருப்பீங்க. நீங்க அம்மா வீட்டுக்கு வர்றப்போ நான் உங்களுக்கு மேக்கப் போட்டு ரெண்டு, மூணு போட்டோ எடுத்துக்கிடட்டுமா’னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நானும் திண்டுக்கல்ல இருக்கிற அம்மா வீட்டுக்கு வர்றப்போ பார்க்கலாம்’னு சொல்லிக்கிட்டே இருந்தேன். சமீபத்துல அம்மா வீட்டுக்குப் போயிருந்தப்போ ஓகே சொல்லிட்டேன்.

மேக்கப் போடுறதுல எனக்கு எப்பவுமே ஒரு பயம் உண்டு. மேக்கப் போட்டதுக்கப்புறம் நாம யாரோ மாதிரி தெரிஞ்சிடக்கூடாதில்லே... இவரும் `மக்களுக்கு, அவங்க, நம்மளைப் பார்த்த மாதிரியே இருந்தாதான் `நம்ம செந்தில், நம்ம ராஜலட்சுமி'ன்னு நினைப்பாங்க. மேக்கப் போட்டு வேற யாரோ மாதிரி தெரிஞ்சா விலகிப் போயிடுவாங்க ராஜி'ன்னு அடிக்கடி சொல்வார். அதனாலேயே நான் ஸ்டேஜ் புரோகிராம் பண்றப்போகூட அதிகமா மேக்கப் போட மாட்டேன். இதுவரைக்கும் இந்த மாதிரி போட்டோ ஷூட்டும் நான் செஞ்சதே இல்ல. என் வீட்டுக்காரர் சும்மா சிரிச்சாலே போட்டோ ஜெனிக் முகம் வந்துடும். ஆனா, எனக்கு அப்படி வந்ததே இல்லை. ரொம்ப அபூர்வமாதான் போட்டோ ஜெனிக்கா ஒரு ஃபிரேம் கிடைக்கும்’’ என்று கலகலத்தவர் தொடர்ந்து தன் போட்டோ ஷூட் கதையைப் பகிர்ந்தார்.

``டிவி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறப்போகூட எல்லாரும் போட்டுக்கிட்டு இருக்கிற காஸ்ட்யூமோட போட்டோ எடுத்துக்கிறப்போ நான் மட்டும் எடுத்துக்கவே மாட்டேன். ஏன்னா, எப்படியும் அது எனக்குப் பிடிக்காமதான் இருக்கப்போகுதுன்னு நினைச்சிப்பேன். அதனாலேயே ராதிகா மேக்கப், போட்டோ ஷூட்னு கேட்டப்போ ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்துக்கிட்டுப் போனேன். மேக்கப் போட்டுக்க உட்காரும்போதே `சிம்பிளாதான் மேக்கப் போடணும். என் முகம் மாறிடாமப் பார்த்துக்கோங்க’னு சொல்லிட்டுதான் உட்கார்ந்தேன். அவங்க `உங்க ஹேர் ஸ்டைலை விதவிதமா மாத்தட்டுமா’ன்னு கேட்டப்போகூட, `நான் எப்பவும் எடுக்கிற நேர் வகிடுதான் வேணும்’னு சொல்லிட்டேன். அவங்க கேட்டுக்கிட்டதால வகிடு எடுக்காம ஒரு ஹேர் ஸ்டைலுக்கு ஒத்துக்கிட்டேன். அதுலேயும் என்னோட ஒரிஜினல் முகம் மாறாம இருந்துச்சு. இதுவரைக்கும் நான் எடுத்துக்கிட்ட புகைப்படங்கள்லேயே இவைதான் என் மனசுக்குத் திருப்தியா இருக்கு...’’ என்றவரிடம், உங்கள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு கணவர் என்ன சொன்னார் என்றோம்.

"அவர் அப்போ புதுக்கோட்டையில இருந்தார். என் போட்டோஸை வாட்ஸ் அப்ல அனுப்பி வெச்சேன். `அடேயப்பா... இதெல்லாம் எப்போ நடந்துச்சு..? மறுபடியும் பொண்ணு பார்க்கிறதுல இருந்து ஆரம்பிக்கட்டுமா’ன்னு சிரிச்சார்" என்று வெட்கப்படுகிறார் ராஜலட்சுமி செந்தில்!

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன்
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன்
`பிறந்தவுடனே தூக்கிட்டுப் போனாங்க; 4 நாள் கழிச்சே குழந்தையைப் பார்த்தோம்!’ - `பிக்பாஸ்’ டேனி

ராஜலட்சுமிக்கு மேக்கப் செய்துவிட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா, ``அவங்களோட ஸ்கின் டோன்லேயே மேக்கப் போட்டேன். ஹெச்.டி மேக்கப், ஏர் ப்ரெஷ்னு ரெண்டு மெத்தட் கலந்து ட்ரை பண்ணேன். ஆர்ட்டிஃபிஷியலா எதையுமே அவங்களுக்கு செட் பண்ணலை. அவங்க முடியிலேயேதான் ஹேர்ஸ்டைல் செஞ்சேன். அதனாலதான் அவங்களோட முகம் மாறவேயில்ல’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு