Published:Updated:

`ராம்ப் வாக் செய்த மாடல்களுக்கு கொரோனா மாஸ்க்!' - பாரிஸ் ஃபேஷன் வீக்கில் அசத்திய ஆடை வடிவமைப்பாளர்

கொரோனாவின் தாக்கத்துக்கு முன்பே மாஸ்க்குகளை வடிவமைத்திருப்பதுதான் இதன் ட்விஸ்ட்டும்கூட.

பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் ஃபேஷன் வீக்கில், ஒரு வடிவமைப்பாளரின் கலெக்‌ஷன் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அழகியலை முன்னிறுத்தும் ஆடை ஆபரணங்களுக்கான ராம்ப் வாக் என்றாலும், அழகோடு விழிப்புணர்வையும் இணைத்து, பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளிச் சென்றிருக்கிறார், இந்த பிரான்ஸ் ஆடை வடிவமைப்பாளர்.

Ramp walk wearing mask
Ramp walk wearing mask

தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை மனத்தில்கொண்டு, தான் வடிவமைத்த ஆடைகளோடு முகமூடிகளையும் தன்னுடைய மாடல்களுக்கு அணிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரைன் செரே. கொரோனாவின் தாக்கத்துக்கு முன்பே மாஸ்க்குகளை வடிவமைத்திருப்பதுதான் இதன் ட்விஸ்ட்டும்கூட.

இதுபோன்ற மாஸ்க்குகளைக்கொண்டு ஆடைகள் வடிவமைப்பது மரைனுக்கு முதல்முறை அல்ல. கடந்த 2019-ம் ஆண்டின் செப்டம்பர் மாத ஃபேஷன் ஷோவில், அதிகப்படியான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகத் தன்னுடைய மாடல்களுக்கு முகக்கவசங்களை அணிவித்து அழகு பார்த்தவர் மரைன். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு கொரோனாவிற்கான கவசம்.

Corona Virus
Corona Virus

மாடல்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் மாஸ்க்குகளை அணிவித்து, கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது இந்த பாரிஸ் ஃபேஷன் வீக்.

அறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன? #spotvisit

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஏற்கெனவே நியூயார்க், லண்டன் மற்றும் மிலன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, அவற்றில் வெற்றிபெற்றிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு இந்நிகழ்ச்சிக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Deepika Padukone
Deepika Padukone
`வொர்க் ஃப்ரம் ஹோம்; நோ விசிட்டர்ஸ்!' - டெக் நிறுவனங்களின் கொரோனா முன்னெச்சரிக்கை #Corona

தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, சில முன்னணி பிராண்டுகள், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரத்துசெய்தன. மேலும், சீனப் பிரபலங்கள் மற்றும் மாடல்கள், சீனாவிலிருந்து இறக்குமதியான ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் இந்த ஃபேஷன் நிகழ்ச்சிகளில் தவிர்த்தனர். இந்தியாவிலிருந்து பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கலந்துகொள்ளவிருந்த தீபிகா படுகோனும் தன்னுடைய பயணத்தை ரத்துசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு