Published:Updated:

பொல்கா ஷர்ட் முதல் பெல்பாட்டம் பேன்ட் வரை... ஆண்களுக்கான ரெட்ரோ ஸ்டைல் ஃபேஷன்!

நம் அனைவருக்கும் பிடித்த 'ரெட்ரோ' ஸ்டைலை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதுபோல மாற்றி உடுத்தினால், வெரைட்டி லுக் நொடியில் ரெடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'இந்திய ஆண்களுக்கான ஃபேஷன்' என்றாலே சட்டை, பேன்ட், ஜீன்ஸ், வேட்டி போன்றவற்றோடு முடிந்துவிடும். பெண்களைப் போன்று ஆண்களுக்கு விதவிதமான ஆடைகள் சந்தையில் இறக்குமதியாவது மிகவும் குறைவு. ஒரே போன்ற ஸ்டைல் தினமும் உடுத்துவது பலருக்குச் சலிப்பைக் கொடுக்கும்.

Vikatan

ஆனால், பழைமையான ஸ்டைலை புதுமையோடு இணைத்து உடுத்தினால், நிச்சயம் வித்தியாசமான தோற்றதைப் பெற முடியும். அதிலும் நம் அனைவருக்கும் பிடித்த 'ரெட்ரோ' ஸ்டைலை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதுபோல மாற்றி உடுத்தினால், வெரைட்டி லுக் நொடியில் ரெடி!

தற்போதுள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும், 1960 மற்றும் 70-களின் ரெட்ரோ ஃபேஷனை வைத்துதான் உடைகளை வடிவமைக்கின்றனர். பெல் பாட்டம் பேன்ட், போல்கா டாட் ஷர்ட், சஸ்பெண்டர்ஸ் பேன்ட் என அந்தக் காலத்து ஆடைகளை வெவ்வேறு ஆடைகளோடு மேட்ச் செய்து புதுமையான தோற்றத்தைக் கொடுக்கச் செய்கின்றனர்.

Suspenders
Suspenders

அந்த வகையில், சஸ்பெண்டர்ஸ் பேன்ட்டுகளுக்கு என்றைக்குமே தனி இடம் உண்டு. டீ-ஷர்ட், ஷர்ட், ஸ்லிம்-ஃபிட் அல்லது பெல் பாட்டம் பேன்ட் என எந்த வகை உடைகளோடும் இந்த சஸ்பெண்டர்ஸ் வித்தியாச தோற்றத்தைத் தரும். மேலும், இவற்றோடு fedora வகை தொப்பியை அணிந்தால், க்ளாஸிக் லுக் நிச்சயம் உங்கள் வசம். சஸ்பெண்டர்ஸ் பேன்ட்டுகளுக்கு பிரின்ட் செய்யப்பட்ட சட்டை பக்கா மேட்ச்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதிலிருக்கும் ஆர்வம் போலவே, இணை ஆபரணங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிக கவனம் வேண்டும். அந்த வரிசையில், பார்த்ததும் வித்தியாசத்தைக் கொடுக்கும் கண்ணாடிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தடித்த உடலமைப்புகொண்ட கண்ணாடிகள்தான் தற்போதைய ஃபேஷன்.

Retro Glass
Retro Glass
ஃபார்மல், கேஷுவல் என எந்த வகை உடை உடுத்தினாலும், அந்தக் காலத்துக் கண்ணாடிகள் என்று ஒதுக்கப்பட்ட 'thick frame' கண்ணாடிகள் டிரெண்டி தோற்றத்துக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

'ரெட்ரோ' என்றாலே 'பொல்கா டாட்' டிசைனை விட்டுவிட முடியாது. புடவை, ஸ்கர்ட், சட்டை என எல்லா விதமான உடைகளிலும் பொல்கா டாட் முக்கிய பங்கு பெற்றிருக்கும். ஜீன்ஸ், ஃபார்மல், கேஷுவல், ஷார்ட்ஸ் முதலிய 'பாட்டம் பேன்ட்' வகைகளோடு, பொல்கா சட்டைகளை இணைத்து உடுத்தினால் நிச்சயம் மாறுபட்ட தோற்றத்தைப் பெறலாம்.

Polka shirt
Polka shirt
இப்போதெல்லாம், பொல்கா டாட்டில் பேன்ட் மற்றும் 'டை (tie)' வகைகளும் வருகின்றன. சட்டையில் 'Bow-Tie' உபயோகிக்க மறந்துவிடாதீர்கள். இது மிடுக்கான தோற்றத்தைத் தரும்.

1970-களில் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃப் அணிவது பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் பின்பற்றினர். ஒருகட்டத்தில் இந்த ஸ்டைல், 'உள்ளூர் ரவுடியின்' சிக்னேச்சர் கெட்-அப்பாக மாறியது. ஆனால், வெவ்வேறு 'knot' வகைகளைக் கொண்டு, விதவிதமான ஸ்டைல்களில் இந்த ஸ்கார்ஃபை உபயோகப்படுத்தலாம். தற்போது ஏராளமான துணிவகைகளில், பிரின்ட் மற்றும் சாலிட் டிசைன்களில் வருகின்றன. அவற்றைச் சட்டையின் நிறத்திற்கேற்ப உபயோகித்தால் வித்தியாச தோற்றதைப் பெறலாம். மேலும், சட்டையின் காலரைத் தூக்கிவிட்டு அணிவதும் ரெட்ரோ ஃபேஷன்தான். இதன்மூலம் இன்ஸ்டன்ட் ஸ்பெஷல் தோற்றத்தைப் பெறலாம்.

Scarf
Scarf
``இந்திய கைத்தறியின் பெருமையை உலகம் முழுதும்  சேர்த்தது `மகாநடி'!'' - ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷா

வின்டேஜ் தோற்றம் பெற நினைப்பவர்கள், கொஞ்சமும் யோசிக்காமல் பெல் பாட்டம் பேன்ட்டுகளைத் தேர்வு செய்யலாம். இது ஃபார்மல் அவுட்ஃபிட்டுக்கு மிகவும் ஏற்ற ஸ்டைல். சட்டையை டக்-இன் செய்து, ப்ளேசர் அணிந்தால் வித்தியாசமான அதேநேரத்தில் ஸ்டைலிஷான ஃபார்மல் லுக்கைப் பெறலாம்.

Perfect Vintage look
Perfect Vintage look

பேஸ்டல், வெளிர் நிறங்கள்தான் இப்போது ஃபேஷன். ஆனால், பிரைட் நிறங்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு. அதிலும், ரெட்ரோ ஃபேஷனில் பிரைட் நிறங்கள் இல்லாத ஆடைகளைப் பார்க்கவே முடியாது. 'செக்டு' பேட்டர்னில் பிரைட் நிற சட்டைகள் நிச்சயம் வித்தியாசமான அதே சமயம் கிளாஸிக் தோற்றத்தைத் தரும். பேன்ட் வகைகளில் ஜீன்ஸ்தான் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிற பேன்ட் இந்த 'போரிங்' பேட்டர்னை கட்டாயம் மாற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு