Published:Updated:

பேன்ட் ஸ்டைல் புடவை, பெப்லம் ஜாக்கெட், இண்டிகோ... இது இந்தியத் திருவிழா ஃபேஷன்!

Trendy Festive Fashion
Listicle
Trendy Festive Fashion

விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பண்டிகை சீஸன்தான். இந்த ஸ்பெஷல் நாள்களை மேலும் சிறப்பாக்கும் லேட்டஸ்ட் ஆடைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.


1
Saree Drape

புடவை

திருவிழா என்றாலே உறவினர்களின் வருகை, பலகாரம், பட்டாசு என ஏராளமான கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். அவற்றில், புத்தாடைகளுக்கு என்றைக்குமே தனி இடம் உண்டு. அதிலும், இந்த வருடம் நிறைய டிரெண்டி ஆடைகள் சந்தையில் களமிறங்கியிருக்கின்றன. எவ்வளவுதான் மாடர்ன் உடைகள் இருந்தாலும், நம் நாட்டுப் பெண்களுக்குப் புடவை மீதான காதல் என்றைக்குமே குறையாது. அகன்ற பார்டர் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை முதல் மங்களகிரி காட்டன் புடவை வரை ஏராளமான புடவைகள் இந்தியாவில் இருந்தாலும், சில மாடர்ன் பெண்களின் விருப்பம் என்னவோ வித்தியாசமான தோற்றம் பெறுவதுதான்.

பழைய பட்டுப்புடவை இருந்தால், அவற்றை 'பெல்ட்', 'கேப் ஸ்டைல்' போன்ற சில்லவுட்டில் இந்தக் காலத்துக்கேற்ப மாற்றி வடிவமைத்து உபயோகப்படுத்தலாம். 'ஷார்ட்', 'பெல்', 'ஆஃப்-ஷோல்டர்', 'கோல்டு-ஷோல்டர்', 'கேப்' முதலிய பல்வேறு விதமான ஸ்லீவ்களைக் கொண்டு பிளவுஸ் தைத்துக்கொள்ளலாம். அவற்றுள், 'ஹை-நெக்லைன்' தற்போதைய டிரெண்டில் இருக்கிறது. மேலும், வெல்வெட் துணி வகையிலான புடவை மற்றும் பிளவுஸ், இந்தத் திருவிழா சீஸனுக்கு நிச்சயம் மாறுபட்ட தோற்றத்தைத் தரும்.


2
Samantha in Handloom saree

காதி

திருவிழா முதல் அலுவலகம் வரை எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற ஒரே துணிவகை 'காதி'. எளிமை விரும்பிகள் நிச்சயம் இந்தத் துணிவகையைத் தேர்ந்தெடுக்கலாம். புடவை, குர்தா, சட்டை, லெஹெங்கா, சல்வார் கமீஸ் என அனைத்து வகையான உடைகளும் தற்போது காதி துணிவகையில் கிடைக்கின்றன. என்னதான் பவர் லூம்கள் வந்தாலும், கைத்தறிக்கென தனிப்பட்ட இடம் நம் இந்தியாவில் எப்போதும் உண்டு. அதிலும் தற்போது வெவ்வேறு வண்ணங்களில், எம்ப்ராய்டரி, டையிங் உள்ளிட்ட பல பாரம்பர்ய மற்றும் நவீன வேலைப்பாடுகள்கொண்ட டிரெண்டி ஆடைகள் மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. ஒரே மாதிரியான ஆடைகளை உடுத்தி சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் காதி ஆடைகள் வித்தியாச தோற்றத்தைத் தரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
Trisha in Indigo shade costume

இண்டிகோ

உடைகளைக்கூட எளிதில் தேர்வு செய்துவிடலாம் ஆனால், அதன் நிறங்களைத் தேர்வு செய்வதில்தான் அதிக குழப்பங்கள் ஏற்படும். நம் ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறங்கள் என்ன என்பதில் எப்போதும் ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், 'இண்டிகோ' நிறம் பொறுத்தவரையில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இது நிச்சயம் எல்லா விதமான ஸ்கின் டோனுக்கும் மேட்ச் ஆகும். ஜெய்ப்பூரின் பாரம்பர்ய வேலைப்பாடுகளுள் ஒன்றான பிளாக் பிரின்ட்டில் அதிகமாக உபயோகப்படுத்தும் நிறம் இண்டிகோதான்.

புடவை, சட்டை, சல்வார் என எல்லாவிதமான உடை மற்றும் துணிவகையிலும் இந்த நிறம் தனித்து இருக்கும். மேலும், கோரல் சிவப்பு, சில்வர், பவுடர் பிங்க், பிரைட் ஆரஞ்சு, ஆலிவ் பச்சை, காக்கி பிரவுன் உள்ளிட்ட 2019-ம் ஆண்டின் டிரெண்டி நிறங்களையும் திருவிழா உடைகள் வாங்கும்போது தேர்வு செய்யலாம். கறுப்பு மற்றும் வெள்ளை எல்லா சீஸனிலும் ஹிட்லிஸ்ட் என்றாலும் பண்டிகைக் காலங்களில் கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கலாமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
Indo western costumes

இண்டோ-வெஸ்டர்ன்

தற்போது, பெரும்பாலான பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்பி வாங்குவது இண்டோ-வெஸ்டர்ன் உடைகளைத்தான். இந்திய பாரம்பர்ய வேலைப்பாடுகளுடன் மேற்கத்திய சில்லவுட்டில் வடிவமைக்கப்படும் உடைகள்தான் இண்டோ-வெஸ்டர்ன். புடவை முதல் குர்தா பைஜாமா வரை இண்டோ-வெஸ்டர்ன் டச் எல்லாவற்றிலும் இருக்கிறது. அந்த வரிசையில், பேன்ட் ஸ்டைல் புடவை, கற்கள் பதித்த கோட் ஸ்டைல் கவுன், பெப்லம் ஜாக்கெட், கேப் ஸ்டைல் லெஹெங்கா சோலி முதலிய ஆடைகளை இந்த வருடப் பண்டிகைகளுக்குத் தேர்வு செய்யலாம்.