Published:Updated:

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

பட்டு முதல் பந்தி வரை
பிரீமியம் ஸ்டோரி
பட்டு முதல் பந்தி வரை

மணப்பெண்களுக்கு நகை வாங்கும் போது, தினசரி பயன்பாட்டுக்கான வளையல், கம்மல், செயின், மோதிரம் போன்றவற்றை எடை அதிகமாக, கெட்டி டிசைனில் வாங்க வேண்டும்

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

மணப்பெண்களுக்கு நகை வாங்கும் போது, தினசரி பயன்பாட்டுக்கான வளையல், கம்மல், செயின், மோதிரம் போன்றவற்றை எடை அதிகமாக, கெட்டி டிசைனில் வாங்க வேண்டும்

Published:Updated:
பட்டு முதல் பந்தி வரை
பிரீமியம் ஸ்டோரி
பட்டு முதல் பந்தி வரை

முன்பெல்லாம் வீட்டில் அல்லது வீட்டுக்கு முன் பந்தல் அமைத்து உறவுகள் புடைசூழ நடந்தன திருமணத் திருவிழாக்கள். இப்போது பலருக்கும் திருமண நிகழ்வு என்பது ஸ்டேட்டஸ் சிம்பலாகிவிட, மண்டபம் முதல் மேடை அலங்காரம் வரை தண்ணீராகப் பணத்தைச் செலவழிக்கப் பலர் தயாராக இருக்க, அதனால் பத்திரிகை, பந்தி, மாலை, மணப் பெண் அலங்காரம் எனத் திருமணம் சார்ந்த ஏற்பாடுகளும் காஸ்ட்லியாகிவிட்டன. வசதி படைத்தவர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால், நடுத்தரவர்க்க மக்களில் சிலரும் இந்த டிரெண்டில் சிக்கி விமரிசையாக திருமணத்தை நடத்துகிறோம் என்ற பெயரில் கடனாளிகளாக மருகி நிற்பதையும் பார்க்கி றோம். இதோ, ஐப்பசி பிறக்கப்போகிறது. அடுத்த கார்த்திகை, தை, மாசி, பங்குனி என்று கல்யாண காலங்கள் வரிசை கட்டவிருக்கின்றன. பட்டு முதல் பந்தி வரை திருமண ஏற்பாடு களுக்காகப் பலரும் பரபரக்க ஆரம்பித் திருப்பார்கள். ஆனால், திருமண பட்ஜெட்டை சிக்கென்று போடுவதில்தான் இருக்கிறது புத்திசாலித்தனம். அதற்கான ஆலோசனை களை இங்கே வழங்குகிறார்கள், கால கால மாகக் கல்யாண விசேஷங்களை கையி லெடுத்துச் செயலாற்றிக்கொண்டிருக்கும் அனுபவசாலிகள்...

தினசரி பயன்பாட்டுக்கான வளையல்... கனம்!

‘`மணப்பெண்களுக்கு நகை வாங்கும் போது, தினசரி பயன்பாட்டுக்கான வளையல், கம்மல், செயின், மோதிரம் போன்றவற்றை எடை அதிகமாக, கெட்டி டிசைனில் வாங்க வேண்டும். அதுவே விசேஷங்களுக்கு மட்டுமே அணியக்கூடிய நகையில் தங்கத்தின் எடை யைக் குறைத்து ஃபேன்ஸி மாடலாகச் செய்து கொள்ளலாம்'' என்கிறார், கரூரில் 100 வருட பாரம்பர்யம் கொண்ட ஜூவல்லரியின் உரிமையாளர் ரவீந்திரகுமார். அதேபோல, தாலிச் செயினையும் ஃபேன்ஸியாகவோ பகட்டாகவோ இல்லாமல் கம்பி பிரிவது, முறிவது போன்ற டிசைன்களில் வாங்காமல் தினசரி பயன்பாட்டுக்கானதாக வாங்க வேண்டும். 50 பவுன், 100 பவுன் என நகை வாங்குபவர்கள் பல செட் நெக்லஸ், ஆரம் என வாங்கலாம். 25 பவுன், 30 பவுனில் நகை வாங்குபவர்கள் இரண்டு மாலை என்பதைத் தவிர்த்து, நெக்லஸ், மாலை, வளையல், கம்மல் என எல்லா ஆபரணங்களிலும் ஒன்று வருவது போல திட்டமிட்டும், `நெக்லஸ் ஐந்து பவுனுக்குள்ளதான்' என ஒவ்வொரு நகைக்கும் எடையை முன்னரே ஃபிக்ஸ் செய்துவிட்டு அதற்குள் அடங்கும்படியும் வாங்க வேண்டும். ரீசேல் மதிப்பு இல்லை என்பதால் கல் நகைகளைத் தவிர்க்க வேண்டும்.''

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

பட்டு, பிரைடல் மேக்கப்..!

``திருமண வீட்டில் மணப்பெண்ணுக்கு மட்டுமல்லாது அம்மா, சகோதரிகள், உற வினர்கள் என்று பலருக்கும் பட்டு எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், உள்ளூரில் உள்ள ஜவுளிக்கடைக்குச் செல்வதைவிட நேரடியாக காஞ்சிபுரம் போன்ற மொத்த பட்டு உற்பத்தி ஊர்களுக்குச் சென்றால் ஒவ் வொரு புடவைக்கும் 5 சதவிகிதம் முதல் தள்ளுபடி பெறலாம், கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்'' என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கவிதா கண்ணன், அலங்காரம் பற்றியும் சொன்னார். ``சிலர் மணப் பெண் அலங்காரத்துக்கு 50,000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். ஆனால், ஹெச்.டி மேக்கப் 7,000 ரூபாயிலிருந்தே பண்ண முடியும். இன்னொரு பக்கம், முகூர்த்த தினத்துக்கு ஒரு மாதம் முன்பிருந்தே, தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது, பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக் கொள் வது, 8 மணி நேரத் தூக்கம் என இவற்றையெல்லாம் செய்து வருவது இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும். பின்னர், முகத்தில் சாதாரண மேக்கப் போட்டாலும் ஹைலைட்டாக இருக்கும். மேக்கப் களைந்த பின்னும் புது மணப்பெண் மிளிர்வார்.''

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

இயற்கை பொருள்களில் மேடை அலங்காரம்!

``ஆடம்பரத்தின் உச்சமாக இன்று மேடை அலங்காரம் மாறிவிட்டது. சென்னையில் 5 லட்சம் ரூபாய்வரை கூட மேடை அலங்காரம் செய் கிறார்கள்'' என்கிறார் திருநெல்வேலி கலைக்கூட நிறுவனர் ஆனந்த பெருமாள். ``ஃபைபர் மோல்டிங், பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் என்று மக்காத பொருள்களால் மேடை அலங்காரம் செய்யும்போது செலவும் அதிகம், சுற்றுச்சூழலுக்கும் கேடு. மேலும் சிலர் ஓசூர் ரோஜா, பெங்களூரு பூக்கள், பிளாஸ்டிக் பூக்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுவே நாங்கள், நமது பூக்களான பன்னீர் ரோஜா, நாட்டு சம்பங்கி, சாமந்தி, வாடாமல்லி, புல், கொடிகள் என்று அலங்காரம் செய்கிறோம். வாழைக்குருத்து, வாழை மட்டைகள் கொண்டு அற்புதமாக மேடை அலங்காரம் செய்ய குறைந்தபட்சம் 15,000 ரூபாய் போதும். நாங்கள் திருமணம் நடக்கும் மண்டபத்தைச் சுற்றி 15 கி.மீ தூரத்தில் தென்னங்குருத்து, பனை ஓலை, வாழை, மரக்கட்டைகள் என்று என்ன பொருள்கள் கிடைக் கின்றனவோ அதை வைத்து மேடை அலங்காரம் செய்கிறோம்.''

பந்தியில் பணத்தை வீணாக்காதீர்கள்!

பந்தியில் பணத்தை மிச்சப்படுத்த ஆலோசனைகள் சொல்கிறார், கரூ ரைச் சேர்ந்த ஈவென்ட் மேனேஜ் மென்ட் நிறுவனர் சூர்யா கதிரவன். ``சாப்பாட்டில் 20 அயிட்டங்கள், 30 அயிட்டங்கள் என்று பகட்டுக்கு மெனுவை ரெடி செய்வது வீண். ஒருவரால் எப்படி அத்தனை உணவு வகைகளை ஒரே வேளை சாப்பிட முடியும்? எனவே, திருப்தியுடன் சாப்பிடக்கூடிய மெனுவே போது மானது, திகட்டும் மெனு தேவையில்லை இத்தாலியன், மெக்ஸிகன் போன்ற அயல்நாட்டு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், சாப்பிட உட்கார்ந்த பிறகு, உணவைப் பரிமாறும்போது விருந்தினர்கள் தங்களுக்குத் தேவையில்லாவற்றைப் பரிமாறும்போதே தவிர்க்கும் வகையிலும், உணவு வீணாவதைத் தவிர்க்கலாம். அதேபோல, ஐஸ்க்ரீம், பழம் போன்றவற்றை இலையிலேயே வைத்தால் பலரும் அப்படியே வைத்து விடுவார்கள். தனியாக ஸ்டால் போட்டு வைத்தால், விரும்புகிறவர்கள் மட்டும் அதை எடுத்துக்கொள்வார்கள். இந்த வகையில், 1,000 இலைகளுக்கு 400, 500 ஐஸ்க்ரீம், பழங்களே போதுமானது.''

உள்ளூர் போட்டோகிராபர்களைத் தேர்ந் தெடுங்கள்!

``நமக்கு நேரடியாக அறிமுகம் இல்லாத புகைப்பட, வீடியோ கலைஞர்களை, இணையத்தில் ரெவ்யூ, ஸ்டார்ஸ் பார்த்து லட்சங்களில் பணம் கொடுத்து புக் செய்வதை விட, உள்ளூரில் இருக்கும் ஸ்டூடியோக்களை தேர்ந்தெடுப்பது பரிந்துரைக்கத்தக்கது'' என்கிறார், தஞ்சாவூரில் ஸ்டூடியோ நடத்தும் தினேஷ்வரன். ``வீட்டினர் யார், முக்கிய உறவினர் யார், ஊரின் முக்கியஸ்தர்கள் யார் என்பதை உள்ளூர் புகைப்படக்காரர்கள் அறிந்து, போட்டோ எடுப்பதிலும் ஆல்பத்திலும் அதற்கேற்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள். ப்ரீ வெடிங், போஸ்ட் வெடிங் ஷூட்களுக்கு ஊட்டி, கொடைக் கானல்தான் போக வேண்டும் என்பதில்லை. உங்கள் ஊருக்கு அருகிலேயே நிச்சயம் இயற்கை சூழ்ந்த ஓர் அழகான இடம் இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளும் ஸ்டூடியோவை தேர்ந்தெடுங்கள். உள்ளூரில் இருப்பதாலேயே அவர்களுக்கு டெக்னாலஜி தெரியாது என்று நினைக்காதீர்கள்.''

விருந்து முக்கியமல்ல... விருந்தோம்பல்தான் முக்கியம்!

``ஈவன்ட் மேனேஜ்மென்ட் முதல் `வெல்கம் கேர்ள்ஸ்' வரை, என்னதான் நிகழ்ச்சிப் பொறுப்புகளை லட்சங்கள் செலவழித்துச் செய்தாலும், நம் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை நம் வீட்டினர் நேரடியாக வரவேற்பது, கவனிப்பதுதான் அவர்களது மனம் நிறையச் செய்யும்'' என்கிறார் கரூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் சரஸ்வதி அசோகன். ``வரவேற்பில் நின்று விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புன்னகை கொடுத்து வரவேற்பது, டைனிங் ஏரியாவில் ஒவ்வொரு பந்தியிலும் அப்படியே ஒரு வலம் வந்து ஏதேனும் வேண்டுமா என்று கேட்பது, விருந்தினர்களை புகைப்படம் எடுக்க மணமேடைக்கு அழைப்பது, விடைபெறும் போது `உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி' என்று கைகூப்பி அனுப்பி வைப்பது என, இந்த நான்கு பொறுப்புகளையும் வீட்டு உறுப்பினர்கள் நான்கு பேர் ஏற்றுக்கொண்டால் போதும்... `சிறப்பா கவனிச்சாங்க' என்று மனம் நிறைந்துவிடுவார்கள் விருந்தினர்கள். அந்த மன நிறைவை, எத்தனை லட்சங்களில் திருமண ஏற்பாடுகள் செய்தாலும் கொடுக்க முடியாது என்பதே உண்மை.''

கல்யாண மாலை கொண்டாடும் வேளை அமையட்டும் மகிழ்ச்சி நிரம்ப!

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

மங்கல வாத்தியங்கள், மணமாலை!

‘`தாலி கட்டும்போது மங்கல வாத்தியங்களை வாசிப்பது, அந்த நேரத்தில் அமங்கல வார்த் தைகள், ஒலிகள் போன்றவை மங்கள வாத்திய சத்தத்தில் கேட்காமல் போகும் என்பதற் காகவே. அதனால், நிச்சயதார்த்த நேரம், முகூர்த்த நேரத்துக்கு மட்டும் அவர்களை புக் செய்தால் போதும். மணமக்கள் மாலைகளை கோவை, சேலம், ஈரோடு பக்கங்களில் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள். அதனால், முகூர்த்த நாள்களில் அவர்கள் சொல்வதுதான் விலையாகி விடுகிறது. அந்தந்த சீசனில் என்னென்ன பூக்கள் மலிவாகக் கிடைக்குமோ, அவற்றைக்கொண்டு உள்ளூரிலேயே மாலைகளைச் செய்து வாங்கலாம்'' என்கிறார் திருச்சியில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் வசந்த் அழகப்பன்.

வரிசைகட்டும் முகூர்த்த மாதங்கள்... பட்டு முதல் பந்தி வரை... திருமண பட்ஜெட் ஆலோசனைகள்!

ஈவன்ட் மேனேஜ்மென்ட் அவசியமா?!

‘`திருமண வீட்டில் அனைவரும் வேலை, தொழிலில் பரபரப்பாக இருப்பவர்கள், திருமண வேலைகளில் உதவி செய்ய உறவினர்கள், நண்பர்கள் இல்லாத வர்கள் எனில், இவர்கள் ஈவன்ட் மேனேஜ்மென்ட்டை நாடலாம். மற்றவர்கள் திருமண வேலைகளைத் தாங்களே செய்யக்கூடிய சாத்தியங்களை யோசிக்கலாம். தனித்தனியாக உள்ளூர் ஒப்பந்ததாரர்களிடம் பேசும்போது, மண்டப அலங்காரம், சமையல், மங்கள வாத்தியம் என ஒவ்வொருவரிடமும் தொகையைக் குறைத்துப் பேசலாம்'' என்கிறார் நாமக்கல்லில் உள்ள திருமண மண்டபத்தின் நிர்வாகி நித்யானந்தம்.