Published:Updated:

"இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல... பத்து ரூபாய்க்கு ஒரு டீசர்ட்!"- குவிந்த இளைஞர்கள், திணறிய ராசிபுரம்

பத்து ரூபாய் டீசர்ட்
News
பத்து ரூபாய் டீசர்ட்

ராசிபுரத்தில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சலுகை விலையாக ஒரு டீசர்ட் ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

"இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல... பத்து ரூபாய்க்கு ஒரு டீசர்ட்!"- குவிந்த இளைஞர்கள், திணறிய ராசிபுரம்

ராசிபுரத்தில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சலுகை விலையாக ஒரு டீசர்ட் ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
பத்து ரூபாய் டீசர்ட்
News
பத்து ரூபாய் டீசர்ட்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இளைஞர்களை கவரும் விதமாக, அறிமுக சலுகையாக பத்து ரூபாய்க்கு ஒரு டீசர்ட் வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு, இளைஞர்களைக் கவரும் வகையில் அன்று ஒருநாள் மட்டும் அந்தச் சலுகை விலையான 10 ரூபாய்க்கு ஒரு டீசர்ட் என்று விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தி இருந்தனர். உடனே, 10 ரூபாய்க்கு ஒரு டீசர்ட் வாங்குவதற்காக, அந்தக் கடையின் முன்பு அதிகாலை முதலே இளைஞர்கள் கூடியதால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

குவிந்த இளைஞர்கள்
குவிந்த இளைஞர்கள்

அந்த ரெடிமேட் கடையானது நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய்க்கு டீசர்ட் வாங்குவதற்காக பலரும் கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே பலரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்திவிட்டு, அந்தக் கடைக்குச் சென்றனர். நேரம் ஆக ஆக 200க்கும் அதிகமான இளைஞர்கள் அந்தக் கடை வாசலில் கூடியதால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீஸார் வந்து அவர்களை ஒழுங்குப்படுத்தினர்.

இந்நிலையில், அந்த கடை நிர்வாகத்தினர்,

"இளைஞர்களைக் கவரும் வகையில் பலவகையான ஆடைகளை விற்பனை செய்ய உள்ளோம். அதனால், அவர்களின் பார்வையை எங்கள் கடையை நோக்கி திருப்புவதற்காக, இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டோம். இன்று ஒருநாள் மட்டும், 'ஒரு டீசர்ட், ரூ.10' என விலை வைத்து விற்பனை செய்தோம்.

டீ சர்ட் வாங்கக் குவிந்த கூட்டம்
டீ சர்ட் வாங்கக் குவிந்த கூட்டம்

ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் வந்தது. ராசிபுரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஆர்வமாக எங்கள் கடைக்கு வந்து, டீ-சர்ட்டை வாங்கிச் சென்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி, பெண்களும் டீ-சர்ட்டை வாங்கக் குவிந்தனர்" என்றார்கள்.