Published:Updated:

பெண்கள், ஆண்கள்... உடல்வாகுக்கு ஏற்ற ஜீன்ஸ் எது? - ஒரு கைடன்ஸ்

ஜீன்ஸ்
ஜீன்ஸ் ( LaylaBird )

எல்லோருக்கும் ஒரேபோன்று உடலமைப்பு இருப்பதில்லை. ஆனால், மார்க்கெட்டில் சில குறிப்பிட்ட உடலமைப்பை அடித்தளமாக வைத்தே ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.

'ஜீன்ஸ்' நம் அலமாரியில் என்றைக்கும் பிஸியாக இருக்கும் ஓர் உடை என்றே சொல்லலாம். ஆனால், சரியான ஜீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம். சைஸ், ஃபிட் என்று ஏகப்பட்ட அளவுகோல்களைச் சரிபார்த்த பிறகே ஜீன்ஸ் வாங்குவோம். என்றாலும், உடுத்திய பிறகு நாம் நினைத்த வடிவமைப்பு மற்றும் ஃபிட் இருக்காது. இதற்கான காரணங்கள் பல.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

எல்லோருக்கும் ஒரேபோன்று உடலமைப்பு இருப்பதில்லை. ஆனால், மார்க்கெட்டில் சில குறிப்பிட்ட உடலமைப்பை அடித்தளமாக வைத்தே ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றுள் சரியான உடையைத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகம் எழாமல் இருப்பதில்லை. உதாரணத்திற்கு, சிலருக்குத் தோள்பட்டை பெரியதாக இருக்கும். அதை மறைப்பதற்கான உடையைத் தேடித்தேடி வாங்குவார்கள். இதுபோன்று ஷாப்பிங் செய்யும் நேரங்களில் ஏகப்பட்ட சந்தேகங்கள் மனதில் எழுவதுண்டு. அதிலும் ஜீன்ஸ் தேர்ந்தெடுக்கும்போது பலருக்கும் தோன்றும் வழக்கமான சந்தேகம், `எந்த வகை ஜீன்ஸ் மிகக் கச்சிதமாகப் பொருந்தும்' என்பதுதான்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

ஸ்லிம் ஃபிட் முதல் பெல் பாட்டம்வரை எண்ணிலடங்கா ஜீன்ஸ் வகைகள் இருக்கின்றன. அவற்றுள் எந்த ஜீன்ஸ் பேன்ட் யாருக்குச் சரியாக இருக்கும் என்பதைப் பற்றி விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆடை வடிவமைப்பாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான தீக்ஷிதா நிகாம்.

தீக்ஷிதா நிகாம்.
தீக்ஷிதா நிகாம்.

``பொதுவாகவே பெண்களின் உடலமைப்பை பியர் (Pear), ஆப்பிள், தலைகீழ் முக்கோணம், ஹவர்கிளாஸ் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

  • தோள்பட்டை அளவு சிறியதாகவும் தோள்பட்டையைவிட இடுப்பளவு சற்று பெரியதாகவும் இருக்கும் உடலமைப்பு பியர் அல்லது முக்கோண வடிவ உடலமைப்பு.

  • ஆப்பிள் உடலமைப்பு கொண்டவர்களின் உடல் சற்று பருமனாக இருக்கும்.

  • தோள்பட்டையின் அளவு பெரியதாகவும், இடுப்பளவு சிறியதாகவும் இருப்பவர்கள் தலைகீழ் முக்கோண உடலமைப்பு கொண்டவர்கள்.

  • தோள்பட்டை மற்றும் இடுப்பு ஒரே அளவிலிருந்து, ஆழமான வெய்ஸ்ட் பகுதி இருப்பவர்கள் ஹவர்கிளாஸ் உடலமைப்பைச் சேர்ந்தவர்கள்.

  • உடலமைப்பு மட்டுமல்ல, உயரத்தின் அளவுகோல்களையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.

  • அப்போதுதான் சரியான ஜீன்ஸ் பேன்ட்டைத் தேர்வு செய்யமுடியும். இப்படிச் செய்வதால் சரியான அளவு மற்றும் கம்ஃபர்ட் கிடைக்கும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

பியர் வடிவப் பெண்களின் இடுப்புப் பகுதி பொதுவாகவே பெரியதாக இருக்கும். எனவே, அப்பகுதியைக் குறைத்துக் காட்டக்கூடிய ஜீன்ஸ் வகையைத்தான் இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களுக்கு ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ், அதாவது பெல்லி பட்டனுக்கு மேலே ஜீன்ஸ் பட்டன் வரும்படியான பேன்ட்கள் கச்சிதமாக இருக்கும். அதேநேரம் உடலோடு ஒட்டியிருக்கும் ஸ்ட்ரெட்ச்சபிள் துணிவகையைத் தவிர்க்க வேண்டும். நேரோ (Narrow), மாம் (Mom) மற்றும் பாய் ஃபிரண்டு (Boy Friend) ஜீன்ஸ் வகைகள் இவர்களுக்கான சரியான சாய்ஸ். உயரமானவர்களுக்கு பூட் லெக் (Boot Leg) ஜீன்ஸ் வகை பொருந்தும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்
இறுக்கமான ஜீன்ஸ், நீண்டநேரப் பயணம், காலில் ரத்த உறைவு! -இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

தலைகீழ் முக்கோண வடிவப் பெண்களின் தோள்பட்டை பெரியதாக இருப்பதால், அவற்றை மறைக்கும் தோற்றத்தைக் கொடுக்கும் உடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு. அந்த வகையில் இவர்கள் லோ-வெயிஸ்ட்(Low-Waist), அதாவது பெல்லி பட்டனுக்குக் கீழே ஜீன்ஸ் பட்டன் இருக்கும்படியான ஜீன்ஸைத் தேர்ந்தெடுப்பது பெட்டர். இதனால், அவர்களின் அகன்ற தோள்பட்டையைக் குறுகலாகக் காட்டும் தோற்றத்தை உருவாக்க முடியும். இந்த உடலமைப்பிலுள்ள உயரமான பெண்களுக்கு பூட் லெக், பாய் ஃபிரெண்டு ஜீன்ஸ் சரியாக இருக்கும். உயரம் சற்றுக் குறைந்து இருப்பவர்கள், ஸ்கின்னி ஜீன்ஸ் வகையை உடுத்தலாம். பருமனாக இருப்பவர்கள், உடலை இறுக்கும்படியான உடைகளை உடுத்தக்கூடாது.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

ஆப்பிள் வடிவமைப்பு கொண்டவர்கள், ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் பொதுவாகவே பருமனாக இருப்பதால், உயரம் குறைவாகத் தெரிவார்கள். அதை, நேரோ அல்லது லூஸ் ஃபிட்டிங் பேன்ட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சரிசெய்யலாம். இது உயரத்தை அதிகரித்துக் காட்டும். அதேபோல உடல் பருமனையும் குறைத்துக் காட்டும். மிட்-வெய்ஸ்ட்(Mid-Waist), அதாவது தொப்புள் அளவுக்கு ஜீன்ஸ் பட்டன் வரும்படியான ஜீன்ஸ் வகைகளும் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

ஹவர்கிளாஸ் உடலமைப்பு கொண்டவர்களுக்கு எல்லா விதமான ஜீன்ஸ் வகைகளும் பொருந்தும் என்றாலும், ஹை-வெயிஸ்ட் ஜீன்ஸ்களில் இன்னும் அழகாகத் தெரிவார்கள். அவர்களின் ஸ்கின் டோனுக்கு ஏற்ற ஜீன்ஸ் ஷேடுகளைத் தேர்ந்தெடுத்தால் மிகவும் கச்சிதமாக இருக்கும். ஸ்கின்னி மற்றும் பென்சில் ஃபிட் ஜீன்ஸ் அவர்களுடைய பெர்சனாலிட்டியை மெருகேற்றும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்
ஆண்களின் உடலமைப்பை சதுரம் மற்றும் தலைகீழ் முக்கோணம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

பொதுவாகவே லோ-வெயிஸ்ட் ஜீன்ஸ் வகைதான் ஆண்களுக்கென்று வடிவமைக்கப்படுகிறது. இவர்களுக்குக் கால்களுக்கான ஃபிட் மட்டுமே சரிபார்க்க வேண்டும். அதிலும் ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்கள் பென்சில் ஃபிட் ஜீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

நிச்சயம் ஆண்களுக்கு ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ் பேன்ட் இருக்காது, அணியவும் கூடாது. மிட் அல்லது லோ வெய்ஸ்ட் ஜீன்ஸை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். தொப்பை இருப்பவர்கள் லோ-வெய்ஸ்ட் ஜீன்ஸ் அணியலாம். சிலர் தொப்பையை மறைக்கும் என்று மிட்-வெய்ஸ்ட் உடுத்துவார்கள். ஆனால், இது உடல் பருமனை அதிகரித்துக் காட்டுமே தவிர மறைக்காது. மேலும், கால் பகுதிகளையும் சீரற்ற முறையில் காட்டும். எனவே கவனம்."

அடுத்த கட்டுரைக்கு