”மகுடம் சூடியதோடு முடிவதல்ல வெற்றி. அதன் தொடர்ச்சியாக நாம் எப்படி உருவாகப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது முழுமையான வெற்றி. இந்த உலக அழகிப் போட்டி எனக்குக் கற்றுக்கொடுத்த பாடமும் இதுதான்” என்று தன்னம்பிக்கைக் குறிப்போடு பேசத் தொடங்குகிறார் 2019-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு, இரண்டாம் ரன்னர்-அப் சுமன் ரத்தன் சிங் ராவ். கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தார் இந்திய அழகி சுமன் ராவ். இவர், 2019-ம் ஆண்டின் மிஸ் ஆசிய அழகிப் போட்டியின் வெற்றியாளரும்கூட. வெற்றி வாகை சூடி நாடு திரும்பிய சுமனோடு பேசினோம்.

“மிஸ் வேர்ல்டு பயணம் எப்படி இருந்தது?”

“இந்தப் பயணத்தின் ஒவ்வொரு தருணமும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவம். இந்த வெற்றி தனி நபரால் உருவாக்கப்பட வில்லை. இதற்காக நான் தீவிரமாக உழைத்திருந்தாலும் என்னுடன் பயணித்த ஒவ்வொரு வரும் இதற்குக் காரணம். மேலும், என்னுடைய `புராஜெக்ட் பிரகதி' திட்டத்திற்கு நல்லதொரு பிளாட்ஃபார்ம் கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது நிறைவாக உணர்கிறேன்.”

“ `புராஜெக்ட் பிரகதி’ பற்றி?’’

“Fbb கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு-2019 இயக்கத்தோடு இணைந்து, ‘புராஜெக்ட் பிரகதி’ என்ற என்னுடைய பியூட்டி வித் எ பர்பஸ், அதாவது, அழகுடன் ஒரு நோக்கம் திட்டத்தைத் தொடங்கினேன். இந்தத் திட்டம், மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லியின் தலைமையிலான, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனம். இதன்மூலம் லட்சக்கணக்கான பணம் திரட்டப்பட்டு உலகெங்கிலும் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், ‘புராஜெக்ட் பிரகதி’ என்னுடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.”

“உங்களின் அடுத்தகட்டப் பயணம் எதை நோக்கி?”

“இரண்டாவது ரன்னர்-அப்பாக இருப்பதால், அடுத்த ஓராண்டுக்கு மிஸ் வேர்ல்டு அமைப்பு மற்றும் 2019-ம் ஆண்டின் உலக அழகியோடு இணைந்து பல சமூக நலத்திட்டங்களில் பணியாற்ற வேண்டும். இதுவே இந்தப் போட்டியின் முதன்மை நோக்கமும்கூட. எனவே, என் முழு ஈடுபாடும் இதில்தான் இருக்கப் போகிறது.”

“சமீப காலமாக இந்தியப் பெண்கள் ஏராளமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதாவது பாலியல் சீண்டல்களைக் கடந்து வந்திருக்கிறீர்களா?’’

“அதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டது இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்கள் அமைதியாக இருக்கக்கூடாது. பெண்களின் மௌனம்தான் சில ஆண் மிருகங்களின் ஆயுதம். எனவே எதற்கும் பெண்கள் தயங்கி நிற்கக்கூடாது. மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டிய காவலர்களும் அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே உறுதுணையாக இருக்க வேண்டும்.”