Published:Updated:

``எல்லா காஸ்ட்யூம்லயும் சமந்தாதான் க்யூட் ஃபிட்! ஏன்?'’ – காஸ்ட்யூமர் அனிதா டோங்க்ரே

Anita Dongre with Samantha
Anita Dongre with Samantha

ஒருமுறை 'Duchess of Cambridge' கேட் மிடில்டன் இந்தியா வந்திருந்தபோது, அனிதா வடிவமைப்பிலான உடையைத்தான் தேர்ந்தெடுத்து உடுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட நான், மிகவும் கண்டிப்பான குடும்பத்திலிருந்துவருகிறேன். என் குடும்பத்திலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு, தொழில்முறை வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. ஆரம்பத்தில், குடும்பத்தின் எதிர்ப்பை கடுமையாகவே கடக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் தங்கள் ஆதரவைக் காட்டியவுடன், மற்றதைப் பற்றி எதுவும் யோசிக்கவில்லை. என் இலக்கை நோக்கி மட்டுமே பயணித்தேன்" என்று கூறும் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்க்ரே, நான்கு முன்னணி ஃபேஷன் பிராண்டுகளை உருவாக்கி, பல கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

Anita Dongre with FLO team
Anita Dongre with FLO team

மேற்கத்திய உடைகளுக்கு, 'AND'. இந்தியப் பாரம்பர்ய உடைகளுக்கு, 'குளோபல் டெசி (Global Desi)'. மணமக்கள் ஆடைகளுக்கு, 'அனிதா டோங்க்ரே'. ஆர்கானிக் ஆடைகளுக்கு 'அனிதா டோங்க்ரே கிராஸ்ரூட்' என நான்கு கேட்டகரியில் உருவாகும் இவரின் ஆடைகளுக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒருமுறை Duchess of Cambridge கேட் மிடில்டன் இந்தியா வந்திருந்தபோது, அனிதா வடிவமைப்பிலான உடையைத்தான் தேர்ந்தெடுத்து உடுத்தினார். கடந்த மாதம், FLO எனும் பெண்கள் அமைப்பு சென்னையில் நடத்திய 'Anecdotes of Branded Ambitions' விழாவில் கலந்துகொண்ட அனிதாவோடு உரையாடினோம்.

உங்கள் இன்ஸ்பிரேஷன் என்ன?

Anita Dongre
Anita Dongre

உண்மையிலேயே, எது என்னை இந்த ஃபேஷன் டிசைனிங் உலகிற்குக் கொண்டுவந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால், சிறு வயதிலிருந்து ஆடை வடிவமைப்பு மீது அதிக அளவு ஆர்வம் இருந்தது. இதுதான் என்னுடைய ஃபேஷன் என்று முடிவு செய்தேன். அதை நோக்கி மட்டுமே என் பயணம் இருந்தது. அதற்காக நிறைய போராடியிருக்கிறேன். என்னைத் தூங்கவிடாமல் செய்த என் ஃபேஷன், இறுதியில் என்னுடைய தொழிலானதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதன் முதலில் ஆடை வடிவமைத்தது எப்போது?

கல்லூரியில் பயிலும்போதுதான் என் முதல் ஆடையை வடிவமைத்தேன். பெண்மையை அழகாகக் காட்ட வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதேசமயம், உடுத்துபவர்களுக்கு கம்ஃபர்டபிளாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அன்று மட்டுமல்ல இன்றும் அந்த ஃபார்முலாவைத்தான் பின்பற்றிவருகிறேன்.

'அழகு', பார்ப்பவரின் பார்வையில்தான் முற்றிலும் இருக்கிறது.
அனிதா டோங்க்ரே

உங்கள் ஃபேவரைட் ஃபேஷன் ஐகான் யார்?

ஒருவரை மட்டும் சொல்வது மிகவும் கடினம். நான் ரசிக்கும் ஐகானிக் நபர்கள் திரைத்துறையில் மட்டுமல்ல, என் வாடிக்கையாளர்களுள் ஒருவராகவும் தினமும் பயணம்செய்யும் சாலைகளிலும் இருக்கின்றனர். என் வடிவமைப்பிற்காக, அவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த அவுட்ஃபிட் எது?

நூற்றுக்கணக்கில் ஆடைகளை வடிவமைத்தவருக்கு ஒன்று அல்லது இரண்டு ஆடைகள் மட்டும் ஃபேவரரைட்டாக இருக்க முடியாது. அது மிகவும் கடினம். ஆனால், என் பெரும்பாலான டிசைன்களுக்கு அடித்தளமாக இருக்கும் ராஜஸ்தான் வேலைப்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆடை வடிவமைப்பாளர் ஆகவில்லை என்றால், சிறிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருப்பேன்.
அனிதா டோங்க்ரே

இந்தியப் பெண்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

தற்போதுள்ள இந்தியப் பெண்கள் மாற்றங்களை அதிகம் விரும்புகின்றனர். உரிமைக்குரல் எழுப்பி தங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவான முடிவெடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியப் பெண்கள் மிகவும் சுவாரஸ்யமான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, நிச்சயம் அவர்களால் செய்து முடிக்க முடியும். நம்பிக்கையை மட்டும் எந்தக் காரணத்திற்காகவும் கைவிட்டுவிடக் கூடாது.

Anita Dongre's Bridal collection
Anita Dongre's Bridal collection

மணப்பெண்ணுக்கான உங்களின் டிப்ஸ்?

கடைசி நேரத்தில் எந்த வேலையையும் செய்யாதீர்கள். முன்கூடியே நன்கு திட்டமிடுங்கள். இது, நிச்சயம் உங்களின் நாளை சிறப்பாக வைத்துக்கொள்ளும். அதிகப்படியான ஒப்பனைகள் செய்து, உங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிக்கொள்ளாதீர்கள். சிம்பிள் மற்றும் கியூட்டாக எப்போதும் சிரிப்பை சுமந்துகொண்டு இருங்கள்.

பெண் தொழில்முனைவோர்களுக்கு உங்களின் அட்வைஸ்?

இது ஒரு மிகப் பெரிய பயணம். தோல்வியோ வெற்றியோ, அனைத்தையும் முழுமையாக அனுபவியுங்கள். தைரியமாக பெரிய கனவுகளைக் காணுங்கள். அதை நோக்கிப் பயணம் செய்யுங்கள். கடின உழைப்பு மற்றும் நல்லொழுக்கம் மிகவும் அவசியம். இவ்விரண்டும் தொழிலில் தவிர்க்க முடியாதவை. எப்போதும் நேர்மறையாக இருங்கள். உங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் நிச்சயம் வளருவார்கள்.

பொல்கா ஷர்ட் முதல் பெல்பாட்டம் பேன்ட் வரை... ஆண்களுக்கான ரெட்ரோ ஸ்டைல் ஃபேஷன்!

ஃபேவரைட் கோலிவுட் ஸ்டார்?

Samantha in Anita Dongre costume
Samantha in Anita Dongre costume

சமந்தா. மிகவும் அழகானவர். தென்னிந்திய கைவினைப்பொருள்களை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். எங்களுடன் இணைந்து கைத்தறி ஆடைகளின் ப்ரொமோஷனுக்காகப் பணியாற்றியிருக்கிறார். எல்லா விதமான ஆடைகளிலும் மிடுக்கான தோற்றத்தைக் கொண்டிருப்பவர். எனக்கு தனிப்பட்ட வகையிலும் அவரை மிகவும் பிடிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு