Published:Updated:

ஜிமிக்கி கம்மல்... ஃபியூஷன் ஸ்டைல்! - இந்தியன் லுக் இவான்கா ட்ரம்ப்

இவான்கா
இவான்கா

அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா கடந்த செப்டம்பர் மாதம் அர்ஜென்டினா நாட்டுக்குச் சென்றிருந்தபோது அணிந்திருந்த உடையையே அகமதாபாத்துக்கும் அணிந்துவந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

டாமி ஹில்ஃபிகர் பிராண்டின் அச்சு விளம்பரத்துக்கு மாடல், வெர்ஸாசே பிராண்டின் ஃபேஷன் ரன்வே மாடல் என மாடலிங் துறை அனுபவம் உள்ள இவான்கா ட்ரம்ப்பின் ஃபேஷன் சென்ஸை ரசிப்பதற்காகவே ஃபேன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

டாமி ஹில்ஃபிகர்
டாமி ஹில்ஃபிகர்

அதை நிரூபிக்கும் வகையில் இருந்தன இந்தியா வந்திருந்த இவான்காவின் உடைகளும் தோற்றமும்.

டீன் ஏஜ் பெண்களின் தற்போதைய ஹாட் டிரெண்டான 'ஒன் பீஸ்' மிடி டிரெஸ்ஸை அணிந்து அகமதாபாத் வந்திறங்கினார் இவான்கா ட்ரம்ப். நீல வண்ண டிரெஸ்ஸில் சிவப்பு வண்ணப் பூக்கள் பிரின்ட் செய்யப்பட்ட இந்த உடை சம்மரில் பெண்களுக்கு செளகர்யமான உடையாக இருப்பதுடன் டிரெண்டி லுக் தரும்.

இவான்கா
இவான்கா
bhaskarlive.in

கணவருடன் தாஜ்மஹாலில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இவான்கா, இந்த உடையுடன் முத்துகள் கோத்த இந்தியப் பாரம்பர்ய அணிகலனான ஜிமிக்கி அணிந்து ஃபியூஷன் ஸ்டைலில் வந்திருந்தது பார்த்தவர்களை 'அட' போட வைத்தது.

நடிகைகள் மட்டுமன்றி சராசரி பெண்கள்கூட ஒருமுறை அணிந்த உடையைத் திரும்ப அணிய விரும்புவதில்லை. வேறு வழியில்லாமல் தம்மிடம் இருக்கும் உடைகளையே மிக்ஸ் மேட்ச் செய்து அணிந்து, தினம் தினம் புதிதா தோற்றமளிக்க விரும்புகிறார்கள்.

இவான்கா
இவான்கா
KEVIN LAMARQUE

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா, கடந்த செப்டம்பர் மாதம் அர்ஜென்டினா நாட்டுக்குச் சென்றிருந்தபோது அணிந்திருந்த உடையையே அகமதாபாத்துக்கும் அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நேற்று காலை ராஜ்பவனுக்கு வருகை தந்தனர் ட்ரம்ப் குடும்பத்தினர். இந்திய டிசைனரின் வடிவமைப்பில் உருவான, ஷெர்வானி உடையில் `ராயல்' டச்சுடன் மிடுக்காக நடந்துவந்தார் இவான்கா.

அனிதா டோங்க்ரே
அனிதா டோங்க்ரே

மும்பையை பூர்வீகமாகக்கொண்ட ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்க்ரே 20 வருடங்களுக்கு முன்பு டிசைன் செய்திருந்த `ஸ்ருஹுர்தி' எனப்படும் ஷெர்வானி உடையின் புது மாடல்தான் தற்போது இவான்கா அணிந்திருப்பது.

இவான்கா
இவான்கா

கிளாஸிக் டிசைனான இந்த `பந்த்கலா' மாடல் ஷெர்வானி, கைகளால் நெய்யப்பட்ட, வெஸ்ட் பெங்காலின் முர்ஷிதாபாத் பட்டில் உருவானதாம்.

இவான்கா
இவான்கா

இண்டோ வெஸ்டர்ன் ஸ்டைல் உடையான இதற்கும் இந்தியப் பாரம்பர்ய அணிகலனான போல்கி கம்மல் அணிந்திருந்தார்.

அகமதாபாத்தில் இவான்கா அணிந்திருந்த ஜிமிக்கி கம்மலின் அழகில் மயங்கியோ என்னவோ, நேற்றிரவு ராஷ்ட்ரபதிபவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துக்கு வருகைதந்த மெலனியா ட்ரம்ப்பும் வெஸ்டர்ன் ஸ்டைல் லாங் கவுன் மற்றும் காதுகளில் அமரபள்ளி ஜிமிக்கி அணிந்து வந்து அசத்தினார்.

ட்ரம்ப் குடும்பத்தினர்
ட்ரம்ப் குடும்பத்தினர்

அதேபோல் இரவு விருந்துக்கு வந்திருந்த இவான்கா, டெல்லியின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ரோஹித் பால் வடிவமைத்த `பந்த்கலா' மாடல் ஃபுல் கவுனில் வந்திருந்தார்.

பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!
ரோஹித் பால்
ரோஹித் பால்

ட்ரம்ப் பெண்களின் இந்திய காதல்!

அடுத்த கட்டுரைக்கு