Published:Updated:

ஜூனியர் ஸ்ரீதேவியின் பாவாடை, தாவணிக் காதல்!‍

ஸ்ரீதேவியின் கலாசாரக் காதல்... தொடர்கிறாரா ஜான்வி?

ஸ்ரீதேவியுடன் ஜான்வி
ஸ்ரீதேவியுடன் ஜான்வி ( instagram.com/janhvikapoor )

என்னதான் வட இந்திய மருமகளானாலும் தமிழ்நாட்டுக் கலாசாரத்தைத் தன்னோடு முடித்துக்கொள்ளாமல், தன்னுடைய மகள்களுக்கும் கற்பித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

குடும்பத்தினருடன் ஸ்ரீதேவி
குடும்பத்தினருடன் ஸ்ரீதேவி

2017-ம் ஆண்டு கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷியுடன், ஷில்பா ஷெட்டி அளித்த தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்டதுதான் ஸ்ரீதேவியின் கடைசி தீபாவளி.

Vikatan

2008-ம் ஆண்டு தீபாவளியின்போது போனிகபூர், ஸ்ரீதேவிக்கு பனீர் ஊட்டிவிடும் புகைப்படம் ஒன்று வெளியானது. தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பனீர் ஊட்டிவிடும் நிகழ்வு அவர்கள் வழக்கத்தில் உள்ளது.

2008 மற்றும் 2018 ஆம் ஆண்டு தீபாவளி
2008 மற்றும் 2018 ஆம் ஆண்டு தீபாவளி
Twitter

சரியாக பத்து ஆண்டுகள் கழித்து 2018 -ம் ஆண்டு போனிகபூர் தன் மகள் ஜான்விக்கு பனீர் ஊட்டிவிட இரண்டாவது மகள் குஷி அதைப் படம் பிடித்துள்ளார்.

ஸ்ரீதேவி மறைந்த வருடமான 2018-ம் ஆண்டின் சோகமயமான தீபாவளியை மறந்து இந்த வருடம் கபூர் குடும்பத்தில் தீபாவளி களைகட்டியது, மகிழ்ச்சியான அந்தத் தருணத்தைப் பதிவுசெய்யும் விதமாக குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கபூர் ஃபேமிலி. குடும்பப் புகைப்படத்தில் தந்தைவழி கலாசாரத்தைப் பின்பற்றும் விதமாக லெஹங்கா அணிந்திருந்தார் ஜான்வி.

கும்பத்துடன் ஜான்வியின் தீபாவளி கொண்டாட்டம்
கும்பத்துடன் ஜான்வியின் தீபாவளி கொண்டாட்டம்
instagram.com/janhvikapoor

ஸ்ரீதேவி மற்றும் ஜான்வியின் ஃபேவரைட் டிசைனரான மனீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த இந்தத் தங்க நிற லெஹெங்காவில் மத்தாப்பாக மின்னினார் ஜான்வி.

அதே சமயம், வட இந்தியாவின் 'தீபாவளி பார்ட்டி' கலாசாரத்தின்படி, கரண் ஜோஹர் அளித்த பார்ட்டியில் தன் அண்ணன் அர்ஜுன் கபூருடன் கலந்துகொண்ட ஜான்வி, முழுக்க முழுக்க தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டாரோ என எண்ணும் அளவுக்கு,16 வயதினிலே மயிலு மாதிரி பாவடை தாவணியில் பளிச்சென வந்திருந்தார்.

ஸ்ரீதேவி - ஜான்வி
ஸ்ரீதேவி - ஜான்வி
instagram

அதுவும், படத்தில் மயிலு கேரக்டருக்கு ஸ்ரீதேவி அணிந்திருந்த அதே ராணி பிங்க் நிறத்தில் தாவணி அணிந்திருந்தார் ஜான்வி.

இப்போது மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின் அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப்பெற வந்த இளைய மகள் குஷி பாவாடை தாவணியையும் ஜான்வி ஸ்ரீதேவியின் பட்டுப்புடவையையும் அணிந்து வந்திருந்தனர்.

தமிழ்ப் பெண்களின் பாரம்பர்ய உடைகளில் ஜான்வி
தமிழ்ப் பெண்களின் பாரம்பர்ய உடைகளில் ஜான்வி
instagram

கடந்த ஆகஸ்டு பதிமூன்றாம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு திருப்பதி தரிசனத்துக்கு வந்தபோதும், பச்சை நிறப் பாவடை தாவணியில் கோயிலைச் சுற்றி வலம் வந்தார் ஜான்வி.

தாய் ஸ்ரீதேவியைப் போலவே வட இந்திய உடை, தென்னிந்திய உடை மட்டுமல்லாமல், தன் வயதுக்கேற்ற ட்ரெண்டியான மேல்நாட்டு உடைகளிலும் கலக்குகிறார் ஜான்வி.

ஜான்வி - ஸ்ரீதேவி
ஜான்வி - ஸ்ரீதேவி
bollywoodshaadis.com

தாயைப் போலப் பிள்ளை!