Published:Updated:

ஜஸ்டின் பீபரின் `லாரல் மாலை'!- இந்தப் புதிய டாட்டூக்கு காரணம் செலீனாவா?

ஜஸ்டின் பீபர்
ஜஸ்டின் பீபர்

செலீனாவின் இந்த வார்த்தைகள் ஜஸ்டினை தூண்டிவிட்டதோ என்னவோ, தன் உடம்பில் மிச்சமிருந்த பகுதியில் `லாரல் மாலை'யை டாட்டூவாக வரைந்துள்ளார் ஜஸ்டின்.

`அவ்வளவுதானா இல்ல இன்னும் மிச்சம் மீதி இருக்கா!' என்று சொல்கிற அளவுக்கு உடலை டாட்டூக்களால் அலங்கரித்திருக்கும் பிரபலம், கன்னடிய பாடலாசிரியரும் பாடகருமான ஜஸ்டின் பீபர்.

Justin Bieber
Justin Bieber

வெரைட்டியான டாட்டூக்களை உடல் முழுவதும் வரைந்துவைத்திருக்கும் இவர், சமீபத்தில் புதிய டாட்டூ ஒன்றை கழுத்துப் பகுதியில் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

க்ரெடிட் கார்டு திருடியவர், ஒரு குழந்தைக்கு அப்பா, வளர்ச்சி குன்றியவர், அவ்வளவு ஏன்... இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை `இறந்துவிட்டார்' உள்ளிட்ட `வதந்திகளின் ராஜா' என்று ஜஸ்டினை குறிப்பிடலாம். இந்த நிலையில், அமெரிக்கப் பாடகியும் தயாரிப்பாளருமான செலீனா கோமெஸ், ஜஸ்டின் பீபரோடு காதல் வயப்பட்டார்.

Justin with Selena Gomez
Justin with Selena Gomez

உலகமே பொறாமைகொள்ளும் அளவுக்கு நகர்ந்த இவர்களின் காதல், மிகக் குறுகிய நாள்களிலேயே முறிந்துபோனது.

தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு, தன் சிறுவயது தோழியான ஹெய்லி பால்டுவின்னை திருமணம் செய்துகொண்டார் ஜஸ்டின். இந்த நிலையில், கடந்த வாரம் வெளிவந்த செலீனாவின் நேர்காணல் ஒன்றில், ஜஸ்டின் உடனான காதல் உறவில்தான் ஏராளமான துன்பங்களை அனுபவித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

Justin with his wife Hailey
Justin with his wife Hailey

செலீனாவின் இந்த வார்த்தைகள் ஜஸ்டினை தூண்டிவிட்டதோ என்னவோ, தன் உடம்பில் மிச்சமிருந்த பகுதியில் `லாரல் மாலை'யை டாட்டூவாக வரைந்துள்ளார் ஜஸ்டின்.

26 வயதாகும் ஜஸ்டினின் இந்த 'டாட்டூ காதல்' 16 வயதில் தொடங்கியது. ஏற்கெனவே துப்பாக்கி, விலங்குகள், பூக்கள், மத அடையாளங்கள் உள்ளிட்ட வெவ்வேறு டிசைன்களை உடல் முழுவதும் பச்சைகுத்தியிருக்கும் இவர், இந்த லாரல் மாலை மூலம் சொல்லும் செய்தி, தான் ஒரு வெற்றியாளர் என்பதுதான்.

Justin with his new Tattoo
Justin with his new Tattoo
`பெண்களின் ரெட்ரோ ஃபேஷன் உடைகளில் ரன்வீர்!'- தீபிகாவையும் தொற்றிக்கொண்ட `அதே' ஸ்டைல்

கிரேக்கப் புராணங்களில் வெற்றியின் அடையாளமாக தலையில் சூடப்படும் கிரீடம்தான் இந்த லாரல் மாலை. இதை ஜஸ்டின் கழுத்தில் பதித்து வைத்திருப்பதற்கு முதன்மைக் காரணம், `செலீனாவாக இருக்குமோ' என்ற கேள்விதான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு