Published:Updated:

இந்தியாவில் கொடிதினம், லண்டனில் `பாப்பி தினம்'.. முதல்முதலாக ப்ரூச் அணிந்த கேட் மிடில்டன்!

``ஒவ்வொரு நேர்த்தியான பாப்பி ப்ரூச்சும், ப்ளெட்ச்லி பார்க்கில் பணிபுரிந்த 13,000 பணியாளர்களை நினைவில்கொண்டு சான்றிதழோடு வடிவமைக்கப்பட்டது."

Queen Elizebeth and Kate Middleton
Queen Elizebeth and Kate Middleton

இந்திய முப்படை வீரர்களின் பணிகளையும் தியாகத்தையும் போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இந்தியாவில் `கொடி நாள்' கொண்டாடப்படுகிறது. அதேபோல், முதலாம் உலகப் போரின் முடிவிலிருந்து வருடந்தோறும் காமன்வெல்த் நாடுகள் இணைந்து, போரில் இறந்த தங்களின் ஆயுதப்படை உறுப்பினர்களின் நினைவாக `பாப்பி தினம்' என அனுசரிக்கப்படுகிறது.

பாப்பி தினம்
பாப்பி தினம்

2019-ம் ஆண்டின் நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் செனோடாஃபில் (Cenotaph) நடைபெற்றது. இங்கு, நாம் நம் தேசியக் கொடி அணிந்து தேசப்பற்றை வெளிப்படுத்துவது போல், இங்கிலாந்தில் `பாப்பி ப்ரூச் (poppy brooch)' அணிவது வழக்கம். இதில் கலந்துகொண்ட `டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜ்' கேட் மிடில்டன் அணிந்திருந்த `பாப்பி ப்ரூச்' அனைவரையும் கவர்ந்தது.

வித்தியாச மற்றும் தனிப்பட்ட ஆடை தேர்வுகளுக்குப் புகழ்பெற்றவர் கேட் மிடில்டன். அந்த வரிசையில், இந்தாண்டு நினைவு தினத்தன்று நேவி நிற போட் நெக் மிடி டிரஸ், ஜிம்மி ச்சூ காலணி, கறுப்பு நிற ஜாரா ஹெட் பேண்டு அணிந்து மிடுக்காகத் தோன்றினார். இவர் அணிந்திருந்த `ஜாரா' ஹெட்பேண்டின் விலை 2,400 ரூபாய்.

Kate Middleton
Kate Middleton

இவற்றோடு மிடில்டன் அணிந்திருந்த ப்ரூச்தான் பார்வையாளர்களை அதிகமாகக் கவர்ந்தது. அவர், இதுபோன்று பாப்பி ப்ரூச் அணிவது இதுவே முதல்முறை. கேட்டின் பாட்டி வலேரி கிளாஸ்போரோவின் நினைவாக `கோட்பிரேக்கர்ஸ் பாப்பி ப்ரூச் (Codebreakers poppy brooch)' அணிந்து அஞ்சலி செலுத்தினார் கேட். முதலாம் உலகப் போரின்போது வலேரி, பிளெட்ச்லி பார்க்கில் சிக்னல் இன்ட்டெலிஜென்ஸ் (signal intelligence) பிரிவில் கோட்பிரேக்கராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

``ஒவ்வொரு நேர்த்தியான ப்ரூச்சும், ப்ளெட்ச்லி பார்க்கில் பணிபுரிந்த 13,000 பணியாளர்களை நினைவில்கொண்டு சான்றிதழோடு வடிவமைக்கப்பட்டது" என்று மிடில்டனுக்கு ப்ரூச் விநியோகம் செய்த நிறுவனம் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டது.

Harry and Meghan Markle on Rememberance Day
Harry and Meghan Markle on Rememberance Day
`உங்களாலும் உதவ முடியும்!'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்

`பாப்பி' என்பது படைவீரர்களுக்கான பணத்தைத் திரட்டுவதற்காக, மூத்த சங்கங்களால் விற்கப்படும் ஒரு செயற்கை மலர். மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரின்ஸ் ஹாரியின் மனைவி மேகன் மார்கில், கறுப்பு மிடி டிரஸ் அணிந்து கலந்துகொண்டார்.