Published:Updated:

`மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் என் ஃபாலோயர்கள்தான்!'- பிராண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

கானப்ரியா

'கிமோனோ', ஜப்பானியர்களின் பாரம்பர்ய உடைகளுள் ஒன்று. பாரம்பர்யப் பெயரை, உள்ளாடைக்கு சூட்டியதை எதிர்த்து, மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் செய்தனர்.

Kim Kardhashiyan
Kim Kardhashiyan

பிரபல அமெரிக்க மாடல், நடிகை மற்றும் தொழிலதிபரான கிம் கர்தஷியன், தன் புதிய 'ஷேப்வியர்' பிராண்டுக்கு 'கிமோனோ' என்று பெயர் சூட்டியது, சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர், அந்த பிராண்டுக்கு 'ஸ்கிம்ஸ்' என்று பெயர் மாற்றம் செய்து ஃபேஷன் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Kim's Tweet
Kim's Tweet

அனைத்து ஸ்கின் டோன் மற்றும் உடலமைப்புக்கும் ஏற்றபடி 'ஷேப்வியர்' கலெக்‌ஷனை சென்ற மாதம் வெளியிட்டார், கிம். வந்த வேகத்திலேயே ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார். அதற்குக் காரணம், 'கிமோனோ சொல்யூஷன்வியர்' என்று அவர் தேர்வுசெய்த பெயர்தான்.

'கிமோனோ', ஜப்பானியர்களின் பாரம்பர்ய உடைகளுள் ஒன்று. அந்த பாரம்பர்யப் பெயரை, உள்ளாடைக்கு சூட்டியதை எதிர்த்து, மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து, தற்போது இந்த ஷேப்வியர் கலெக்‌ஷனுக்கு 'ஸ்கிம்ஸ் (SKIMS) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தெரிவிக்கும் வகையில், தன் சமூக வலைதளப் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, சிறிய பதிவையும் பகிர்ந்திருக்கிறார், கிம்.

``இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்!" - ஏஞ்சலினா ஜோலி

அதில், "என்னுடைய ரசிகர்களும் என்னைப் பின்பற்றுபவர்களும்தான் என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர்களுடைய கருத்துகளைத்தான் நான் எப்போதும் கேட்கிறேன். ஒரு பிராண்டு பெயருக்காக அவர்கள் தங்கள் யோசனைகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஏராளமான பரிசீலனைக்குப் பிறகு, 'ஸ்கிம்ஸ் சொல்யூஷன் வேர்' அறிமுகத்தை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் கிம்மின் இந்த புதிய அறிமுகத்தை எதிர்நோக்கி, பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.