Published:Updated:

தாம்பூலத்தில் மாஸ்க், நியூஸ்பேப்பர் மலை, பட்டுச்சேலை பேக்ரவுண்டு... கொலு ஸ்பெஷல் டிப்ஸ்

கொலு
பிரீமியம் ஸ்டோரி
கொலு

கொலு வைக்க ரெடிமேட் படிக்கட்டுகள் இல்லையா... வீட்டில் இருக்கும் பழைய அட்டைப்பெட்டிகளில் புத்தகங்கள் மற்றும் காலண்டர் அட்டைகளை நிரப்புங்கள்

கொரோனா இன்னும் நம்மைவிட்டு முழுமையாக விலகவில்லை. இந்தச் சூழலில் நவராத்திரி ஷாப்பிங் செய்ய வெளியே செல்வது அவ்வளவு பாதுகாப் பானதல்ல. அதிகம் மெனக் கெடாமல் உங்கள் வீட்டுக் கொலுவை ஸ்பெஷலாக்க எளிமையான டிப்ஸ் தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இல்லத்தரசி வசந்தா.

தாம்பூலத்தில் மாஸ்க், நியூஸ்பேப்பர் மலை, பட்டுச்சேலை பேக்ரவுண்டு... கொலு ஸ்பெஷல் டிப்ஸ்

கொலு வைக்க ரெடிமேட் படிக்கட்டுகள் இல்லையா... வீட்டில் இருக்கும் பழைய அட்டைப்பெட்டிகளில் புத்தகங்கள் மற்றும் காலண்டர் அட்டைகளை நிரப்புங்கள். அட்டைப்பெட்டிகளை ஒன்றன்மீது ஒன்றாக, தேவையான அகலத்துக்கு அடுக்கவும். அட்டைப்பெட்டிகள்மீது வீட்டில் இருக்கும் புத்தகங் களைத் தேவையான உயரத்துக்கு வைத்து, படிக் கட்டுகள் போன்று செட் செய்யவும். இதன் மீது வேஷ்டி அல்லது சேலை விரித்தால் படிக்கட்டுகள் தயார்.

* கொலுவின் உயரத்தில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு பூ மாற்றும்போது சில நேரம் கைதவறி பொம்மைகள் கீழே விழுந்து உடையக்கூடும். இதைத் தவிர்க்க, படிக்கட்டுகளில் அடுக்கும்போதே, பொம்மைகளின் தலைப்பகுதியில் பிளாஸ்டிக் பூக்களை செலோ டேப் கொண்டு ஒட்டிவைத்து விடலாம்.

தாம்பூலத்தில் மாஸ்க், நியூஸ்பேப்பர் மலை, பட்டுச்சேலை பேக்ரவுண்டு... கொலு ஸ்பெஷல் டிப்ஸ்

* கொலு பார்க்க வருபவர்களுக்குக் கொடுக்கும் தாம் பூலத்தில் பிளவுஸ் துணி, மஞ்சள்கயிறு, வளையல் போன்றவற்றுடன் இந்த வருடம் மாஸ்க், சானிடைசர் வைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

* பார்க் செட் செய்யும்போது தரையில் மணல் கொட்டு வதைவிட, ஒரு சாக்குப்பை அல்லது சார்ட் பேப்பரை விரித்து அதில் மணல் கொட்டி செட் செய்யலாம். மணல் கலையாமல் இருக்கும். கொலு முடிந்ததும் எடுப்பதும் எளிது.

தாம்பூலத்தில் மாஸ்க், நியூஸ்பேப்பர் மலை, பட்டுச்சேலை பேக்ரவுண்டு... கொலு ஸ்பெஷல் டிப்ஸ்

* குன்றுகள் அல்லது மலை வைக்க களிமண் கிடைக்கவில்லையா? நியூஸ்பேப்பரை எடுத்து நன்றாகக் கசக்கிச் சுருட்டிக் கொள்ளவும். அதன்மீது அலுமினிய ஃபாயில் பேப்பரை வைத்துச் சுருட்டி, கைகளால் நன்றாகக் கசக்கி கூம்பு வடிவத்துக்கு கொண்டு வரவும். இதன்மீது பசை தடவி, டிஷ்யூ பேப்பர்களை ஒட்டவும். அது காய்ந்ததும், கறுப்பு, பிரவுன் நிற அக்ரிலிக் பெயின்ட்டுகளைக் கலந்து அடித்தால் குன்று அல்லது மலை வடிவம் தயார். கனமான அட்டையின்மீது இதை நிறுத்தி கொலுவில் வைக்கலாம்.

தாம்பூலத்தில் மாஸ்க், நியூஸ்பேப்பர் மலை, பட்டுச்சேலை பேக்ரவுண்டு... கொலு ஸ்பெஷல் டிப்ஸ்

* பட்டுச்சேலை அல்லது பட்டு வேட்டியை எடுத்து கொலுப்படிகளுக்குப் பின்புறம் தொங்க விடவும். அதில் பிளாஸ்டிக் பூக்களை ஆங்காங்கே ஒட்டினால் அழகான பேக் ரவுண்டு தயார்.

* சதுர வடிவ பிளாஸ்டிக் ட்ரே எடுத்துக்கொள்ளுங்கள். தரையில் ஒரு சாக்குப்பையை விரித்து அதன் மீது ட்ரேவை வையுங்கள். தெர்மாகோலை வெட்டி, ட்ரேயின் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் போன்று ஒட்டி பெயின்ட் செய்யவும். ட்ரேவை சுற்றி மணலைப் பரப்பினால் குளம் தயார். ட்ரேவின் உள்ளே தண்ணீர் ஊற்றி, நீங்கள் விரும்பும் சிலையை வைக்கலாம்.