லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

டிரெண்டில் இருக்கும் லினன், காதி காட்டன் புடவைகள்... செலக்‌ஷன் முதல் பராமரிப்பு வரை

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி

இந்தப் புடவைகளை குளிர்ந்த சோப்புத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து உடனே அலசி நிழலில் காயவைக்க வேண்டும்

நயன்தாரா, சாய் பல்லவி உட்பட பல பிரபலங்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் என்ன தெரியுமா? லினன் மற்றும் பிளெயின் காதி காட்டன் புடவைகள். பட்ஜெட்டும் குறைவு... லுக்கும் அசத்தலாக இருக்கும். லினன் மற்றும் காதி காட்டன் புடவைகளைத் தேர்வுசெய்வது முதல் ஸ்டைலிங் வரையிலான டிப்ஸ் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த டிசைனர் சிந்து.

சிந்து
சிந்து

என்ன ஸ்பெஷல்?

“லினன் புடவைகளைப் பொறுத்தவரை சிங்கிள் கலர், டபுள் கலர் என இரண்டு காம்பினேஷன்களில் கிடைக்கின்றன. 600 ரூபாயில் இருந்து வாங்கலாம். காதி காட்டன் புடவை களின் தனித்துவமே சிங்கிள் கலர்தான். இதை 500 ரூபாயில் இருந்து வாங்கலாம்.

யாருக்கு?

லினன் மற்றும் காதி காட்டன் புடவைகளை பருமனான பெண்கள், ஒல்லியான உடல்வாகுள்ள பெண்கள் என அனைவரும் அணியலாம். பருமனான பெண்கள், எந்த வகை காட்டன் மெட்டீரியல் புடவைகளுக்கும் ஷேப்வியர் பயன்படுத்த வேண்டும். எலாஸ்டிக் வைத்த மாடல் தவிர்த்து முடிச்சிட்டுக்கொள்ளும் மாடல் ஷேப்வியர்களை தேர்வு செய்து வாங்குங்கள்.

 லினன்
லினன்

பிளவுஸிலும் இருக்கட்டும் அக்கறை!

லினன், காதி புடவைகளைத் தேர்வுசெய்யும்போது பிளவுஸில் அதிக கவனம் செலுத்துங்கள். டிசைன்கள் இல்லாத பிளெயின் புடவைகள் எனில், புடவையின் நிறத் துக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் கலம்காரி, ஃப்ளோரல் பிரின்ட், காந்தாரி பிரின்ட் அல்லது காட்டனில் எம்ப்ராய்டரி செய்யப் பட்ட மெட்டீரியல்களை தேர்வுசெய்து வாங்கவும்.

போட் நெக், ஹை காலர், ஷர்ட் காலர் என பிளவு ஸின் நெக் டிசைனை வடிவமைத்தால் கம்பீர லுக் கிடைக்கும். அந்த லுக் வேண்டாம் என்றால் பெல் ஸ்லீவ், ரஃபில் ஸ்லீவ் போன்றவை அணிந்து ஃப்ரீ ஸ்டைலில் புடவை கட்டினால் அழகாக இருக்கும்.

டிரெடிஷனல் லுக் வேண்டுமென்றால் பிளவுஸை புரோகேடு மெட்டீரியலில் சில்வர் நிற பேட்டர்ன்கள் இருப்பது போன்று தேர்வுசெய்யலாம். ஆன்லைனில் சில நூறு ரூபாய்க்கே கிடைக்கும் வெஸ்ட்ர்ன் பெல்ட் அணிந்தால் அட்டகாசமாகத் தெரிவீர்கள்.

லினன் புடவையை ப்ளீட்ஸ் வைத்து உடுத்தாமல், சிங்கிள் ப்ளீட்டில் கட்டுவதுதான் அழகாக இருக்கும். சிங்கிள் ப்ளீட்டை கையாள்வது சிரமம் என்பவர்கள் சின்னச் சின்ன ப்ளீட்ஸ் வைத்து புடவை கட்டலாம்.

 காதி காட்டன்
காதி காட்டன்

அணிகலன்களிலும் அப்டேட் ஆகுங்கள்!

லினன், காதி காட்டன் புடவைகளுக்கு ஆக்ஸிடைஸ்டு, கிரிஸ்டல், ஜூட், பீடடு ஜுவல்லரி பெஸ்ட் சாய்ஸ். க்ளோஸ் நெக் டிசைன் பிளவுஸ் என்றால், காலர் எலும்பு களுக்கு கீழ் இருப்பது போன்ற அணிகலன்களைத் தேர்வு செய்யுங்கள். நார்மல் ரவுண்டு நெக் அல்லது வி-நெக் எனில் லாங் நெக் பீஸ் அசத்தலாக இருக்கும்.

கவனமாகக் கையாளுங்கள்...

லினன், காதி காட்டன் இரண்டுமே, மிகவும் மெல்லிய நூலிழைகளால் ஆனவை. காலணிகள் அல்லது கொலுசில் புடவை சிக்கினால் நூல் இழுக்கப்பட்டு மொத்த புடவையும் வீணாகிவிடும். அதனால் புடவை வாங்கியதுமே ஃபால்ஸ் வைத்துத் தைப்பது நல்லது.

இந்தப் புடவைகளை குளிர்ந்த சோப்புத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து உடனே அலசி நிழலில் காயவைக்க வேண்டும். இல்லையெனில் புடவையின் சாயம் வெளுத்து ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தெரியும். எப்போதும் புடவையை லேசான சூட்டில் இஸ்திரி செய்யவும்.''