விதவிதமான ஹேர் ஸ்டைல்கள், நாள்தோறும் அப்டேட் ஆகும் ஃபேஷன், புதுப்புது அழகுசாதனப் பொருள்களின் வருகை என ஒவ்வொரு நாளும் அதகளப்படுத்திக் கொண்டே இருக்கிறது அழகுத்துறை.
இத்தகைய அழகுத்துறையில் இருப்பவரா நீங்கள்? உங்கள் திறமைகளை வெளிக்காட்டி சீரியல், சினிமா என அடுத்தடுத்த நகர்வுக்குச் செல்லத் துடிக்கிறீர்களா?

Also Read
உங்களுக்காகவே நடக்க இருக்கிறது `தென்னிந்தியாவின் சிறந்த மேக்கப் கலைஞர் - சாம்பியன்ஷிப் 2023' என்ற மாபெரும் போட்டி. சென்னை, அரும்பாக்கம், நூறடி சாலையில் இருக்கும் ஐஸ்வர்யா மஹாலில் வரும் ஜனவரி 2-ம் தேதி (02/01/2023) நடக்க இருக்கும் இந்த மேக்-அப் போட்டியைத் தவறவிட்டு விடாதீர்கள்.
போட்டி நடுவராக, பிரபல மேக்கப் கலைஞர் வெற்றிவேந்தனும் சிறப்பு நடுவராக இந்தத் துறையில் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் கண்ணன் ராஜமாணிக்கமும் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.
போட்டி நடைபெறும் அரங்கத்தில், கண்ணன் ராஜமாணிக்கத்தின் பயிற்சி செஷனும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, கலைநிகழ்ச்சிகள், பிரபல மேக்கப் கலைஞர்கள், சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்களின் விசிட் என அந்த நாள் மொத்தமும் மேக் - அப்பும் மேக்கப் சார்ந்த விஷயங்களுமாகக் களைகட்ட இருக்கிறது.

முதல் பரிசை வெல்பவருக்கு ரூபாய் 50,000, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூபாய் 30,000, மற்றும் 15,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் உண்டு.
`தென்னிந்தியாவின் சிறந்த மேக்கப் கலைஞர்' என்னும் பெயரைப் பெறத் தயாராகி விட்டீர்களா? போட்டியில் கலந்து கொள்ள 95112 95220, 99943 03049 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.