Published:Updated:

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

ஒப்பனை
பிரீமியம் ஸ்டோரி
ஒப்பனை

ஒப்பனை

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

ஒப்பனை

Published:Updated:
ஒப்பனை
பிரீமியம் ஸ்டோரி
ஒப்பனை

“தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே...

மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே...'' என்று வர்ணிக்கத் தொடங்கிவிடுவோம், கண்ணன் ராஜமாணிக்கம் ஒப்பனையில் மின்னும் பெண்களைப் பார்க்கும்போது.

32 வயதாகும் கண்ணன், மலேசியாவைச் சேர்ந்த பிரபல மேக்கப்மேன். பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவில்தான் என்றாலும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மதுரைக்காரர் இவர்.

தன் ஒப்பனைத் திறனால் சாமானியப் பெண்களுக்குக்கூட நடிகைகளின் முகச்சாயலைக் கொண்டுவந்துவிடுகிறார். `ஆதிபராசக்தி’ ஜெயலலிதாவின் முகஜாடையை, ‘ரீகிரியேஷன் மேக்ஓவர்’ மூலம் மங்கை என்ற பெண்ணுக்குக் கொண்டுவந்திருந்தார். அந்த போட்டோஷூட்டுக்கு சோஷியல் மீடியாவில் செம ரெஸ்பான்ஸ். தற்போது, திரௌபதி, சீதை, ராமர், சிவன், பார்வதி என இதிகாசக் கதாபாத்திரங்களையும் கடவுள்களையும் சாமானிய மக்களைக் கொண்டு உருவம் கொடுத்துவருகிறார். சமீபத்தில் கருமாரியம்மனின் உருவத்தைப்போலவே ஒரு பெண்ணுக்கு மேக்கப் செய்து போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘நிஜ அம்மன் சிலைபோலவே உள்ளது’ என்று மெய்சிலிர்த்தனர் மக்கள்.

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

பிரைடல், புராஸ்தெடிக், ரீகிரியேஷன் உள்ளிட்ட பல்வேறு மேக்கப் முறைகளில் கலக்கிவரும் இவருக்கு, தெற்காசிய நாடுகளில் ரசிகர்கள் ஏராளம். ‘இவர்தான் எனக்கு மேக்கப் போட வேண்டும்’ என்று காத்துக்கொண்டிருக்கும் பெண்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டுகொண்டே செல்கிறது. இவரின் தேதி கிடைக்கவில்லை எனில், இவர் தரும் தேதிக்குத் தன் திருமணத்தையே மாற்றிக்கொள்ளும் அளவுக்குப் பெண்களின் மனதைக் கவர்ந்துள்ளது கண்ணனின் கைவண்ணம்.

ஒரு பக்கம் மணப்பெண்களுக்கு பிரைடல் மேக்கப், மற்றொரு பக்கம் பண்டிகை காலங்களுக்குத் தகுந்தாற்போல ரீகிரியேஷன் மேக்ஓவர் வேலைகள் என பிஸியாக வலம்வந்துகொண்டிருக்கும் கண்ணனிடம் ‘ஹலோ’ சொல்லிப் பேசினேன்.

“நான் மேக்கப் மேனா ஆகுறதுக்கு முன்னாடி, மலேசியாவுல கவர்மென்ட் வேலையில இருந்தேன். கவர்மென்ட் அறிவிக்கிற செய்திகளை ஊடக வசதியில்லாத இடங்கள்ல வாழுற மக்கள்கிட்ட கலை நிகழ்ச்சிகள் வழியா கொண்டு சேர்க்குறதுதான் என் வேலை. இந்த வேலைக்குப் பாட்டு, நடனம், நடிப்பு எல்லாம் தெரிஞ்சிருக்கணும். நடனப்பள்ளியில சேர்ந்து நடனம் கத்துக்கிட்டேன். இந்த நடனப்பள்ளி நடத்துற நடன, நாடக நிகழ்ச்சிகள்ல சிவன், விஷ்ணு, பார்வதின்னு நிறைய வேஷம் போட்டிருக்கேன். இதுக்கான மேக்கப்பை எனக்கு நானே போட்டுப்பேன். உடைகளையும் நானே வடிவமைப்பேன். கொஞ்சம் கொஞ்சமா ஒப்பனைக் கலை மேல ஆர்வம் அதிகமாக ஆரம்பிச்சுது. அந்த உத்வேகத்துல பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சு முறைப்படி சான்றிதழும் வாங்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

வாழ்க்கை நார்மலாதான் போயிட்டு இருந்தது. ஒருநாள் வேலைக்குக் கொஞ்சம் லேட்டா போயிட்டேன். மேலதிகாரி என்னை ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு. மனதளவில் ரொம்பவே உடைஞ்சுபோயிட்டேன். சொந்தமா ஒரு தொழில் பண்ணுனா, இது மாதிரி மத்தவங்ககிட்ட கைகட்டி நிற்கத் தேவையில்லன்னு தோணுச்சு. சஸ்பெண்ட் ஆகி வீட்டுல இருந்த ஒரு மாசத்துல மலேசியாவுல ஒரு கண்காட்சி ஏற்பாடு பண்ணினேன். அந்தக்காலக் கதாநாயகிகள் மாதிரி காஸ்ட்யூம் எல்லாம் ரெடி பண்ணி, சரோஜாதேவி, சாவித்திரி மாதிரியே சில பெண்களுக்கு மேக்கப் போட்டேன். இதுக்கு மலேசிய மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்போதான் முழுநேர ஒப்பனைக் கலைஞரா மாறலாம்னு ஐடியா தோணுச்சு. உடனே என் வேலையை ராஜினாமா பண்ணிட்டு மேக்கப்மேனா மாறிட்டேன். அந்த நேரத்துல அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. குடும்பத்துல பணக்கஷ்டம் வேற. இருந்தாலும் என் முடிவை குடும்பத்துல உள்ள எல்லாரும் ஏத்துக்கிட்டு, சப்போர்ட் பண்ணினாங்க.

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

ஒப்பனைக் கலை தொடர்பான நிறைய கண்காட்சிகளை நடத்தினேன். நான் மேக்கப் செய்த பெண்களோட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்ல பதிவிட்டேன். ஃபாலோயர்ஸ் அதிகமானாங்க. அந்த நேரத்துல கொரோனா லாக்டௌன் அறிவிச்சிட்டாங்க. லாக்டௌன் நேரத்தைப் பயன்படுத்தி ஏதாவது வித்தியாசமா பண்ணலாம்னு தோணுச்சு. என்கிட்டே அழகுக்கலை படிச்சிட்டு இருந்த ஒரு மாணவிக்கு ‘அழகிய தமிழ்மகன்’ ஸ்ரேயா மாதிரி, தாவணி பாவாடை காஸ்ட்யூம் ரெடி பண்ணி ரீகிரியேஷன் மேக்ஓவர் பண்ணிப் போட்டோ ஷூட் எடுத்தோம். இந்த போட்டோஸுக்கு சோஷியல் மீடியாவுல நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்ததா ஒரு பொண்ணுக்கு 3D மேக்கப் மூலமா நயன்தாராவோட முக அமைப்பைக் கொண்டுவந்தேன். ‘காஷ்மோரா’ நயன்தாரா லுக்கை இன்னொரு பொண்ணுக்கு ட்ரை பண்ணினேன். ஐஸ்வர்யா ராய் மாதிரியும் ஒரு பொண்ணுக்கு முகஜாடையைக் கொண்டுவந்தேன். என்னோட ரொம்ப நாள் கனவா இருந்த, ஜெயலலிதா அம்மாவோட `ஆதிபராசக்தி’ கெட்டப்பை ஒரு பொண்ணுக்குக் கொண்டுவந்தேன். `தம்பி... ஜெயலலிதா அம்மாவே உயிர்பெற்று வந்த மாதிரி இருக்கு’ன்னு அ.தி.மு.க கட்சிக்காரங்க எல்லாம் போன் பண்ணி வாழ்த்த ஆரம்பிச்சிட்டாங்க.

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

ஹீரோயின்ஸ் ரீகிரியேஷன் மேக்ஓவருக்கு அடுத்தகட்டமா, ரவிவர்மா ஓவியங்களையும், கடவுள் உருவங்களையும் ரீகிரியேட் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். குட்டி கிருஷ்ணனை யசோதை கொஞ்சுற மாதிரியான ரவிவர்மாவோட ஓவியத்தை எடுத்துக்கிட்டேன். அந்த ஓவியத்துல இருந்த யசோதை மாதிரி ஒரு பொண்ணுக்கும், கிருஷ்ணன் மாதிரி ஒரு குழந்தைக்கும் மேக்ஓவர் பண்ணினேன். இந்தப் போட்டோக்களை கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷலா வெளியிட்டோம். அதே மாதிரி விநாயகர் சதுர்த்திக்கு, பார்வதி தேவி கையில விநாயகர் குழந்தையா தவழ்றது போல ஒரு மேக்ஓவர் போட்டோஷூட் பண்ணினோம். கிறிஸ்துமஸுக்கு மேரி மாதா போல ஒரு பொண்ணுக்கு மேக்கப் பண்ணியிருந்தேன்.

சிவன்-பார்வதி தேவிக்கு இடையேயான அன்பை மேக்ஓவர் மூலமா தத்ரூபமா கொண்டுவரணுங்குறது என்னோட ரொம்ப நாள் ஆசை. பல சிரமங்களை மீறி சிவராத்திரிக்கு அப்படி ஒரு போட்டோஷூட் பண்ணியிருந்தோம். ரொம்ப நல்லாவே வந்திருந்தது. ராமாயணத்தை ஒரு கான்செப்டா எடுத்து ராமநவமிக்கு ஒரு மேக்ஓவர் பண்ணினோம். ராமர்-சீதையின் வனவாசம், சீதையை ராவணன் அபகரிச்சிட்டுப் போறது, லக்‌ஷ்மணன் சீதையை மீட்கும் காட்சின்னு எல்லாத்தையும் சேர்த்து ஒரு புகைப்படத் தொகுப்பை வெளியிட்டோம். மலேசியாவுல அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. இங்க உள்ள பள்ளிகள்ல ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ராமாயணத்தைச் சொல்லிக்கொடுக்க, இந்தப் புகைப்படத் தொகுப்பைப் பயன்படுத்துறாங்க. இது எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரம்.

கடந்த ஆடிமாசத்துக்குக் கருமாரியம்மன் ரீகிரியேஷன் பண்ணினோம். கருவறைல அம்மன் உயிரும் உடலுமா உட்கார்ந்திருக்குற மாதிரியான மேக்ஓவர். டீமா சேர்ந்து ரொம்பவே மெனக்கெட்டோம். இந்த ரீகிரியேஷனை சிற்ப சாஸ்திரங்களை அடிப்படையாக் கொண்டு ஆகம முறைப்படி உருவாக்கினோம். அம்மனுக்காக மாடல் செலக்‌ஷனுக்கு நிறைய பெண்களுக்கு ட்ரையல் மேக்கப் போட்டுப் பார்த்தோம். கடைசியில என் தங்கை லதா மாணிக்கத்துக்கு அது பொருத்தமா இருந்ததால, அவங்களையே மாடல் ஆக்கிட்டோம். நாங்க எதிர்பார்த்ததைவிட ரொம்ப தத்ரூபமா வந்துருந்தது அம்மனோட உருவம்.

நார்மல் பொண்ணுக்கு நயன்தாரா லுக்!

சமீபத்துல நம்ம எல்லாருக்கும் மத்தியில ரொம்ப ஆவலை ஏற்படுத்தினது மணிரத்னம் சார் இயக்குற ‘பொன்னியின் செல்வன்’ படம். பர்சனலா நான் பொன்னியின் செல்வனோட தீவிர வாசகன். ரசிகனும் கூட. இந்தப் படத்துல குந்தவையா நடிக்கிற த்ரிஷா எந்த லுக்ல இருப்பாங்கன்னு நானே கற்பனையா ஒரு பொண்ணுக்கு மேக்ஓவர் பண்ணியிருந்தேன். பொன்னியின் செல்வன் வாசகர்கள் நிறைய பேர் பாராட்டு தெரிவிச்சிருந்தாங்க. ராமாயணம் மாதிரியே மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் கான்செப்ட்களைத் தொகுத்து மேக்ஓவர் போட்டோஷூட் பண்ணணுங்குறது அடுத்த பிளான். அதுக்கான வேலைகள் நடந்துட்டிருக்கு” என்று முடிக்கும் கண்ணனின் கண்களில் அடுத்த படைப்புக்கான தேடல்.

கண்ணன்... நீ மனிதர்களின் முகங்களில் கடவுள்களை வரையத் தெரிந்த ஒரு நவீன கவிஞன்!